மேலும் செய்திகள்
திடீர் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சேதம்
19-Aug-2025
திட்டக்குடி : திட்டக்குடி அருகே மர்மமான முறையில் தீப்பிடித்து கூரைவீடு எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேலுாரை சேர்ந்தவர் அழகப்பன் மனைவி கண்ணம்மாள், 70; அழகப்பன் கடந்தாண்டு இறந்த நிலையில் கண்ணம்மாள் தனியாக வசித்து வருகிறார்.நேற்று இரவு 7:00 மணியளவில் அருகிலுள்ள தெருவுக்கு கண்ணம்மாள் சென்றார். இரவு 7:30 மணியளவில் மர்மமான முறையில் அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு மேலும் தீ பரவியது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்ற தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19-Aug-2025