உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொந்த செலவில் பள்ளிக்கு கழிப்பறை; தாசில்தாருக்கு ஐகோர்ட் உத்தரவு

சொந்த செலவில் பள்ளிக்கு கழிப்பறை; தாசில்தாருக்கு ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறிய, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார், அவரது சொந்த பணத்தில், அரசு பள்ளியில் சேதமடைந்த கழிப்பறையை கட்டித் தர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவை சேர்ந்தவர் ரோஜா. இவர், கணவாய்புதுார் கிராமத்தில் உள்ள, 1.26 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி, காடையாம்பட்டி தாசில் தாரிடம், 2020 டிச., 23ல் விண்ணப்பம் செய்தார். அவரது விண்ணப்பத்தை நிராகரித்து, கடந்த 2021 அக்., 12ல் தாசில்தார் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, ரோஜா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி, கடந்த ஆண்டு டிச., 10ல் தாசில்தாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சேலம் கலெக்டர், மேட்டூர் ஆர்.டி.ஓ., காடையாம்பட்டி தாசில்தார் ஆகியோருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில், ரோஜா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியமாக அணுகி உள்ளனர் என்பதற்கு, இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த உத்தரவுகள், கருத்தில் கொள்ளப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றத்தின் மாண்பும், கண்ணியமும் குறைக்கப்படுவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள, காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கழிப்பறையை இடித்துவிட்டு, தாசில்தார் நாகூர் மீரா ஷா, தன் சொந்த செலவில், கட்டி கொடுக்க வேண்டும்.அந்த கழிப்பறைக்கு தொடர்ச்சியாக, தண்ணீர் வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய, ஒரு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். கழிப்பறையை அரசு பணத்தில் கட்டக் கூடாது. கலெக்டர், மற்றொரு அதிகாரியை நியமித்து, மனுதாரர் ரோஜா மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து, ஜன., 2ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sandeep Kumar
டிச 20, 2025 07:27

நல்ல தீர்ப்பு. மேலும் அந்த கழிவறை கட்டுமானம் உறுதியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


V Venkatachalam, Chennai-87
டிச 19, 2025 18:26

டி எம் கே குடுக்குற தைரியம் தான் இந்த மாதிரி ஆட்கள் நடந்து கொள்ள காரணம். இப்போ டி எம் கே காரனுங்களே கள்ள பணத்தை வைத்து கட்டி விடுவான்கள். கொள்கை பரப்பு தாசில்தாருக்கு ஒரு நயா பைசா செலவு கிடையாது. அது மானம் போயிட்டே. அது என்னவாம். அது போனா போகட்டும். துட்டு போவலியே. அது போதுமே.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 12:05

கள்ளச்சாராய சாவுகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து குடும்ப ஆட்சி கொடுக்கலாமா >>>>


Sitaraman Munisamy
டிச 19, 2025 10:22

இந்த ஆட்சியில் ஒரு தாசில்தார் கூட நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர் .இது சரியல்ல . குறைந்தது வாரம் ஒரு முறை அரசு அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கின்றனர் . அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் இப்படித்தான் மீண்டும் மீண்டும் நடந்து கொள்வார்கள் .


A R Balakrishnan
டிச 19, 2025 09:59

மிக மிக நல்ல தீர்ப்பு.வாழ்த்துகள் நீதிபதி அவர்களே.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 19, 2025 08:18

தாசில்தார் அந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இவர்களிடம் லஞ்சம் வாங்கி அதிலே கட்டி கொடுப்பாரா?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 12:03

ஏன் நீங்கல்லாம் அப்பழுக்கற்றவர்களா >>>>


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 13:50

ஹஜ் விடுதி கட்டப்போறது பெரும்பான்மை மக்களின் வரிப்பணத்தில்தானே >>>> வக்ப் வாரியமா கொடுக்குது


duruvasar
டிச 19, 2025 08:01

இவனுகளுக்கு சம்பளம் பத்தவில்லை என போராட்டம் வேறு .


அப்பாவி
டிச 19, 2025 06:24

கூறுகெட்ட ஜென்மங்கள்...


D.Ambujavalli
டிச 19, 2025 06:17

'கோர்ட் என்ன. செய்துவிடும்? அவர் பாட்டுக்கு தீர்ப்பு கொடுக்கட்டுமே, ஆளும் கட்சி எங்களுக்கு ஆதரவாக உள்ளவரை நாங்கள் எந்த கோர்ட்டையும் மதிக்க மாட்டோம்' என்ற ஆணவத்துக்கு அதிரடி இதுவரை சேர்த்த லஞ்சப்பணத்தில் கொஞ்சத்தைக் கிள்ளி கழிப்பறை, நீர்த்தொட்டியை காட்டிக்கொடுத்து மாணத்தைக் காப்பாற்றிக்கொள்வாரா ?


M S RAGHUNATHAN
டிச 19, 2025 07:46

அந்த கழிப்பறை சில மாதங்களில் இடிந்து விடும். யாராவது ஒரு மாணவனோ, மாணவியோ இறப்பது நிச்சயம்.