உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் கொடூரம்: ஆட்டோவில் பாலியல் தொல்லை; 2 பேர் கைது

சென்னையில் கொடூரம்: ஆட்டோவில் பாலியல் தொல்லை; 2 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வட மாநிலத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவரது காதலனான வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர், சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரை சந்திக்க, வட மாநிலத்தில் இருந்து சென்னை, கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு, அதிகாலை இளம்பெண் வந்துள்ளார். அப்போது, எங்கு செல்வது எனத் தெரியாமல், பஸ் முனைய வளாகத்தில் சுற்றித் திரிந்து உள்ளார். இதை பார்வையிட்ட மர்ம நபர்கள் சிலர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி, கடத்த முயன்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5b6svwq3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது இளம்பெண் கூச்சலிட்டத்தை தொடர்ந்து, சாலையில் சென்றவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். உடனே போலீசார், சாலையில் சென்ற ஆட்டோவை விரட்டிச் சென்றுள்ளனர். போலீசார் தங்களை பின்தொடர்ந்து வருவதை அறிந்த மர்ம நபர்கள், அப்பெண்ணை இறக்கி விட்டு தப்பிச் சென்றனர். இளம்பெண்ணை மீட்ட போலீசார், அரசு காப்பகத்தில் ஒப்படைத்து விசாரிக்கின்றனர்.மேலும், சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். இளம்பெண் கடத்தப்பட்ட இந்த சம்பவம், கிளம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Kanns
பிப் 07, 2025 08:30

Could be Money Problems in Prostitution Gangs thriving in CMBTs


சூரியா
பிப் 07, 2025 06:49

ஆட்டோ ற்கான கட்டணத்தை அரசு திருத்தி அமைக்கவில்லை எனத் தாமாகவே கட்டண நிர்ணயம் செய்துகொண்டார்கள். முக்கால்வாசி ஆட்டோ ஓட்டுனர்கள் சமூக விரோதிகள்.


Nandakumar Naidu.
பிப் 06, 2025 15:58

இவர்களை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து 50 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்க வேண்டும். அல்லது என்கவுண்டரில் போட்டுத்தள்ள வேண்டும்.


Muralidharan S
பிப் 06, 2025 14:42

குற்றவாளிகள் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் சுதந்திரமாக திரிகிறார்கள்.. காவல்துறை கைது செய்தால், எவனாவது வட்டம், சதுரம், முக்கோணம் ன்னு வந்து காவல்துறையையே மிரட்டி கூட்டிக்கொண்டு, மீண்டும் தெருவில் விட்டுவிடுகிறார்கள் இந்த நாய்களை. கைது செய்த காவல்துறையை ஏளனமாக பார்த்து எகத்தாளம் செய்துவிட்டு செல்கிறார்கள் இந்த அரசியல் பின்புலம் உள்ள குற்றவாளிகள். காவல்துறை மாநில துறையில் இருந்து விடுவித்து தனி துறையாக ராணுவத்தை போல மத்திய பாதுகாப்பு துரையின் கீழ் கொண்டுவந்து சுதந்திரமாக பணிபுரிய விட்டுப்பாருங்கள்.. திராவிஷத்தால் மாசுபட்ட தமிழ்நாடு சுத்தமாகும். ஒரு காலத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டு இருந்த துறையை சீரழித்தவர்கள் திராவிஷன்கள்.


ponssasi
பிப் 06, 2025 13:51

இரவு ஒன்பது மணிக்குமேல் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளை வேட்டையாடும் காவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். கிளம்பாக்கம் டு கோயம்பேடு சுமார் 30 கிலோமீட்டர். குறைந்தபட்சம் இருபது இடங்களிலாவது காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். பெண் கடத்தப்பட்டது ஒரு ஆட்டோவில் எப்படி காவலர்களுக்கு தெரியாமல் 30 கிலோமீட்டர் வந்தது. காவலர்கள் பிடிக்கவும் இல்லை அவன் இறக்கிவிட்டு சென்றுவிட்டான். காவலர்கள் குடித்துவிட்டு வாகனம், ஹெல்மெட் இல்லை, RC புக், லைசென்ஸ் னு தலைக்கு கொஞ்சம் வசூலித்துவிட்டு சவகாசமாக சென்று இருப்பார்கள். கிளம்பாக்கம் டு கோயம்பேடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து தண்டனை அளிக்கவேண்டும்


RAMAKRISHNAN NATESAN
பிப் 06, 2025 13:33

முன்னேறிய ஒரு மாநிலத்தில் பிடிபடுவோம், சட்ட நடவடிக்கைக்கு ஆளாவோம் என்கிற அச்சமே இல்லாத நிலை நிலவுகிறது ....


Muralidharan S
பிப் 06, 2025 13:13

இங்கே தமிழ்நாட்டில் திராவிஷ அரசியல் கலாச்சாரம் ஆரம்பித்த பொழுதிலிருந்து திராவிஷ மனோபாவம் உடையவர்கள் கையில் சிக்குண்டு நாசமாகி போய்விட்டது . மூலக்காரணம், அதிக ரஜோகுணத்தை வளர்க்கும் மது மற்றும் உணர்ச்சிகளை தூண்டிவிடும் பிரியாணி கலாச்சாரம். தெருவெங்கும் மது மற்றும் அசைவ பிரியாணி கடைகள்... அதில் என்னவெல்லாமோ கலக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கோவில் இடங்கள் உள்பட எல்லா இடங்களிலும் இந்த அவலம்.. நரிகளும் / தெரு நாய்களும் உலாவும் இடமாக மாறிவிட்டது திராவிஷ நாடு. சத்துவ குணத்தை வளர்க்கும் அரசாங்க கல்வியோ / பள்ளிக்கூடங்களோ இல்லை.. சத்துவ குணம் வளர்க்கும் உணவுப்பழக்களும் இல்லை.. வெறிகொண்டு திரிகிறார்கள்கடவுள் பயம் / கர்மா மீது நம்பிக்கை இல்லாத திராவிஷமிகள் ...


Kandhavel
பிப் 06, 2025 14:31

சரியாக சொன்னீர்கள்


Rajkumar
பிப் 06, 2025 12:26

ஒரு 100 இந்துக்கள் தங்களுக்காக போராடவந்தாலே உடனே பிஜேபி மற்றும் இந்து முன்னணிகாரர்கள் என முத்திரை பதிக்கும் திராவிட கைக்கூலிகளே, நாலுக்கு நாள் அவர்களுடன் கூட்டம் கூட்டமாக சேரவைத்தவன் இந்த மைனாரிட்டி ஓட்டுக்காக இந்துக்களின் கோயிலுக்கு தினம் ஒரு அநீதி இழைக்கும், அமெரிக்கா, இத்தாலி மற்றும் சைனா வின் கூட்டாளி திராவிட கட்சிகள் தான்.


xyzabc
பிப் 06, 2025 12:05

பாலியல் சேதிகள் சகஜம் ஆகி விட்டது. வாழ்க திராவிட மாடல் அரசு


Kjp
பிப் 06, 2025 11:53

எல்லாவற்றிலும் தமிழ் நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கும் போது இந்த மாதிரி நிகழ்வு களை பின்னோக்கி விட முடியாது.முன்னுக்கு கொண்டு வருவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை