உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெருங்கிய உறவினர் இறுதி சடங்கில் விசாரணை கைதிகள் பங்கேற்க அனுமதி

நெருங்கிய உறவினர் இறுதி சடங்கில் விசாரணை கைதிகள் பங்கேற்க அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிறையில் உள்ள விசாரணை கைதிகள், தங்களது நெருங்கிய உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்க, சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி அளிக்கும் வகையில், தமிழக உள்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி பகுதியை சேர்ந்தவர் பரக்கத்துல்லா. இவர், 'உபா' எனும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில், 2022 செப்., 22ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், 2023ல் என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது, பரக்கத்துல்லா புழல் சிறையில் உள்ளார். அவரது தாய், உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க, தன் சகோதரருக்கு, 10 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிடக்கோரி, பரக்கத்துல்லா சகோதரி சரிகத்து நிஷா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, விடுமுறை நாளான நேற்று அவசரமாக விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.ராஜாமுகமது, தேசிய புலனாய் நிறுவனம் சார்பில் சிறப்பு பிளீடர் ஆர்.கார்த்திகேயன், தமிழக அரசு சார்பில் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர் வாதிட்டனர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சிறையில் உள்ள நபரின் தாய், ஏப்ரல், 18ல் அதிகாலை மரணம் அடைந்துள்ளார். அவரின் இறுதி சடங்குகள், 19ம் தேதியான இன்று ராமநாதபுரத்தில் நடக்கின்றன. தமிழக தண்டனை இடைநிறுத்த விதிகளின் கீழ், தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்க, சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.ஆனால், விசாரணை கைதிகளுக்கு விடுப்பு அளிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. இதற்கு நீதிமன்றங்களை தான் நாட வேண்டிய நிலை உள்ளது. நீதிமன்ற காவலில் உள்ள விசாரணை கைதிகளுக்கு, அரசு அல்லது சிறை அதிகாரிகள், விடுமுறை அளிக்கும் வகையில் விதிகள் இல்லாததால், அவர்களால் அனுமதி வழங்க முடியாது.விசாரணை கைதியின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறந்த நபரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதற்கான உரிமை உள்ளது என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, விசாரணை கைதிகளின் தாய், தந்தை, கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவுகள் மரணம் அடைந்தால், அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்க, சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கும் வகையில், தமிழக உள்துறை செயலர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, பரக்கத்துல்லாவை உடனே சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவிக்க வேண்டும். வரும் 20ம் தேதி வரை, மூன்று நாட்கள் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில், சிறை அதிகாரிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M R Radha
ஏப் 19, 2025 08:59

வர வர ஓர் வரைமுறையில்லா தீர்ப்புகள்/ஜாமீன்கள்/வாய்தாக்கள்/மிக ஒழுங்கீனம்/மோசமான கோர்ட் நடவடிக்கைகள். வெளெங்கிடும் போ.


GMM
ஏப் 19, 2025 08:47

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்க அதிகாரம் . விசாரணை கைதிகளுக்கு விடுப்பு அளிக்கும் அதிகாரம் இல்லை. தக்க காரணம் இருக்கும்.? தாய், தந்தை இறுதி சடங்கு முக்கியம். இறுதி சடங்கு பகலில் சில மணி நேரம். எதற்கு 10 நாட்கள் மனு? விசாரணை கைதிக்கு பாதிக்க பட்டவரால் தொல்லை வரலாம். தப்பிக்க முயற்சி செய்யலாம். இதற்கு வழக்காடும் வக்கீல் தான் பொறுப்பு என்று நிர்ணயிக்க வேண்டும். அவருக்கு தான் உண்மைகள் தெரியும். உள்துறை செயலர் சுற்றறிக்கை தன் துறை ஊழியர்களுக்கு மட்டும் தான் தயாரிக்க முடியும். சட்ட எண், விதி இல்லாமல் முழு தமிழகத்துக்கும் தயாரிக்க முடியாது. கவர்னர் ஒப்புதல் அல்லது சிறப்பு அதிகாரம் கொண்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்து முடித்து விடலாம்.


Kasimani Baskaran
ஏப் 19, 2025 06:38

தண்டனை பெற்ற ஒரு கேடியின் தண்டனையை நிறுத்தி வைத்த பொழுது முழுகாத குடி விசாரணை கைதிக்கு நாலு நாள் விடுமுறை கொடுப்பதால் மூழ்க முடியாது.


nagendhiran
ஏப் 19, 2025 06:24

அதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்து இருக்கலாம்? கறி சோறு? பரோல்? போன்? பீடி ? கஞ்சா? விடுமுறை? இப்ப நெருங்கிய உறவினர்களுக்கு பரோல்? சூப்பர் பிறகு எப்படி கைதிகளுக்கு திருந்த மனசு வரும்?


ManiK
ஏப் 19, 2025 04:47

இனிமே விசாரணை கைதிகளுக்கு நெஞ்சு வலி குறைந்து அவர்களின் நெருங்கிய சொந்தங்கள் சந்தேகமாக உலகைவிட்டு நீங்குவது அதிகமாகும். நீதிபதிகளுக்கு சம்மர் வகேஷன் போகனும் போல... பொருப்பில்லாத தீர்ப்பு.


மீனவ நண்பன்
ஏப் 19, 2025 05:31

மனிதாபிமானமில்லா கருத்து ..மனைவி ok துணைவி அவர்களின் பெற்றோர் குழந்தைகள் நெருங்கிய சொந்தமா?


சமீபத்திய செய்தி