உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு குழுவின் விசாரணை துவங்கியது!: ஐ.ஜி.,க்கு உதவ 10 போலீஸ் அதிகாரிகளும் குழுவில் சேர்ப்பு

உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு குழுவின் விசாரணை துவங்கியது!: ஐ.ஜி.,க்கு உதவ 10 போலீஸ் அதிகாரிகளும் குழுவில் சேர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்:கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு குழுவின்விசாரணை நேற்று துவங்கியது. அந்த குழு, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தது. சிறப்பு குழுவுக்கு தலைமை வகிக்கும் ஐ.ஜி., அஸ்ரா கார்க்கிற்கு உதவ, 10 போலீஸ் அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, “கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால், அதுபற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது,” என, வடக்கு மண்டல ஐ.ஜி.,யும், சிறப்பு புலனாய்வு குழுவான எஸ்.ஐ.டி., விசாரணை அதிகாரி அஸ்ரா கார்க் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q3kic7mq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த மாதம், 27ம் தேதி இரவு, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 18 பெண்கள், 13 ஆண்கள், ஐந்து சிறுவர்கள், ஐந்து சிறுமியர் என, 41 பேர் பலியாகினர். மேலும், 110 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில், 106 பேர் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளதாகவும், தற்போது திருச்சி, மதுரை அரசு மருத்துவமனையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த, 3ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினர், வேலுச்சாமிபுரத்துக்கு நேற்று மதியம், 1:30 மணிக்கு வந்தனர். இதில், விஜய் பிரசார பஸ் நின்ற இடம், ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடம், சாலை இருபுறமும் நெரிசல் ஏற்பட்ட பகுதி, ஒடிந்து விழுந்த மரக்கிளை, திறந்தநிலை சாக்கடை போன்றவற்றை, 45 நிமிடம் பார்வையிட்டனர். கரூர் சைபர் கிரைம் எஸ்.ஐ., சுதர்சன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு மோகன்ராஜிடம், அஸ்ரா கார்க் விளக்கம் கேட்டறிந்தார். ஆய்வு குறித்து ஐ.ஜி., அஸ்ரா கார்க் நிருபர் களிடம் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்துள்ளோம். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால், இதுபற்றி வேறு எதுவும் கூற முடியாது. சிறப்பு புலனாய்வு குழுவில் இரண்டு எஸ்.பி.,க்கள், ஒரு ஏ.டி.எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி.,க்கள், ஐந்து இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பஸ் ஓட்டுநர் மீது வழக்கு த.வெ.க., தலைவர் விஜய், செப்., 27ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அங்கிருந்து பிரசார பஸ்சில், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க சென்றார். கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் பகுதியில், பிரசார பஸ் சென்ற போது, த.வெ.க., தொண்டர்கள் சென்ற டூ - வீலர்கள் மீது மோதியது. அதில், தொண்டர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. அதேசமயம் இது தொடர்பான வீடியோ பரவியது. இந்நிலையில், பிரசார பஸ் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பிரசார பஸ் ஓட்டுநர் மீது, இரு பிரிவுகளில், வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

panneer selvam
அக் 06, 2025 23:29

What Justice Aruna will do while Madras High Court has ordered a special investigation team ? Same subject one for Stalin and one for High Court . Poor Tamil people


M S RAGHUNATHAN
அக் 06, 2025 19:02

நீதிமன்றம் ஒரு விசாரணை குழு அமைத்து இருக்கிறது. அரசு ஒரு முன்னாள் நீதிபதியின் கீழ் ஒரு ஆணையம் அமைத்து இருக்கிறது. ஏன்? நீதி மன்றத்திற்கு அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று முடிவிற்கு வரலாமா ? ஆட்சி ஒரே அலங்கோலமாக இருக்கிறது. ஆணையம் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வது மரியாதையாக இருக்கும்.


Rajasekar Jayaraman
அக் 06, 2025 18:23

இந்தியாவில் நடக்கும் தண்டச் செலவுகளில் இதுவும் ஒன்று மக்களை முட்டாளாக அரசின் தந்திரம்.


sankaranarayanan
அக் 06, 2025 17:26

பிரசார பஸ் சென்ற போது, த.வெ.க., தொண்டர்கள் சென்ற டூ - வீலர்கள் மீது மோதியது இது தவறு தொண்டர்கள் சென்ற டூ - வீலர்கள்தான் பிரசார பஸ் மீது மோதியது இதை சிசி டிவியில மக்கள் பார்க்கலாமே


SUBRAMANIAN P
அக் 06, 2025 14:05

உண்மை வெளியே வராது. எல்லோருக்கும் தெரியும், இந்த சம்பவத்திற்கு காரணகர்த்தா யாரென்று.. ஆனால் சட்டத்திற்கு சாட்சி வேண்டுமே.. அதனால் உண்மை வெளியே வராது.. வேறு வழியில்லை. எதிர்ப்பை ஓட்டில் காண்பியுங்கள்.


Murugesan
அக் 06, 2025 13:33

அழியும் காலம் வந்து விட்டது


R.PERUMALRAJA
அக் 06, 2025 12:36

விசாரணை துவங்கட்டும் ஏதுவேண்டுமானாலும் துவங்கட்டும், தி மு க இந்த உயிரிழப்பு சம்பவத்தை காரணமாக கொண்டு, தா வே க , ஆ தி மு க மற்றும் எதிர்கட்சிகள் தமிழகத்தில் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யமல் இருக்க நீதிமன்றத்தை நாடி தர்காலிகமாக பிரச்சாரம் ஏதும் நடைபெறக்கூடாது என்று stay வாங்கி எடப்பாடியும் விஜய்யும் மக்களை சந்திக்கவிடாமல் தடுத்து இருக்கிறது. இதிலிருந்து மீள எடப்பாடி உடனே உச்ச நீதிமன்றத்தை நாடி பிரச்சாரத்தடையை நீக்கி தானும் பிரச்சாரம் செய்து விஜய்யையும் அடுத்தடுத்து பிரச்சாரம் செய்ய்ய ஏற்பாடுகள் செய்வாராயின் மீண்டும் அரசியல் களம் சூடுபிடிக்கும் விஜய் வீட்டினுள் முடங்கி கிடப்பது அவருக்கும் தமிழக அரசியல் களத்திற்கும், ஆ தி மு க விற்கும், பா ஜா கா விற்கும் நல்லதல்ல, தி மு க கூடாரத்தை சிறிது வாரங்களிலேயே கலகலக்க வைத்தவர். தமிழக உளவுத்துறை ஒருசில மாதங்களாக விஜய்யை சுற்றியே பணியாற்றுவதாக தகவல், வீட்டில் மூடங்கி இருக்கும் விஜய்யை மேலும் முடக்க அணைத்து அஸ்திவாரத்தை உளவுத்துறை எடுத்து இருப்பதாக தகவல்.


Venugopal S
அக் 06, 2025 11:04

ஆச்சரியமாக உள்ளது!அணில்கள் பொங்குவதை விட அதிகமாக செம்மறி ஆடுகள் பொங்குகின்றன!


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2025 10:57

காரணம் வெட்ட வெளிச்சம் ஆயிருமோ ?


VENKATASUBRAMANIAN
அக் 06, 2025 08:34

அடுத்த நிகழ்வு ஏதேனும் வந்தால் இது மறக்கடிக்கப்படும். இதுதான் வரலாறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை