உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : 'லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தாமதப்படுத்தும் வகையில் அதிகாரிகள் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றனர்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.கரூர் மின் வாரியத்தில் பணியாற்றியவர் சரவணன். இவர் உட்பட மூன்று பேர், சக தொழிலாளர் ஒருவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, 2011ல் கைதாகினர். சரவணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க அவருக்கு 'மெமோ' அனுப்பப்பட்டது.அவர், '10 ஆண்டுகள் கழித்து 2021ல் மெமோ அனுப்பி உள்ளனர். இது சட்டவிரோதம். எனக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.மின்வாரியம் தரப்பில், 'மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் உரிய ஆவணங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்ற வழக்கில் சிக்கும் மின் வாரிய ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில், ஒரே மாதிரியான கொள்கை தான் கடைப்பிடிக்கப்படுகிறது.'மின்வாரியத்தில் 225 ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில், 56 பேருக்கு மட்டும் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேவையான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கோரப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

'குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை' என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், லஞ்ச வழக்குகளில் சிக்கியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர். இதை நீதிமன்றம் கவனித்து வருகிறது.சில அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை தாமதப்படுத்தி, லஞ்ச வழக்கில் சிக்குபவர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றனர். இதை, அரசு கவனிக்க வேண்டும். தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், அந்தந்த துறை ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொடரலாம். இதிலும் தாமதம் ஏற்பட காரணமான அதிகாரி குறித்து, துறை தலைவரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, 2018ல் ஒப்புதல் கோரப்பட்டது; 2019ல் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதை தாமதமாக கருத முடியாது. தாமதமாக கருதினாலும் லஞ்ச புகார் தீவிரமானது என்பதால், மனுதாரருக்கு அனுப்பிய மெமோவை ரத்து செய்ய முடியாது. மனுதாரர் உரிய விசாரணையை சந்திக்க வேண்டும். இவ்வழக்கை கரூர் நீதிமன்றம் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
மே 29, 2025 19:44

சின்ன வழக்கையும் வாய்தா குடுத்து, ஒத்தி வெச்சு 20 வருஷம் ஓட்டி ரிட்டையர்டு ஆயிடுவாங்க. அப்புறம் வேதனை தெரிவிப்பாங்க.


S.V.Srinivasan
மே 29, 2025 11:02

கமலஹாசன் ராஜ்ய சபாவில் போய் என்னத்த புதுசா கிழிக்கபோறாரு . மற்ற எம் பிக்களை போல் ஜால்ரா அடிச்சுட்டு வருவாரு. உருப்படியா வேற ஒன்னும் இருக்காது.


Rengaraj
மே 29, 2025 11:01

இது காலகாலமாக இங்கு நடக்கிறது. அதிகாரிகளுக்கு தக்க தண்டனை தருவதன் மூலமே இது சரிசெய்யப்படும். லஞ்ச வழக்கில் சிக்கும் உயர் அதிகாரிகளை முதல்வர் அல்லது துறை அமைச்சர் உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். துரையின் பிற அதிகாரிகள், பணியாளர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினார்கள் என்றால் அவர்களும் உடனே டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும். துறை ரீதியான விசாரணை நடந்து அதன் அறிக்கையின் பேரில் அவரை சேர்க்கலாமா கூடாதா என்று துறை அமைச்சரோ, முதல்வரோ அல்லது உயர் அல்லது நீதிமன்றமோ முடிவு செய்யலாம். . அமைச்சரே இதில் சிக்கியிருந்தால் , அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யவேண்டும். சட்டவிதிகள் இதற்கேற்றபடி மாற்றம் செய்யப்படவேண்டும்.


Sriram Ranganathan
மே 29, 2025 11:00

ஊழல் செய்யும் நீதிபதிகளை மற்ற நீதிபதிகள் காப்பாற்றுகிறார்களே அது பரவாயில்லையா??


S.V.Srinivasan
மே 29, 2025 10:57

திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல். தலை முதல் வால் வரை அழுக்கு கரை பிடித்த கரங்கள். மக்கள் 2026-இல் பாடம் புகட்ட வேண்டும். செய்வீர்களா?


Rasheed Ahmed A
மே 30, 2025 20:26

ஊழல் செய்யும் அனைவரைப்பற்றியும் விமர்சனம் செய்யவும். திராவிட மாடல் ஆட்சியில் மட்டுமே ஊழல்? பிரதமரே ஊழல் குற்றம் சாட்டிய நபர், அவரது கட்சியில் இணைந்தவுடன் துணை முதல்வர் பதவி. இது பற்றியும் கருத்து தெரிவிக்கவும்.


Narasimhan
மே 29, 2025 10:50

என்னவோ நீதிபதிகள் சந்நியாசிகள் போல் என்று நினைக்கிறாரோ?. நீதி விலைக்கு வாங்கப்படுவது அப்பட்டமாக தெரிகிறது


V GOPALAN
மே 29, 2025 10:36

Sun family get advance Intimation from ED NIA GST raid .


சுந்தரம் விஸ்வநாதன்
மே 29, 2025 09:58

ஒரு கொள்ளைக்கும்பலில் ஒரு கொள்ளையன் பிடிபட்டால் மற்ற கொள்ளையர்கள் பிடிபட்ட கொள்ளையனை எப்படியாவது காப்பாற்றத்தான் முயற்சிப்பார்களே அல்லாமல் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்ற அடிப்படை கூட தெரியாத நீதிபதியா? என்ன இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை ?


Padmasridharan
மே 29, 2025 09:39

எங்கும் இலஞ்சம் எதிலும் லஞ்சம். இந்தியன் தாத்தாவாக நடித்த கமல் அரசியலில் இதற்கு ஒரு முடிவு எடுப்பாரா.. இல்லையென்றால் மற்ற நடிகர்கள் மாதிரி வெறும் வாய் பேச்சு மற்றும்


சுந்தரம் விஸ்வநாதன்
மே 29, 2025 10:12

முதலில் உங்கள் கமலஹாசன் என்ற பார்த்தசாரதியை தான் வாங்கும் உண்மையான சம்பளத்துக்கு வருமான வரி கட்ட சொல்லுங்கள்.


Narayanan
மே 29, 2025 10:18

கமல் அவரின் தனிப்பட்ட சௌகரியங்களுக்கு போகிறார். மேலும் 40 எம்பிக்கள் என்ன சாதித்தார்கள்? இவர் சாதிக்க . கமல் போவது திமுக எம்பி தான் . திமுகவின் கருத்தைத்தான் முடிந்தால் சொல்லப்போகிறார் .


VENKATASUBRAMANIAN
மே 29, 2025 07:47

10ரூ பாலாஜி இதில் கில்லாடி. மொத்த மின்சார வாரியம் சீரமைக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை