உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலூரில் கோர விபத்து; பள்ளி வேன் மீது ரயில் மோதி மாணவர் 3 பேர் பலி!

கடலூரில் கோர விபத்து; பள்ளி வேன் மீது ரயில் மோதி மாணவர் 3 பேர் பலி!

கடலூர்: கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. மாணவர் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rlw4vr00&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது.இந்த விபத்தில் பள்ளி சாருமதி, நிமலேஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் செழியன், 15, உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த செழியனும், சாருமதியும் சகோதரன், சகோதரி ஆவர்.இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில் வருவதை டிரைவர் கவனிக்காமல் கடக்க முயன்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிகிறது. ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதியதில் வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. அதில் இருந்த பள்ளி குழந்தைகள், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் தண்டவாளம் எங்கும் சிதறி கிடந்தன.சம்பவம் நடந்த இடத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டுள்ளனர். காயம் அடைந்த மாணவ மாணவியருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

பள்ளி வேன் மீது ரயில் மோதியதற்கு, கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடாமல் தூங்கியதே காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டி உள்ளனர். விபத்து நடந்த இடத்தில், கடலூர் எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

மின்சாரம் தாக்கி பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், அருகில் நின்றிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விபத்து காரணமாக, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் ஆகிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணையை தொடங்கி உள்ளது.

ரயில்வே நிர்வாகம் விளக்கம்

இது குறித்து ரயில்வே துறை கூறியதாவது:* கேட் கீப்பர் முறையாக கேட்டை முறையாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். * பள்ளி வேன் டிரைவர் தான் கேட்டை மூடக்கூடாது எனக் கூறியுள்ளார்.* ரயில் வருவதை அறிந்து, கேட்டை மூடும் போது பள்ளி வேன் டிரைவர் மீறி இயக்கி உள்ளார். * செம்மங்குப்பத்தில் பள்ளி வேன்- ரயில் மோதி ஏற்பட்ட விபத்து காலை 7.45 மணிக்கு நிகழ்ந்துள்ளது.* விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கேட் கீப்பர் கைது

விபத்து நடந்த போது ரயில் கேட் கீப்பராக இருந்த பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தற்போது, கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிவாரணம் அறிவிப்பு

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

ரயில்வே கேட் மூடவில்லை!

''வழக்கமாக செல்லும் வழியில் தான் சென்றோம். ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது. சிக்னல் எதுவும் போடவில்லை. ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை. பள்ளி வேன் கடந்து சென்ற போது ரயில் மோதியது'' என விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் விஸ்வேஷ் தெரிவித்துள்ளார்.அதேபோல், ''விபத்து நடந்த போது ரயில்வே கேட் மூடவில்லை திறந்து தான் இருந்தது'' என பள்ளி வேன் டிரைவர் சங்கர் கூறினார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்!

பலியான மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.மன வேதனை!த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது; விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ரயில் சேவையில் மாற்றம்

விபத்து எதிரொலியாக திருவாரூர்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் வரை செல்லும், மைசூர் - கடலூர் விரைவு ரயில் புதுச்சத்திரம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

kamal 00
ஜூலை 08, 2025 22:44

அதான் வடக்கன்களை இந்த மாதிரி வேலைக்கு போடாதீங்க..... ஒரு எழவும் புரியாது.... இதே தமிழ் ஆளு அங்க போய் இந்த கூத்து பண்ணுனா அவனை கொன்னு குழி ல இறக்கியிருப்பானுக


மனிதன்
ஜூலை 08, 2025 22:09

சப்ப கட்டு கட்டுறானுங்க ... கேட் ஒழுங்காக மூடாமல் திறந்து வைத்திருந்த வடமாநிலத்தானின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம்...இது தெரிந்தும் தன் இனத்திற்காக சப்ப கட்டு கட்டுறானுங்க... இங்கு யாரோ ஒருவர் கருத்து போட்டிருக்கிறார், தமிழ்நாட்டிலிருப்பவர்களெல்லாம் டாஸ்மாக்கில் விழுந்து கிடக்கிறார்கள் என்று... இந்த தமிழ்நாட்டைப்போல எந்த இந்திய மாநிலம் பெருவளச்சியடைந்திருக்கிறது??? இல்லையென்றால் ஏன் இவ்வளவு வடநாட்டவர்கள் இங்கு வந்து அனைத்து துறைகளிலும் குழுமியிருக்கிறார்கள்?? தன மாநிலத்தில் வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாததால்தானே??? வடமாநிலங்கள் எல்லாம் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாம் நம் நிலைமைக்கு வர குறைந்தது முப்பது வருடங்கள் ஆகும்...அப்போது நாமெல்லாம் எட்டா உயரத்தில் இருப்போம்... இதுல பாஜக தமிழ்நாட்டுல பூச்சிய புடிச்சு அம்பது வருஷம் பின்னோக்கி இழுக்கப்பாக்குது...


crap
ஜூலை 09, 2025 16:07

வடநாட்டவர்கள் அவர்களாக முதலில் இங்கு வரவில்லை. அவர்களை அழைத்து வந்ததே நாம்தான். ஊர்ப்பக்கம் போய் விவசாய வேலைக்கு ஆள் தேடிப் பாருங்க. ஒரு தமிழன் கிடைக்க மாட்டான். பகலில் 100 நாள் வேலை திட்டத்தில் மரத்தடியில் தூங்குவான். இரவில் டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு தூங்குவான். அதனால், வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆளை கொண்டு வர வேண்டிய நிர்பந்தம். இன்னிக்கு அவன் அவனவன் சொந்தக்காரங்களை கூட்டிட்டு வந்திட்டேன். சமூக நீதி புண்ணாக்குகள் மாணவர்களை மண்ணாங்கட்டியாய் ஆக்கி வைத்ததினால் வந்த வினை, போட்டி தேர்வுகளில் தேர்வு பெற முடியவில்லை மத்திய அரசு பணிக்கும் போக முடியவில்லை. உருட்டுங்க உருட்டுங்க, தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று. அதையும் நம்பி ஒட்டு போடுவானுக.


Sivagiri
ஜூலை 08, 2025 22:06

நிச்சயமாக வேன் வான் ஓட்டுனரின் அடாவடித்தனத்தால்தான் நடந்திருக்க வேண்டும் , , ,எப்போதும் ரயில்கள் , ரயில்வே கேட்கள் கடக்கும் முன்பேயே ரயில்களில் ஹாரன் அடித்துக் கொண்டேதான் கடக்கும் , டிவி மீடியாக்களில் காண்பிக்கப்படும் விவாதங்கள் விமர்சனங்கள் அனைத்துமே திருட்டு திராவிட மாடல் கட்டுக்கதைகள் என்பது பார்த்தாலே தெரிகிறது - இப்போதைய ரித்தானியா தற்கொலை கேஸ் , அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட கேஸ் , போன்ற பல கேஸ்களை , மக்கள் பார்வையில் மாற்றுவதற்காக , அடிக்கப் படும் கோடாங்கி , என்பது தெளிவாக தெரிகிறது . . .


M S RAGHUNATHAN
ஜூலை 08, 2025 21:25

இதற்கு முக்கிய காரணம், நம்மவர்கள் சாலை விதிகளை கொஞ்சம்.கூட மதிப்பதில்லை. அடுத்து இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கைப்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது. அடுத்து தலைக் கவசம் அணிய சோம்பேறித்தனம். கவசத்தை View mirror இல் அல்லது பெட்ரோல் டேங்க் மேல் வைத்து வண்டி ஓட்டுவது. நான் ஒரு முறை ஒரு சிக்னலில் நின்று இருந்தேன். அப்போது என் பின்னால் இருந்த ஒரு போக்குவரத்து கழக ஓட்டுநர் என்னை " ஐயரே வண்டியை ஓட்டு. இல்லேனா தள்ளிப் போய் நிறுத்து என்று வசை பாடுகிறார். அதே போல் தான்.auto ஓட்டுநர்கள். Ola, uber ஓட்டுநர்களும் பயணத்தின்.போது கைபேசியை சாதாரணமாக உபயோகிக்கின்றனர். கேட்டால் எங்களுக்கு வண்டி ஓட்ட தெரியும். பிடிக்கவில்லை என்றால் இறங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். Share auto வில் சர்வ சாதாரணமாக 10 பேர் பயணிக்கிறார்கள். விபத்துகள் இந்த நிலையில் தவிர்க்க முடியாது. மக்கள்தான் திருந்த வேண்டும்.


aaruthirumalai
ஜூலை 08, 2025 20:50

குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர்களே கடந்து போங்க... நாளைக்கு மக்களுக்கு வேற செய்தி கிடைத்துவிடும்.


KRISHNAN R
ஜூலை 08, 2025 20:21

ஒரே விசயம் இருதரப்பும்.. உண்மை மறைகின்றன... .. கேட்... திறந்தா... ரயிலுக்கு... சிக்னல் விழாது எப்போதும். கேட் விபத்து போது பாதி திறந்த நிலையில் இருக்கு... அதன் காரணம் என்ன.. தினமும் வேன் இப்படிதான்..சென்றதா. ...


Kasimani Baskaran
ஜூலை 08, 2025 18:58

இரயில் வருகிறது என்று தெரிந்தும் ஏன் கேட்டை மூடாமல் விட்டான் அந்த கேடி...


என்றும் இந்தியன்
ஜூலை 08, 2025 18:25

வேடிக்கையிலும் வேடிக்கை இந்த வாதங்கள் பிரதிவாதங்கள். மோதியது என்றால் வான் ரயில் பாலத்தில் இருந்தது என்று அர்த்தம். ரோட்டில் வண்டி ஓட்டும் எவரும் நாலுபக்கமும் பார்த்துத்தான் வண்டி ஓட்டுவர் அதுவும் பஸ் என்னும் போது அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். அப்போது பொறுப்பு இன்னும் தினம் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு. இந்த பொறுப்பே இல்லாமல் குடித்து இட்டு ஓட்டினால் மட்டுமே இப்படி நடந்திருக்க முடியும். இது பஸ் டிரைவர் தப்பு மட்டும் தான். அதுவும் பஸ் சின்னாபின்னமாகி உள்ளது அப்படியென்றால் ரயில் வரும் போது அதன் எதிரில் பஸ் நின்றிருப்பது போல இருக்கின்றது.


Gokul Krishnan
ஜூலை 08, 2025 17:34

மிகுந்த மன வேதனை அளிக்கிறது இந்தியாவில் சாதாரண மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லை . விமானம் ,ரயில், வழிபாட்டு இடங்கள் , விளையாட்டு மைதானம், நீதி மன்ற வளாகம் , மருத்துவமனை, சிறைச்சாலை, எங்கும் பொறுப்பற்ற முறையில் அதிகாரிகள் ,மக்கள் என்று இருப்பதால் இந்த வேதனை நிகழ்வு ஆனால் அரசியல் வியாதிகள் பதவியில் உள்ளோர் எவன் ஆட்சி செய்தாலும் ஆளும் எதிர் கட்சியினர் ராஜ வாழ்க்கை சுக போக வாழ்க்கை அனுபவிக்கின்றனர் மக்கள் தானாக திருந்தினால் தான் உண்டு


Mani
ஜூலை 08, 2025 17:15

கேட் திறந்திருந்தால் அந்த கேட்டிற்கு முன் உள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும். எனவே, ரயில் அந்த கேட்டைக் கடக்க வாய்ப்பில்லை. கேட் மூடியிருந்தால் மட்டுமே வரும் ரயிலுக்கு பச்சை விளக்கு கிடைத்து அதை கேட்டைக் கடக்கும். கேட் மூடியிருந்தால் பேருந்து அதைக் கடக்க வாய்ப்பில்லை. எனவே இந்த விபத்து எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. இருப்பினும், அநியாயமாக ஒன்றுமறியாத குழந்தைகள் விபத்தில் பலியானது மிகவும் சோகமான விஷயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை