உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீசார்; ஐகோர்ட் கடும் கண்டனம்

குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீசார்; ஐகோர்ட் கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.கடந்தாண்டு, டிசம்பர், 16ம் தேதி இரவு, திருப்பத்துாரில் இருந்து, 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த, சென்னை வருமான வரி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் பிரபு, 31, ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42 ஆகியோரும் கைதாகினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ije70irc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (ஜன.,22) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. வேலியே பயிரை மேய்வதா?' என கண்டனம் தெரிவித்தனர். இதற்கு போலீசார் தரப்பில், 'வழக்கில் இன்னும் விசாரணை நிறைவடையவில்லை. மேலும் ஒரு சிறப்பு எஸ்.ஐ., கைது செய்யப்பட்டிருப்பதால் விசாரணை நடத்த வேண்டி உள்ளது' என விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் ஜாமின் மனு மீதான விசாரணை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Raj S
ஜன 22, 2025 22:16

இந்த மாதிரி வெட்டி வேல பாக்க இவனுங்களுக்கு வெட்டியா சம்பளம்...


visu
ஜன 22, 2025 21:06

இப்பதான் இந்த ரகசியம் தெரிஞ்சுதுங்களா ? சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் தண்டனையை விட அதை காக்க வேண்டிய காவலர் குற்றம் செய்தால் தணடனை 2 மடங்கு கொடுக்கணும் .ஏனென்றால் அவங்க தெரிஞ்சே செய்யுறாங்க


aaruthirumalai
ஜன 22, 2025 20:27

பொதுமக்களும் குற்றம் புரிந்தால் கடும் கண்டனத்துடன் வழக்கை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:45

அரசு அலுவலகத்தில் மற்றும் தனியாரில் இதற்கெல்லாம் பொறுப்பான சீனியர் மீதுதான் குற்றம் சுமத்துவார்கள் .. ஆனால் இந்தக் குற்றங்களுக்காக காவல்துறையைக் கையில் வைத்திருப்பவரைக் கேட்க முடியாது .... வாளுக இந்திய ஜனநாயகம் ...


அப்பாவி
ஜன 22, 2025 18:48

தில் இருந்தா திருட்டு போலீசுக்கு தூக்கு தண்டனை விதிச்சு கெத்து காட்டுங்க. இல்லேன்னா பேசாம போங்க. இப்பிடி பேசி வெறுப்பேத்தாதீங்க.


Rajan A
ஜன 22, 2025 17:54

கடும் கண்டனத்தை தெரிவித்து விட்டதோட. விடுங்க.அடுத்த வேலையை பார்ப்போம்


K.n. Dhasarathan
ஜன 22, 2025 17:43

காவலர்களே குற்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்க முடியாதது, தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் அவசியம், இடா மாறுதல் செய்வது, வேறு பிரிவுகளுக்கு மாற்றுவது, காத்திருப்போர் பட்டியலில் வைப்பது போன்ற நகைச்சுவைகள் வேண்டாம், சாதாரண மக்களை விட மிக கடுமையான தண்டனைகள் வேண்டும், துரதிஷ்டவசமாக நீதி மன்றங்கள் அளவுக்கு அதிகமாகவே குற்றவாளிகளுக்கு இடம் அளிக்கின்றன, இதனால் குற்றங்கள் பெருகுவது ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை, அடுத்து, குற்றவாளிகளை முகம் மறைத்து போடோட்கள் வருகின்றன, ஏன்? அவர்கள் முகம் கண்டிப்பாக காட்டப்படவேண்டும். அனைவரும் கண்டிப்பாக பார்க்கணும், தெரிஞ்சுக்கணும்.


M Ramachandran
ஜன 22, 2025 17:08

போகிற போலாக்கில் பார்த்தல் கருணாதியின் தலைய முறை அஆட்சிய பொறுப்பிலிருந்து மக்களால் கழட்டி விடப்படுவது தின்னமெ. இனி பண பலம் வேலைய்யக்கு உதவாது. பொறுப்பற்ற போலீசு மந்திரி யினால் மக்கள் வெறுப்புற்று வெளிப்படையாக்க சாணி திக்கும்நிலைக்கு அந்த இட்டார்கள் ஒரு மந்தி ரி மீது சேறு அடித்து அழகு பார்த்திருக்கிறார்கள். கோபம் வந்து கிராமமமக்களையெ அடித்து போளீசு ஸ்டேஷனுக்கு வேனில் கடத்தி சென்றுள்ளார். இதை பார்த்து மக்கள் ஒட்டு போடுவார்களா என்ற சிந்தனை தை கூட இல்லை. இந்த ஆளெல்லாம் படித்த உயர்கல்வி மந்தி ரி. அடித்த கொள்ளைக்கு அளவேது? அது தான் கைது வரைக்கும் போயி நாறி போயிடுச்சே.


Bala
ஜன 22, 2025 17:03

எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத திராவிட மாடல் ஆட்சியை முட்டு கொடுக்க திமுக பத்திரிக்கையாளர் மற்றும் கூட்டணி கட்சி அல்லக்கைகள் விவாதத்துக்கு ஓடிப்போங்க


M Ramachandran
ஜன 22, 2025 16:59

பொறுப்புள்ள பதவியில் அமர்ந்து கொண்டிருக்கும் பொறுப்பற்ற காவல்துறையினர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை