உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வீடு தேடி வரும் ரேஷன் திட்டம் விரிவாக்கம் கணக்கெடுப்பு துவக்கம்

 வீடு தேடி வரும் ரேஷன் திட்டம் விரிவாக்கம் கணக்கெடுப்பு துவக்கம்

சென்னை: தாயுமானவர் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான கணக்கெடுப்பை, உணவுத்துறை துவங்கியுள்ளது. தமிழகத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், 'தாயுமானவர்' திட்டம், தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தை விரிவுபடுத்த, த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளது. உணவு துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், 50 வயதுக்கும் மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, ரேஷன் பொருட்களை வழங்கும் வகையில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய உத்தர விட்டுள்ளார். இதையடுத்து, 50 வயதுக்கு மேற்பட்ட குடும்ப தலைவர்கள் உள்ள ரேஷன் அட்டைகளை அடையாளம் காணும் பணிகள் துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை