உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிதம்பரம் கோவிலில் உயர் நீதிமன்றமே ஆய்வு செய்ய வேண்டும்: காடேஸ்வரா

சிதம்பரம் கோவிலில் உயர் நீதிமன்றமே ஆய்வு செய்ய வேண்டும்: காடேஸ்வரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: 'சிதம்பரம் நடராஜர் கோவிலில், அதிக அளவில் மக்கள் தரிசனம் செய்கின்றனரா; தீட்சிதர்களால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறதா?' என, குழு அமைத்து அறநிலையத் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதிர்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். ஏற்கனவே, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலைமை, நிர்வாக சீர்கேடு, பராமரிப்பின்மை, பக்தர்களுக்கு சிரமம் என தினமும் பல தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, திருச்செந்துார், திருவண்ணாமலை உட்பட பல கோவில்களில் அடிப்படை வசதிகளின்றி, பல மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் அவதிப்படுகின்றனர். கோவில்களில் அடிப்படை வசதிகள் கூட செய்யாத அறநிலையத் துறையையே, சிதம்பரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்வதை ஆய்வு செய்யுமாறு கூறி இருப்பது, எந்த விதத்திலும் பொருந்தாத செயல். ஏற்கனவே அறநிலையத் துறைக்கு பல உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்தும், அதில் எதையும் இன்று வரை அறநிலையத் துறை நிறைவேற்றவில்லை. இதனால், சில இடங்களில், அந்த துறை அதிகாரிகளே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சந்திக்கின்றனர். இந்த சூழலில், சிதம்பரம் கோவிலை அறநிலையத் துறை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் கூறியிருப்பது பொருத்தமற்றது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்திருந்தால், பக்தியுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து, நீதிமன்றமே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

V Venkatachalam
ஆக 03, 2025 20:00

கோயிலின் உள்ளே ஆய்வு செய்கிறேன் பேர்வழி ன்னு யாருமே வரவேண்டாம். இந்த திராவிடியா உ.பீஸ்தான் இந்த அலம்பல் வேலையை செய்து அதை பெரிசாக்கி அது வச்சி கொள்ளையடிக்க பார்க்குறானுங்க. சாமியை பாக்க போறானா அங்க உள்ள நடைமுறைகளை பின் பற்றி சாமியை கும்பிட்டு விட்டு அவனவன் வேலையை பார்க்க போவதை விட்டு விட்டு வேண்டாத வேலையை பண்ணி கோர்ட் நேரத்தையும் வீணடிக்கிறானுங்க. கோயிலில் போய் நான் தான் பெரிய ஆளுன்னு பந்தா பண்ணி ஒரு பிரச்சினை கிளம்பி விட்டுட்டு தீக்ஷிதர்கள் மேல் பழியை போட்டு அதன் வழியாக கோயிலை கண்ட்ரோலில் வைத்து கொள்ள நடக்கும் முயற்சிதான் இது. நாத்திகன்களுக்கு கோயிலில் என்ன வேலை.? ராணுவத்தை இறக்கி சவடால் வேலை பண்றவனுங்களை மினிமம் ரெண்டு பேர்களை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பினால் போதும். திராவிடியா உ.பீஸ் எவனுமே அந்த பக்கமே வரமாட்டானுங்க.


subramanian
ஆக 03, 2025 10:41

திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை, சென்னை கோவிலில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது? எல்லாம் அறம் மறந்த துறை வசம் உள்ள ஆலயங்கள்.... அங்கே போய் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


V RAMASWAMY
ஆக 03, 2025 09:44

இதற்கெல்லாம் ஒரே விடிவு தமிழ் ஹிந்துக்கள் சட்டப்படியோ போராட்டங்கள் மூலமாகவோ மத்திய அரசு மூலமாகவோ தமிழக கோயில்களை இந்து அற நிலையத்துறை பிடியிலிருந்து விடுவிக்கச் செய்வது தான்.


raja
ஆக 03, 2025 09:27

தமிழ் இந்துக்களே இந்த திருட்டு ஓங்கோல் கூட்ட கள்ள ரயில் ஏறிவந்த திராவிட கோவால் புர கொள்ளை கூட்ட குடும்பத்தை அடித்து விரட்டினால் ஒழிய உனக்கு விடிவில்லை....தமிழகம் பொட்டை அடித்து பாலைவனமாக்க படும்....


T.sthivinayagam
ஆக 03, 2025 09:13

தமிழர்கள கோவில்களை தமிழர்களியிடம் ஒப்படைக்க நீதீ மன்றங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தமிழக ஹிந்தக்கள் கூறுகின்றனர்


ஆரூர் ரங்
ஆக 03, 2025 09:46

இருதயராஜ் ஜவாஹிருல்லா தமீம், ஷா நவாஸ் எல்லாம் தமிழர்களா? அமைச்சரவையில் ஸ்டாலினை தவிர எட்டு தெலுங்கர்கள்?


vivek
ஆக 03, 2025 11:13

அதை சேகர் பாபு கிட்ட சொல்லு நாயகம்


G Mahalingam
ஆக 03, 2025 09:11

திமுக அதிக குடமுழுக்கு நடத்துவதே கொள்ளை அடிக்கதான். இதுவரை வரவு செலவு கணக்கை ஒரு கோவிலுக்கு கூட தாக்கல் செய்ய வில்லை. உபயாதாரர் செய்வார்கள். கணக்கு அறநிலையத்துறை எழுதி விடும்.


GMM
ஆக 03, 2025 08:37

தீட்சிதர்களால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறதா? அல்லது அறநிலைய துறை அதிகாரிகளால் கோவிலுக்கு இடையூறு நிகழ்கிறதா? என்று பக்தர் குழு அமைக்க தானே மன்றம் கூற வேண்டும்? இந்து மதத்தில் பிறந்தாலும் வாழ்வில் இந்து மத சடங்குகள் பின்பற்றி வாழும் அறநிலை, நீதித்துறை மட்டும் தான் ஆன்மிக கருத்து கூற வேண்டும். அறநிலைய துறை அறிக்கை மன்றம் எதிர் பார்த்த படி இருக்கும். தீர்வை தயாரிக்கலாம்.


Gnana Subramani
ஆக 03, 2025 07:57

நீதிபதி சுவாமிநாதன் அவர்களை ஆய்வு செய்ய சொல்லலாமா


Kasimani Baskaran
ஆக 03, 2025 07:18

அறநிலையத்துறைக்கு ஆசை வந்துவிட்டால் சொத்துக்கள் நிறைந்த கோவிகளுக்குள் புகுந்து சிறிது சிறிதாக ஆட்டையைப்போட அனைத்து வித வெட்கம்கெட்ட நடவடிக்கைகளில் கூட ஈடுபடுவார்கள் திராவிடமட வெறியர்கள்.


சமீபத்திய செய்தி