வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை: 'தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று (டிச.,14) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், நேற்று அடைமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், 11 மாவட்டங்களில் இன்று (டிச.,14) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:1. தஞ்சாவூர்,2. திருவாரூர்,3.நாகப்பட்டினம்,4. மயிலாடுதுறை,5. புதுக்கோட்டை,6.கன்னியாகுமரி,7.திருநெல்வேலி,8. தூத்துக்குடி9. ராமநாதபுரம்,10. தென்காசி,11. விருதுநகர்,
மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்