வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சங்கனூர் கேணல் ஆக்ரமிப்பு அக்கார்டி துருவரி இரு புறம் சாலை அமைத்தல் கோவை மாநகர் வெள்ளம் இருந்து காப்பாற்றப்படும் . மற்றும் கோவை நகரம் போக்குவரத்து நெரிசல் கொறையும்
கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருந்தது. மதியம் 2 மணி முதல் கோவையில் பல பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது. காந்திபுரம், உக்கடம், கலெக்டர் அலுவலகம், மாநகர பகுதிகள் ஆர்எஸ்புரம்,குனிமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதித்தது. ( பிற்பகல் 3:30 மணியளவு) மழை அளவுஆர்.எஸ்.புரம் - 7.7 செமீகுனியமுத்துார் - 4.98 செமீசாய்பாபா காலனி - 4.28 செமீவடவள்ளி- 4.76 செமீவெள்ளலுார்- 4.7 செமீஒத்தக்கால் மண்டபம்- 4.1செமீமதுக்கரை- 1.8செமீகாரமடை- 1.5செமீகவுண்டம்பாளையம் -1.5செமீஒண்டிபுதுார்- 2.34செமீகாந்திபுரம்- 7.74செமீசிங்காநல்லுார்- 2.0செமீவெள்ளப்பெருக்குகனமழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து, அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது.பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சங்கனூர் கேணல் ஆக்ரமிப்பு அக்கார்டி துருவரி இரு புறம் சாலை அமைத்தல் கோவை மாநகர் வெள்ளம் இருந்து காப்பாற்றப்படும் . மற்றும் கோவை நகரம் போக்குவரத்து நெரிசல் கொறையும்