உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிம வள கொள்ளை தடுக்க தொழில்நுட்ப கண்காணிப்பு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கனிம வள கொள்ளை தடுக்க தொழில்நுட்ப கண்காணிப்பு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோவை: சட்ட விரோத கனிம வள கொள்ளையை தடுக்க, அண்ணா பல்கலையுடன் இணைந்து ஆறு மாதத்துக்குள், தொழில்நுட்ப ரீதியாக கண்காணிப்பு அமைப்பு உருவாக்க, தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்கள், நீரோடைகள் மற்றும் பட்டா நிலங்களில், சட்ட விரோதமாக லோடு, லோடாக செம்மண் வெட்டி கடத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்து வருகிறது. கனிம வள கொள்ளையை தடுக்க, எத்தகைய கண்காணிப்பு முறையை பின்பற்ற வேண்டுமென, ஐகோர்ட் நீதிபதிகள், தங்களது உத்தரவில் தெரிவித்திருக்கின்றனர்.

அதில், கூறியிருப்பதாவது:

மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம், 2016ல் கனிம வள கண்காணிப்பு அமைப்பை துவக்கியிருக்கிறது; இது, செயற்கைக்கோள் சார்ந்த கண்காணிப்பு அமைப்பு. சட்ட விரோத கனிம வள குற்றங்களை தடுக்க, மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பயனர் ஐ.டி., மற்றும் 'பாஸ்வேர்டு', மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டறிந்து, மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, அண்ணா பல்கலையுடன் இணைந்து, இந்த அமைப்பை உருவாக்க வேண்டும். தொலைநோக்கி அல்லது செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கைக்கோள் தொழில்நுட்பம் என, எந்தவொரு தொழில்நுட்பத்தையாவது பயன்படுத்தலாம். இதற்கான விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சாத்தியக்கூறுகளை சரிபார்த்து, ஆறு மாதத்துக்குள் அமைப்பை உருவாக்கி, செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, காலக்கெடு வாரியாக கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

s chandrasekar
ஜன 15, 2025 21:43

தன்மான சிங்கம், வெட்கம், மானம், சூடு, சொரணை குத்தகைதாரர் திராவிட குல தலைவன் வைகோ சைக்கோ தன் உயிரை கொடுத்தாவது இந்த திராவிட மாடல் அரசை காப்பாற்றுவார். இது பெரியார் மண், இது பெரியார் ஆறு, இது பெரியார் மலை இதை கொள்ளைஅடிப்பது திராவிட மாடல்.


s chandrasekar
ஜன 15, 2025 21:36

ஆதி காலத்து சொல் வழக்கு, திருடன் கையில் சாவிக்கொத்து.


s chandrasekar
ஜன 15, 2025 21:35

குரங்கு கையில் பூமாலை. ஆறு மாதத்திற்குள் அனைத்து கனிம வளங்களும் சுவாகா.


Rajasekar Jayaraman
ஜன 15, 2025 11:01

கொள்ளை கூட்டத்திடம் கொள்ளையை தடுக்க வழி சொல்லும் புதிய ஏற்பாடு போல..


sivakumar Thappali Krishnamoorthy
ஜன 15, 2025 10:46

எது இது பெரியார் மண் .. எங்களுக்கு உரிமை இல்லையா? "என்ஜோய்மேன்ட் விதோட் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் .EVR.. வருங்காலத்தை பற்றிய கவலை எங்களுக்கு ஏது ?


sankar
ஜன 15, 2025 08:29

ஈரோட்டில் முதல்வெற்றி பெறப்போகும் நாம்தமிழர்


V RAMASWAMY
ஜன 15, 2025 08:20

மற்ற கட்சிகளின் வெற்றி செயல்களையும் தங்கள் முத்திரையைக் குத்தி எதற்கெடுத்தாலும் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என்று கொக்கரிக்கும் இவர்கள் தொழில்நுட்ப கண்காணிப்பைக் கொண்டு இம்மாதிரி கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த ஏன் ஹைகோர்ட் உத்திராவிற்கு முன் செயல்படுத்த முன்வரவில்லை? வண்டவாளம் வெளிவந்துவிடும் என்கிற பயமா? வண்டவாளம் தான் வெளிவந்து மக்கள் முன் வைக்கப்பட்டுவிட்டதே, இனி நடவடிக்கை மட்டுமே பாக்கி.


தமிழன்
ஜன 15, 2025 07:59

நான் தினமும் இரவு 2 மணிவரை ஜொமேட்டோ உணவு டெலிவரி செய்கிறேன் ஜனவரி 1 ஆம் தேதி நடு இரவில் மதுக்கரை அருகே நான் சென்றுகொண்டிருந்த போது காட்டுக்குள்ளிருந்து 3 டிப்பர் லாரிகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது லாரி நம்பருடன் வீடியோ பதிவு செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் உசுருக்கு உத்தரவாதமில்லை என பயந்து கடந்து சென்று விட்டேன் இதுதான் 2 திருட்டு முன்னேற்ற கழகங்களும் நடத்தும் விடியல் திருட்டு திராவக மாடல்


Kasimani Baskaran
ஜன 15, 2025 07:54

குலத்தொழில் கனிம வளக்கொள்ளை. அவர்களை குலத்தொழில் செய்யக்கூடாது என்று எப்படி நீதிமன்றம் சொல்ல முடியும். அப்படி ஒரு முடிவு தற்கொலைக்கு சமம். ஆகவே நீதிமன்றம் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


Venkateswaran Rajaram
ஜன 15, 2025 06:21

திருடுபவர்களையே கண்காணிக்கச் சொன்னால்... கோமாளித்தனமாக இருக்கிறது


புதிய வீடியோ