வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பனிபொழிவால் சில செடிகள் குறிப்பாக தேயிலை செடிகள் உதிரும் .
ஓரிரு நாட்கள் ரம்மியமாக இருக்கும் அதன் பின் எப்பொழுது பனிக்காலம் போகும் என்று தோன ஆரம்பித்து விடும்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் அக்., மாதம் இறுதி வரை நீர் பனி தென்படுகிறது. நவ., மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைபனி பொழிவு துவங்கும். நடப்பாண்டு, சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. சில நாட்களாக வெயில் காலநிலை நிலவியது.கடந்த வாரம் முதல், ஊட்டியில் அவ்வப்போது உறைபனி தென்பட்டது. குறைந்த பட்ச வெப்பநிலை, 5 டிகிரி செல்ஷியசாக இருந்து. நேற்று காலை, நகரின் பல பகுதிகளில், குறிப்பாக புறநகர் பகுதிகளான காந்தள், தலைக்குந்தா, எச்.பி.எப்., சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதி புல்வெளிகளில் உறைப்பனி படர்ந்து காணப்பட்டது. குறைந்த பட்சம் 1 டிகிரி
இதனால், ஊட்டியில் நேற்று அதிகபட்சம், 17 டிகிரி; நகர பகுதியில், குறைந்தபட்சம், 3.2 டிகிரி; புறநகர் பகுதிகளில் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. பனி தாக்கத்தால் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. அதிகாலையில் தேயிலை தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.ஊட்டி, அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது. குளிரை தாக்குப்பிடிக்க, வெம்மை ஆடைகளை சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்கள் அணிந்து சென்றனர்.
பனிபொழிவால் சில செடிகள் குறிப்பாக தேயிலை செடிகள் உதிரும் .
ஓரிரு நாட்கள் ரம்மியமாக இருக்கும் அதன் பின் எப்பொழுது பனிக்காலம் போகும் என்று தோன ஆரம்பித்து விடும்.