உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது

கோவை: இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர்.கோவை, ஈஷா யோகா மையம் குறித்து, அவதுாறு பரப்பி வருவதாக கூறி, நக்கீரன் இதழை கண்டித்து ஹிந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜி, 'நக்கீரன் ஆசிரியர் கோபால் நாக்கை அறுப்பேன்' என்று பேசிய வீடியோ பரவியது. புகாரின் பேரில், அவர் கைது செய்யப்பட்டார்.இவரது கைது கண்டித்து, இன்று (நவ.,17) தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி போராட்டம் அறிவித்து இருந்தது. கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை, கோனியம்மன் கோவில் அருகே போலீசார் கைது செய்தனர். அதேபோல், செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankaranarayanan
நவ 17, 2024 18:19

யாரோ ஒரு அரசியல்வாதி முன்பு ஒருவர் தில்லை நடராஜனையும் திருவரங்கம் அரங்கனையும் பீரங்கி குண்டு வைத்து பிளக்க வேண்டும் என்றே கூறியிருக்கிறார்.அவரை அப்போது இருந்த அரசோ இப்போது இருக்கும் அரசோ கைது செய்யவே இல்லை செய்யவும் செய்யாது ஏனென்றால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்...


வைகுண்டேஸ்வரன்
நவ 17, 2024 17:07

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் இதன் இளைஞர் அணித் தலைவர் மகன் பாலாஜி. இதுகள் வாரிசு அரசியல் என்று திமுக பற்றிப் பேசறதுகள். செம காமெடி. ஓம்கார், நீதி மன்றத்துக்குள்ளேயே சுத்தி சுத்தி ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடிக்கிட்டே இருந்தார். கோர்ட் முடிகிற சமயம் பின் வாசலுக்கு வந்து காரில் ஏறும்போது பிடிபட்டார். இவ்வளவு கேவலமானவர்களை பாஜக ஆதரிக்கணுமா?


Sree
நவ 17, 2024 16:45

ஊரில் உள்ள எல்லா எதிர் கட்சி தலைவர்களையும் கைது பண்ணி விடுங்கள் வக்கீல் கும்பல் பணம் சம்பாதிக்கும்


Dhanraj V.
நவ 17, 2024 16:23

அர்ஜுன் சம்பத் மகன் சொன்னதை இவர் செய்ய வேண்டியது தானே. எதற்கு ஆர்ப்பாட்டம்....?


kantharvan
நவ 17, 2024 13:56

வாவ் உயர்த்திரு...இத இதைத்தான் இவ்வளவு நாள் கேட்டாங்கா? இதான் திராவிட மாடல் சாதனை.


Bala
நவ 17, 2024 13:47

ஜார்ஜ் சோரஸ் அரசு வாழ்க.


sankaranarayanan
நவ 17, 2024 13:41

வாயை த்திறந்தால் கைது இதுதான் திராவிட ஜனநாயகமா பிறகு என்ன செய்வது தேர்தல்வரும்வரை காத்திருப்போம் அப்போது வாயை திறப்போம்


Sundar R
நவ 17, 2024 13:29

மூன்று ஆண்டுகளில் 5000 படுகொலைகள் நடந்த போதிலும் மத்திய பாஜக அரசு திமுக வார்டு அரசை டிஸ்மிஸ் செய்யவில்லை. ஆனால், பாஜகவின் வெற்றிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் அரும்பாடு பட்டு உழைத்த தலைவர் உயர்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் நவம்பர் 3-ம் தேதியன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய கஸ்தூரி அவர்களை கைது செய்தபோதும் சரி, அதன்பிறகு ஓம்கார் பாலாஜி அவர்களை கைது செய்தபோதும் சரி, அதன் பிறகு உயர்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்ட போதும் சரி, தமிழக பாஜகவில் இருந்து பெரிய தலைவர்கள் யாரும் உயர்திரு அர்ஜுன் சம்பத் அவர்களுக்கும், கஸ்தூரி & ஓம்கார் பாலாஜி அவர்களுக்கும் ஆதரவாக ஏன் குரல் கொடுக்கவில்லை? தமிழக பாஜக தலைவர்கள் பாசிட்டிவாக திங்க் பண்ணி இப்பிரச்சினைகளை அடித்து நொறுக்கி பாஜகவின் சக்தி என்ன என்பதை தமிழக மக்களுக்கு காட்ட வேண்டும்.


Ramesh
நவ 17, 2024 13:50

போ .....


வைகுண்டேஸ்வரன்
நவ 17, 2024 17:03

ஒரு பத்திரிகைஆசிரியரின் நாக்கை அறுப்பேன் என்று கசாப்பு கடைக்காரன் மாதிரி பேசுவார். பாஜக தலைவர்கள் ஆதரவா பேசணுமா? ஏற்கனவே பாஜக பேர் ரிப்பேர்.


Sampath Kumar
நவ 17, 2024 12:33

எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை