மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆக்கிரமிப்பு அகற்றம்
15-Jul-2025
ஆடி, 18 எனும் ஆடிப் பெருக்கு பண்டிகையான நாளை, மேட்டூர் காவிரியாற்றில் ஏராளமானோர் நீராடி வழிபடுவர். அதற்கேற்ப விடுமுறை நாள் என்பதால், கூட்டம் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., 4 இன்ஸ்பெக்டர், 18 எஸ்.ஐ., 250 போலீசார், 150 ஊர்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காவிரி பாலம், ஒர்க்ஷாப் கார்னர், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். 70 கேமராக்கள் மூலமும் கண்காணிக்க உள்ளனர்.கார், வேன், இருசக்கர வாகனங்களை, மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மின் வாரிய காலி நிலம், மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், பொன்னகர் நகராட்சி துவக்கப்பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணியர், பக்தர்கள் நீராட மேட்டூர் காவிரி படித்துறை, திப்பம்பட்டி, கொளத்துார் சென்றாய பெருமாள் கோவில் எதிரே உள்ள அணை நீர்பரப்பு பகுதி, மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் என, 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஆக்கிரமிப்பு அகற்றம்மேட்டூர் நகராட்சி அலுவலர்கள் நேற்று காலை, அணை முனியப்பன் கோவில் அருகே சாலை இருபுறமும் உள்ள கடைகளுக்கு சென்று மேற்கூரைகளை அகற்ற அறிவுறுத்தினர்.இல்லை எனில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்படும் என, வியாபாரிகளை எச்சரித்தனர். தொடர்ந்து வியாபாரிகள், பக்தர்கள் காவிரியாற்றுக்கு செல்லும்படி அவர்களின் சிரமத்தை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.
15-Jul-2025