உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதன் ஜாமினில் விடுவிப்பு

இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதன் ஜாமினில் விடுவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: நெல்லையில் கைதான இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதனை, ரிமாண்ட் செய்ய மறுத்த நீதிபதி, போலீசாருக்கு கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து குற்றலாநாதன் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 31 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறகு, டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே காப்பர் டி என்ற கருத்தடை சாதனத்தை பொருத்தியதாக கூறப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1r3wgiat&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை, அந்த பெண் வீட்டிற்கு செல்லும்போது கூறியுள்ளனர். கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதால், ஒவ்வாமை உண்டாகி ரத்தப்போக்கு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது முன் அனுமதி பெறாமல் இப்படிச் செய்த டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என நெல்லை மண்டல பொது சுகாதாரத்துறை இயக்குநரிடம் ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் மனு அளித்தார்.இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஹிந்து பெண்களுக்கு சம்மதம் இல்லாமல் கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாகவும், அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.இந்த அறிக்கையை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக, குற்றாலநாதனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மறுப்பு

கைது செய்து கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட குற்றால நாதனை ரிமாண்ட் செய்ய முடியாது எனவும் இந்த விவகாரத்தில் டாக்டர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என நீதிபதி சத்யா கேள்வி எழுப்பினார்.புகார் கொடுக்க வந்த குற்றால நாதனை கைது செய்தால், அவர் புகார் கொடுத்த மருத்துவரை மட்டும் நீங்கள் ஏன் கைது செய்யவில்லை என்வும் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, இளம் பெண் தந்த புகாரின் பேரில் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சிஎஸ்ஆர் தந்தனர்.இந்நிலையில், குற்றாலநாதன் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முன்பு நெல்லை வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்தினர். இதனையடுத்து, ராஜேஸ்வரன் உள்ளிட்ட 15 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ponnusamy M
ஜன 06, 2025 08:17

பெண்ணின் அனுமதி பெற்ற படிவத்தை மருத்துவர்கள் காட்டினால் பிரச்சனை தீர்ந்தது


visu
ஜன 06, 2025 16:52

இருந்தால் காட்ட போறாங்க


Ponnusamy M
ஜன 06, 2025 08:15

பெண்ணின் அனுமதி இல்லாமல், கருத்தடை சாதனத்தை மருத்துவர்கள் பொருத்துவார்களா என்பதை யோசியுங்கள் மக்களே


visu
ஜன 06, 2025 16:54

அனுமதி கையெழுத்து பெற்றார்களா என்று சோதிக்கலாமே எதேர்க்கு ஊகத்தில் பேச்சு.அவரே வேண்டிக்கொண்டு பின் புகார் கொடுக்க அவர் பைத்தியமா என்ன ?


Dharmavaan
ஜன 07, 2025 19:53

அனுமதியை மருத்துவர் காட்டட்டும்


Ponnusamy M
ஜன 06, 2025 08:08

நீதிமன்றங்களின் தீர்ப்புகளும், கருத்துக்களும் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. உடனடியாக விமர்சிக்கப்படுகின்றன சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன. எனவே சரியான நீதிகளை வழங்கும் நீதிபதிகளின் பொறுப்பு மேலும் மேலும் கூடுகிறது.


sankar
ஜன 06, 2025 06:55

போலீஸின் தரம் சூப்பர்


தமிழ்வேள்
ஜன 05, 2025 22:36

இலங்கையில் ஹிந்து பெண்களை சிகிச்சை அளிப்பதாக ஒரு மூர்க்க டாக்டர் கருத்தடை அறுவைச் சிகிச்சை அளிப்பதாக கண்டறிய பட்டதால் அந்த டாக்டர் கைது செய்யப்பட்டு பின் காணாமல் ஆக்கப்பட்டான்.. இங்கும் அதே போன்ற கருத்தடை ஜிஹாத் நடத்தப்படுவது போல் உள்ளது.. இது திராவிடத்தின் பிச்சையாளர்களான மூர்க்க சிலுவை கும்பலின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டல் ஆணைகளையும் அளித்து இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. மத்திய அரசு தலையிடுவதே நல்லது....


Kalyanaraman
ஜன 05, 2025 21:49

அறிவிக்கப்படாத மற்றொரு எமர்ஜென்சி தமிழகத்தில் இருப்பதுபோல் தெரிகின்றது.


swamy
ஜன 05, 2025 21:37

200 rupees ஊபீஸ் கு இதெல்லாம் பிடிக்காது.....


Constitutional Goons
ஜன 05, 2025 20:15

இந்து மதவாதிகளை, மதவாதத்தை, ஊக்குவிக்கிறது நீதி துறை என்பது அனைவரும் அறிந்ததே ?


Vijay
ஜன 05, 2025 22:30

சரி நீ குண்டு வைக்கும் வேலையை மட்டும் பாரு.


Dharmavaan
ஜன 07, 2025 19:56

எப்படி என்று விளக்கு


Velan Iyengaar
ஜன 05, 2025 19:38

அந்த கற்பத்துக்கும் குற்றாலநாதனுக்கும் எதாவது தொடர்பு இருக்கா என்று விசாரிக்கவேண்டும் .... அந்த கும்பல் எப்போதும் ஆதாயம் இல்லாமல் ஆற்றில் இறங்கவே இறங்காது ....


S.V ராஜன்(தேச பக்தன்...)
ஜன 05, 2025 19:52

அது சரி உண்மையை பேசுவதால் திராவிடிய கும்பலுக்கு பிடிக்காதே


Duruvesan
ஜன 05, 2025 20:53

மூர்கன் சூப்பர்


N S Sankaran
ஜன 05, 2025 22:27

கேவல புத்தியை வெளிப்படுத்தி விட்டாய்.


sankar
ஜன 06, 2025 06:59

சம்பந்தம் இல்லாமல் உளறும் இருநூறு.


Dharmavaan
ஜன 07, 2025 19:54

ஹிந்துக்களுக்கு அனுமதி இல்லா குடும்பக்கட்டுப்பாடு என்ற வகையில் உரிமை உண்டு


Dharmavaan
ஜன 07, 2025 19:57

உனக்கு ஆதாயம் இல்லாமல் உபியாக உளறுகிறாயா


சமீபத்திய செய்தி