உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை முடிக்க கெடு உயர்நீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை முடிக்க கெடு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:அப்சல் இந்தியா நிதி நிறுவன மோசடி வழக்கை 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.அப்சல் இந்தியா மற்றும் அதன் பிற சகோதர நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து டிபாசிட் வசூலித்தது. முதிர்வு தொகையை அதிக வட்டியுடன் திருப்பித் தருவதாக உறுதியளித்தது. அவ்வாறு செய்யாமல் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக 2017 ல் நிறுவனம் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையை விரைவுபடுத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி பி.புகழேந்தி: டான்பிட் சட்டப்படி 1249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 166 டிபாசிட்தாரர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். முடக்கிய சொத்துக்களில் 39 சதவீதம் மட்டுமே ஏலம்விடப்பட்டு, வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2012 முதல் 2017 ஆகஸ்ட்வரை ரூ.230.97 கோடி டிபாசிட் தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளது.மோசடி நிறுவன சொத்துக்களை முடக்கி ஏலத்திற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய ஐ.ஏ.எஸ்.,அந்தஸ்திலான அதிகாரி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியை அதிகாரியாக நியமிக்க அரசு பரிசீலிக்கலாம் என இந்நீதிமன்றம் 2023ல் உத்தரவிட்டது. இதை பரிசீலிக்க அரசு முயற்சி எடுத்ததா என்பது தெரியவில்லை. இவ்விவகாரத்தை அரசு சரியான மனநிலையில் கையாளும் என இந்நீதிமன்றம் நம்புகிறது.இவ்வழக்கு 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் கூறும் காரணத்தை ஏற்க விரும்பவில்லை.6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை