உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை வெளியிட தடை; ஐகோர்ட் கிளை உத்தரவு

என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை வெளியிட தடை; ஐகோர்ட் கிளை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சிறந்த பல்கலை, கல்லூரி என உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை நடப்பாண்டு வெளியிட ஐகோர்ட் கிளைஇடைக்கால தடை விதித்தது.தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு வெளியிடும் தரவரிசை பட்டியலில், இடம்பெறும் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லை என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு இன்று (மார்ச் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறந்த பல்கலை, கல்லூரி என உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை நடப்பாண்டு வெளியிட ஐகோர்ட் கிளை நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மத்திய கல்வி துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Oru Indiyan
மார் 21, 2025 00:22

என் ஐ ஆர் எப் வெளியிடும் பட்டியலில் பல தமிழ்நாடு தனியார் மருத்துவ கல்லூரிகள் இருக்கும். மிக கொடுமை அது. இந்த ரேங்க் வைத்து ஒரு கல்லூரி இப்போது வருடத்திற்கு 30 லட்சம் பீஸ் வாங்குகிறது மற்றவர்கள் வருடத்திற்கு 25 லட்சம் வாங்குகிறார்கள். உம் . ஏமாற்று வேலை.


S. Venugopal
மார் 20, 2025 22:27

என் ஐ ஆர் எஃப் இல் ஒரு அம்சம் பெர்ஸப்ஷன் இந்த அளவுகோலுக்கு அளிக்கப்படும் மதிப்பெண்களுக்கு பல ஏஜென்ட்கள் உதவுகிறார்கள் என்று ஒரு கருத்து கல்வியாளர்களிடம் உளாவுகிறது. தற்பொழுது என் எ சி சி ல் வெளிச்சத்துக்கு வந்த ஊழலை பார்த்தால் தரம் நிர்ணயம் செய்பவர்களின் தரத்தினை முதலில் அறியவேண்டும் என்று தோன்றுகிறது.


Petchi Muthu
மார் 20, 2025 22:21

பல்கலைக்கழகத்தின் இலட்சணங்கள் வெளிவந்திடக் கூடாது என்ற பயமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை