ஹிந்து ஆதீனங்களை துன்புறுத்தக்கூடாது
மத மோதலை உருவாக்கும் விதத்தில், மதுரை ஆதீனம் நடந்து கொள்கிறார் என கூறி, அவர் மீது வழக்கு பதிந்திருக்கும் தமிழக போலீசார், உடல்நிலை சரியில்லை என தெரிந்தும், விசாரணை என்ற பெயரில் ஆதீனத்தை சிரமப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமின் பெற்றிருக்கும் ஆதீனத்தின் முன் ஜாமினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தமிழக போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. ஆதீனம் கூறிய புகார் மீது இதுவரை போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளை தி.மு.க., அரசு வேண்டுமென்றே துன்புறுத்துகிறது. இதேபோல், கோவை, சிரவை ஆதீனம், முருக பக்தர்கள் மாநாட்டில் பேசினார் என்பதற்காக வழக்கு போட்டுள்ளனர். ஹிந்து மத ஆதீனங்கள், மடாதிபதிகளை துன்புறுத்தும் போக்கை தி.மு.க., அரசு கைவிட வேண்டும். - ஜெயக்குமார், துணைத் தலைவர், ஹிந்து முன்னணி