உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கவுன்சிலர் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? இ.பி.எஸ்., கேள்வி

தி.மு.க., கவுன்சிலர் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? இ.பி.எஸ்., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., கவுன்சிலர் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tlr5y6go&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: அலங்கோல ஆட்சிக்குஅரக்கோணமே சாட்சி. அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் தி.மு.க., கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் தி.மு.க., அரசின் போலீசாரால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.தி.மு.க., இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான். பல தி.மு.க.,வினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான். இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை போலீசார் மிரட்டுகின்றனர். தி.மு.க., இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தி.மு.க., நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது. போதை இளைஞரிடம் கத்தி, பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது.இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது?இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன். உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா முதல்வர் ஸ்டாலின் ? ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது தி.மு.க.,? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு காக்கப்படுகிறதா? அப்படியெனில், யார் அந்த SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது. தி.மு.க., கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை. நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களை தி.மு.க.,வினரிடம் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
மே 27, 2025 20:53

போதைப்பொருள் இருக்கும் கையில் துப்பாக்கி கிடைப்பது என்ன கஷ்டமா?


S.L.Narasimman
மே 27, 2025 15:51

விடியல் தினம் போட்டோகாரர்களோடு பொம்மை மாதிரி ஊடகங்களுக்கு போசு கொடுப்பது கேவலமாக இருக்கிறது


தமிழ் மைந்தன்
மே 27, 2025 14:55

அவர் ஒரு பொம்மை தனது போட்டோகிராப்பர் கையில் அடிமையாக உள்ளார் என்பதற்காக இப்படியா சொல்வது


Kjp
மே 27, 2025 13:28

இங்கு எடப்பாடி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லை.தவறு நடக்கிறது என்று எடப்பாடி குற்றம் சாட்டினால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்வது கையாலகத்தனம்.


R.MURALIKRISHNAN
மே 27, 2025 15:31

அந்த துண்டு சீட்டு எழுதி தருபவர் 2 நாள் லீவண்ணே, வந்து தந்தவுடன் பதில் படிக்கப்படும்


V K
மே 27, 2025 18:35

பழனி பெரிய யோக்கிய சிகாமணி அவனை தான் முதலில் பிடிக்கணும்


V K
மே 27, 2025 12:59

இந்த கொசு தொள்ளை தாங்க முடியவில்லை டெய்லி வந்து தொள்ளை கொடுக்குது


மீனவ நண்பன்
மே 27, 2025 20:08

புது உபிஸ்., போல இருக்கே...ட்ரெயினிங் பத்தல


Santhakumar Srinivasalu
மே 27, 2025 12:58

தினமும் பேப்பரில் செய்தி வரவேண்டும் என்பதற்காக மைக் மேனியா (பைத்தியம்) ஆகி விட்டார் போல தெரிகிறது?


பாரத புதல்வன்
மே 27, 2025 12:28

அய்யா பொது மக்கள் தங்கள் பகுதிகளில் தங்கள் சேமித்து வைத்த பணத்திலிருந்து ,பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த பகுதிகளில் இது" தீ மு க வினர் உலவும் பகுதி, எச்சரிக்கையாக இருக்கவும்"என்று போர்டு வைத்து விடவும் அப்படி வைத்தால் புதிதாக யாரேனும் பாதிக்க படுவதை தடுத்து கொள்ளலாம்... ஏனெனில்"துஷ்டரை கண்டால் தூர விலகி செல்" என்ற பழமொழி க்கினங்க செயல் பட்டால் மக்களுக்கு நல்லது.


சி.முருகன்.
மே 27, 2025 12:20

அதிமுக எப்படி எட்பாடியிடம் வந்தது ? அய்யோ எம்.ஜி.ஆர் ., துவக்கிய அதிமுக உங்க கையில் வந்த வெளங்குமா ?


நல்லவன்
மே 27, 2025 12:09

அ.இ.அ.தி.மு.க வலிமையற்ற தலைமையாக உள்ளது. இயக்கம் பேரியக்கம். வலிமையான கட்டமைப்பு உள்ள இயக்கம் ADMK. ஆனால்ஸ்டாலினை எதிர்த்து களம் காணும் வலிமை எடப்பாடிக்கில்லை என்பது நிதர்சனம்... பாஜக துணையுடன் மேற்கு மற்றும் தெற்கில் சற்று வலிமையுடன் இருப்பது போல் தோன்றும்.


Kadaparai Mani
மே 27, 2025 18:10

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது .அதிமுக பெரும்பான்மை பெற்று எடப்பாடி முதல்வர் ஆவார் .


deva
மே 27, 2025 11:59

எல்லாம் பிளாக் money தான் தலைவா.... எல்லாம் அப்பாவி மக்கள் ஓட வரி பணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை