உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் கட்சிகளிடம் செக்யூரிட்டி டிபாசிட் வசூலிக்க ஐகோர்ட் அறிவுரை

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் கட்சிகளிடம் செக்யூரிட்டி டிபாசிட் வசூலிக்க ஐகோர்ட் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்த விரும்பும் அரசியல் கட்சிகளிடம் இருந்து, பாதுகாப்பு வைப்புத்தொகை வசூலிக்கவும், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையிலான விதிமுறைகளை வகுக்கவும், காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை, எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து அனுமதி வழங்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடக்கோரி, அக்கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 23 நிபந்தனைகள் இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, த.வெ.க., தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி வாதாடியதாவது: திருச்சியில் நடந்த பிரசாரத்துக்கு, மாநகர காவல் துறை 23 நிபந்தனைகளை விதித்தது. கர்ப்பிணியர், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளக்கூடாது. எவ்வழியே சென்னை திரும்ப வேண்டும்; எத்தனை வாகனங்கள் வர வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதித்தது. இதுபோல நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளும், மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படாத நிபந்தனைகளும் த.வெ.க.,வுக்கு மட்டுமே விதிக்கப் படுகின்றன. நிகழ்ச்சிக்கு வருபவர்களை வர வேண்டாம் என எப்படி சொல்ல முடியும்? நிகழ்வுகளை நடத்த காவல் துறையிடம் இருந்து அனுமதி பெறுவதில், தேவையற்ற சிரமங்களை எதிர்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது: அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படும் நிபந்தனைகள் தானே இவை; முழுமையாக போக்குவரத்து முடங்கினால், பொது மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? கட்டுப்படுத்த வேண்டும் யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல. பொதுக் கூட்டம் நடத்தினாலும், சட்டத்துக்கு உட்பட்டே நடத்த வேண்டும். தலைவராக இருப்பவர்கள் தான் கூட்டத்தை கட்டுப் படுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துக்களுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லையெனில், இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும். கர்ப்பிணியர், மாற்றுத் திறனாளிகள் வர வேண்டாம் என கோரிக்கை விடுத்து, மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே. இவ்வாறு நீதிபதி கூறினார். காவல் துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, ''எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படவில்லை; நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது,'' என கூறி, கடந்த 13ம் தேதி திருச்சியில் நடந்த பிரசாரத்தில், த.வெ.க., தொண்டர்களின் செயல்கள் தொடர்பான புகைப்படங்களை தாக்கல் செய்தார். அதை பார்வையிட்ட நீதிபதி, 'இதுபோல உயரமான இடங்களில் ஏறி நின்று, ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இதை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா' என கேள்வி எழுப்பினார். பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பெரியளவில் ஏற்கனவே நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டங்களில், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவங்களும், அதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிகழ்வுகளும் உண்டு. இவற்றை கருத்தில் வைத்து, இந்த விவகாரத்தில் அரசு முறையான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. பெரிய அளவிலான பொதுக் கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம், அப்பாவிகளின் சொத்துக்கள் எளிதான இலக்காகும். இதை தடுக்க சட்டம் உள்ளது. இருப்பினும், இத்தனை ஆண்டுகளாக அது முறையாக செயல் படுத்தப்படவில்லை. விதிமுறைகள் தேவை எனவே, பெரியளவில் நடத்தப்படும் கூட்டங்களின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பையும் ஈடுசெய்ய, அரசியல் கட்சிகளிடம் இருந்து பாதுகாப்பு தொகை வசூலிக்கும் வகையில், விதிமுறைகளை வகுக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக் கூடிய வகையிலான விதி முறைகளை காவல் துறை வகுக்க வேண்டும். இது தொடர்பாக காவல் துறை பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கூத்தாடி வாக்கியம்
செப் 19, 2025 15:04

இது ஜாதி மத ஊர்வலத்திற்க்கும்ம்ம் தேவை


V Venkatachalam
செப் 19, 2025 11:11

நீதிபதிகள் ஏன் தனியாக புலீஸ் க்கு உத்தரவு போடுகிறார்கள்? கவர்மெண்ட் க்கு தானே போட வேண்டும்? கவர்மெண்ட் தானே இப்போ புதுசா ஆம்புலன்ஸ் ஐ கூட்டத்துக்குள்ள விட்டு ரகளை பண்ண ஆரம்பிச்சு இருக்கு. முன்னாடி திருட்டு பணம் கொண்டு போக ஆம்புலன்ஸை பயன் படுத்தினானுங்க. இப்போ எதிர் கட்சி கூட்டத்துக்குள் ஓட்டி விட்டு ரகளை பண்றானுங்க. இனிமே ஆம்புலன்ஸ் சர்வீஸை இரண்டா பண்ணனும். ஒண்ணு சிங்கிள் பர்பஸ். இரண்டு மல்டி பர்பஸ். கூட்டத்துக்கு டெபாஸிட் கால்குலேட் பண்ண மல்டி பர்பஸ் ஆம்புலன்ஸ் ரகளைக்கு உண்டான செலவையும் சேர்த்துக்கணும். இப்போ உள்ள நெலமையை கருத்தில் கொண்டு அதிக பட்ச டிபாசிட் போடணும். அப்புடி பண்ணினா எடப்பாடிக்கு கூடும் செம கூட்டத்தையும் விஜய்க்கு கூடும் செமத்தியான கூட்டத்தையும் கட்டுப்படுத்தலாம். திராவிடியா மூடல் அரசுக்கு கெடச்ச அருமையான சான்ஸ். விட்டுடப்படாது.


ப.சாமி
செப் 19, 2025 10:49

பாதுகாப்பு தொகை கட்டும் விஷயத்தில் அணைத்து கட்சிகளும் ஒர் அணியில் நின்று எதிர்ப்பார்கள்.


திகழ்ஓவியன்
செப் 19, 2025 08:33

மேடையில் தலைவர்கள் /ஆட்கள் அதிகம், எதிரே பார்வையாளர்கள் குறைவு உள்ள கட்சிக்கு கவலை இல்லை


GMM
செப் 19, 2025 07:19

போலீஸ் காவலுக்கு கெட்டிக்காரன் என்ற பெயர் வாங்க வேண்டும். விதிமுறைகள் வகுப்பது, அபராதம் வசூலிப்பது, மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நிர்வாகம் புரிவது போலீஸ் வேலைக்கு ஆகாது. சட்ட ஒழுங்கு பராமரிக்க அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, பராமரிப்பு கட்டணம் கலெக்டர் அலுவலகத்தில் ஒருவருக்கு 10 ரூபாய் ஒரு மணிக்கு. தேர்தல் ஆணையம் வசம் டெபாசிட் கட்சி நிதியில் 25 சதவீதம். போலீஸ் திராவிட இயக்கம் வந்து முதல் குற்றவாளிகளை கண்காணிக்க பயிற்சி குறைந்து வருகிறது. உடல் தகுதி சிலருக்கு மோசம். நீதிமன்ற அறிவுரையை கட்சிகள், தலைமை செயலர் கேட்க வேண்டும்.


MUTHU
செப் 19, 2025 07:15

ஏற்கனவே போலீஸ்காரர்களும் உள்ளூர் நிர்வாகமும் அனுமதி பாதுகாப்பு என்று எக்கச்சக்க பணம் வசூலித்துவிடுவார்கள். இதில் இது வேறா?


Natarajan Ramanathan
செப் 19, 2025 07:13

கூட்டத்திற்கு எத்தனைபேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களோ அத்தனை ரூபாய் பாதுகாப்பு கட்டணமாக செலுத்த சட்டம் வகுக்கவேண்டும்.


Kasimani Baskaran
செப் 19, 2025 03:40

புதுப்புது தத்துவங்கள் தீம்க்கா தவிர அனைத்துக்கட்சிகளுக்கும் பொருந்தும் போல..


திகழ்ஓவியன்
செப் 19, 2025 08:32

உங்களுக்கு கவலை இல்லை ஏன் என்றால் ஆட்கள் வரப்போவதில்லை , ஆகவே அடுத்தவரை கிண்டல் செய்கிறீர்கள்


Srinivasan Narasimhan
செப் 19, 2025 02:43

நமக்கு உள்ள பெரிய பிரச்சணை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பொது ஜணங்களுக்கு மிக மிக பிரச்சணை கொடுப்பது மீட்டிங் போராட்டம் ஊர்வளம் பொன்ற விஷயத்தில் ஜணநாயகம் எனிற போர்வயில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை