உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பலத்த பாதுகாப்பை மீறி சிறைகளுக்குள் மொபைல் போன், கஞ்சா எப்படி செல்கிறது?: ஐகோர்ட் கேள்வி

பலத்த பாதுகாப்பை மீறி சிறைகளுக்குள் மொபைல் போன், கஞ்சா எப்படி செல்கிறது?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'சிறைகளில், 'ஸ்கேனர்' உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், மொபைல் போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு எடுத்து செல்லப்படுகின்றன?' என, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி., அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.கொலை வழக்கில் கைதான பிலால் மாலிக், 35, சையது முகமது இஸ்மாயில் என்ற பன்னா இஸ்மாயில், 48 மற்றும் யோகேஷ், 40, ஆகியோர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை

சிறையில் உள்ள பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ், பன்னா இஸ்மாயிலின் மனைவி சமீம்பானு, யோகேஷின் சகோதரர் பிரகாஷ் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்:சிறைத்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதில், மூவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.அவர்களுக்கு உரிய சிகிச்சை, இதுவரை வழங்கப்படவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, உரிய சிகிச்சை அளிக்க கோரிய மனுக்களை பரிசீலிக்க வேண்டும்.கடுமையாக தாக்கிய சிறை ஜெயிலர், துணை ஜெயிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறியுள்ளனர்.இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பி.புகழேந்தி ஆஜராகி, ''சிறை அதிகாரிகள் சோதனையில், கைதிகளிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால், கைதிகளை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவர்களுக்கு இதுவரை முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை,'' என, குற்றஞ்சாட்டினார்.

ஆய்வு

இதை மறுத்த அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக், ''திடீர் சோதனையில் கைதிகளிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகள் தான் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் தங்களை பாதுகாத்து கொள்ளவே அதிகாரிகள் முயன்றனர்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கைதிகள், சிறை அதிகாரிகள் இடையே நடந்த இச்சம்பவம் தொடர்பாக, நீதிமன்றம் உண்மைகளை கண்டறிய விரும்புகிறது.இந்த வழக்கில், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் எதிர்மனுதாரராக இணைக்கப்படுகிறார். அவர், மருத்துவ குழுவை நியமித்து, கைதிகள் மூவரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கைதிகளை முழுமையாக ஆய்வு செய்து, மருத்துவர்கள் குழு, வரும், 21ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும்.மாநிலம் முழுதும் உள்ள அனைத்து சிறைகளிலும், 'ஸ்கேனர்' உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இருப்பினும், சிறைகளுக்குள் மொபைல் போன், கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றன; பாதுகாப்பு மீறல் எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து, சிறைத்துறை டி.ஜி.பி., உள்ளிட்டோர் ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Karthik
ஜன 18, 2025 20:46

வக்கீலா சர்வீஸ் பண்ணாம, நேரடி அப்பாயின்மென்ட் ல ஃபிரெஸ் ஆ வந்திருப்பாரோ இந்த வெள்ளந்தி ஜட்ஜு?? அதைதான் எல்லா தமிழ் சினிமாவிலும் தெளிவா காட்டுறாங்களே.. அதகூடவா பாத்துருக்க மாட்டாரு?? ஐயோ பாவம்


Ray
ஜன 18, 2025 12:32

பெரிய முக்கியமான சிறைச்சாலைகளின் வெளிவாயிலிலேயே துப்பாக்கியேந்திய CISF படை பாதுகாப்பு ஏற்பாடு செய்யலாம் மாநில போலீசையும் முழுமையாக செக் செய்தே உள்ளே / வெளியே அனுப்ப உத்தரவிடலாம்


pmsamy
ஜன 18, 2025 11:16

நீதிமன்றத்திலேயே பாகுபாடுகள் வேறுபாடுகள் இருப்பதால் அவர்களுக்கு கேட்க தகுதி இல்லை


என்றும் இந்தியன்
ஜன 18, 2025 11:11

என்ன கோர்ட்டெ இது கூடவா தெரியாது உனக்கு. சிறை காவலர்கள் உபயம் காசுக்கு சாமான்


Dharmavaan
ஜன 18, 2025 09:57

எந்த தனிப்பட்ட ஊழலை விசாரிப்பதை விட வருமானத்துக்கும் திகமான சொத்து மட்டுமே விசாரித்தால் எல்லாம் வெளிப்பட்டுவிடும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 09:29

ஆரிய கோர்ட் என்பதால் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறது ...........


baala
ஜன 18, 2025 09:27

லார்ட் , ஒருவேளை புல்புல் பறவை கொண்டு செல்லலாம்.


Shekar
ஜன 18, 2025 09:27

எஜமான் என்ன இப்பிடி பச்சபுள்ளையாட்டம் கேட்குறீங்க, உள்ளே பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் செயல் படுதுன்னு பலவருஷமாவே சொல்றாங்க, அது மட்டுமா, 5 ஸ்டார் போல சாப்பாடும் கிடைக்குமாம், அங்கே டாஸ்மாக்கும் உண்டாம், ஸ்பெஷல் ஆட்களுக்கு பலான விடுதி வசதிகளும் உண்டாம். இது உலகறிந்த விஷயம், நீங்க என்னடானா நம்ம ஊர் ஜெய்ல மொபைல் போன், கஞ்சா மட்டும்தான்னு மட்டமா நினச்சிடீங்க.


Ray
ஜன 18, 2025 12:36

இவையனைத்தும் உலகப் புகழ்பெற்ற டில்லி திகார் ஜெயில் நடப்பை சொல்றார் ஒருவேளை சொந்த அனுபவமோ


Sampath Kumar
ஜன 18, 2025 09:17

காலம் காலமாக பொய் கிட்டு தான் இருக்கு இந்த ஆட்சி என்று இல்லை எல்லா கட்சி ஆட்சிலும் இதே அக்கா போர் தான் கரணம் கள்ளன் போலீஸ் உறவு தான் வேறு என்ன ஒன்றும் பண்ண முடியாது


Sudha
ஜன 18, 2025 08:58

அப்படியே இன்னும் 2 3 கேள்விகள் இருக்கு, அதையும் கேட்டா நல்லா இருக்கும். ஏன் லஞ்சம் கேட்கிறாங்க, ஏன் தீர்ப்புகள் தாமதம் ஆகின்றன, ஏன் இலவசங்களை தருகிறார்கள், எப்படி100 கோடி சொத்து சேர்க்க முடிகிறது அதுவரை வருமான வரி துறை, அமலாக்க துறை என்ன செய்து கொண்டிருndhadhu