உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூகநீதி எப்படி சாத்தியமாகும்: தமிழக பா.ஜ., கேள்வி

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்: தமிழக பா.ஜ., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்யும் திமுக உடன்பிறப்புகள் இருக்கையில் சமூகநீதி எப்படி சாத்தியமாகும்? என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 56% அதிகரித்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. பெண் கல்வியையும், பெண் சுதந்திரத்தையும் போற்றி வளர்த்த தமிழகம், இன்று சூதுவாது அறியா சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என்பதை தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது? தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளாக பாலியல் குற்றங்களும், பதின்ம வயது கருத்தரித்தலும், குழந்தைத் திருமணங்களும் கட்டுப்பாடின்றி பெருகி வருகிறதே, ஸ்டாலின் ஆட்சியில் மகளிர் முன்னேற்றம் என்பதன் அர்த்தம் இதுதானா? அதுசரி சாதியக் கட்டுப்பாடு, பெண்கள் பாதுகாப்பு, பகுத்தறிவு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் திமுக ஆட்சியில் நிலைகுலைந்து கிடக்கையில், குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதை பற்றி மட்டும் இந்த அரசுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது? திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்யும் திமுக உடன்பிறப்புகள் இருக்கையில் சமூகநீதி எப்படி சாத்தியமாகும்?இப்படி தங்களின் சீர்கெட்ட ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்கத் தான் இந்தி எதிர்ப்பு, தொகுதி மறுவரையறை, மாநில உரிமை என வாரத்திற்கு ஒரு புதிய புரளியைக் கிளப்பி மக்களை மடை மாற்றிக் கொண்டிருக்கிறாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

புரொடஸ்டர்
ஜூன் 10, 2025 08:35

பாஜக மத்திய அரசு ஆட்சி ஆரம்பித்த நாள் முதல் நீதி காலாவதியாகிவிட்டது


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 10, 2025 12:36

இந்திய வரலாற்றில் ஒரு மலைஜாதி இனத்தை சேர்ந்த பெண்ணை ஜனாதிபதியாக்கி, தாழ்த்தபட்டவரை கட்சியின் தலைவராக்கி ...அதிக அளவு தாழ்த்தப்பட்ட எம்பிகளையும் வைத்திருக்கும் பிஜேபி சமூக நீதியில்லாத கட்சியா ...ஊசிகாதில் ஒட்டகங்கள் நுழைந்தாலும் நுழையலாம் ஆனால் ஒரு தலித்தோ, தாழ்த்தப்பட்டவரோ திமுக கட்சி பொறுப்பிற்கு வரமுடியுமா ? நடக்குமா ? திராவிட இயக்கம் இல்லாத மாநிலங்களில் தலித்துகள் எப்பொழுதோ முதல்வராகி விட்டார்கள் ....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 10, 2025 07:02

பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்யலைன்னா கழக ஆட்சி நடப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் ...


J.Isaac
ஜூன் 10, 2025 06:42

சமூக நீதி பற்றி பேசும் நாகேந்திரன் அவர்கள், கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தென் தமிழ்நாட்டில் சமூகநீதி எப்படி இருந்தது என்ற சரித்திரத்தை படிக்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 10, 2025 06:30

மது போதை விற்கும் திமுக தலைவர்கள் இருக்கையில் என்று கேட்டிருக்க வேண்டும், அந்த கட்சி தமிழகத்தின் ஒரு சாபம்


Kasimani Baskaran
ஜூன் 10, 2025 04:10

மது, மாது, போதை என்று மூன்று வார்த்தைக்குள் திராவிடத்தை அடக்கி விடலாம்.. PhD பட்டம் வாங்கியிருந்தாலும் பிளாஸ்டிக் சேர் என்ற கோட்பாட்டில் சமூக நீதி பல்லிளித்ததை உலகமே பார்த்தது.


Rajarajan
ஜூன் 10, 2025 04:02

சமூக நீதி சாத்தியமாக, உண்மையிலேயே ரெண்டு வழி தான் இருக்கு. ஆனால், அது நடக்கவே நடக்காது. அவை என்ன ?? முதலில், திராவிட சார்பாளர்கள் / ஆதரவாளர்கள் / கட்சிகாரர்கள், பிராமணரை குறைகூறுவதை நிறுத்தி, தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தாழ்த்தப்பட்ட என்ற கூறப்படும் பிரிவினரில் பெண் கொடுத்து, பெண் எடுக்க வேண்டும். இரண்டாவது, ஜாதி அடிப்படையில் இடவொதுக்கீடு பெற்ற குடும்பத்தினரை அதிலிருந்து விலக்கு அளித்து, அதே பிரிவில் மற்ற குடும்பத்தினரை உயர்திவிட வேண்டும். மேற்சொன்ன இரண்டையும், யாரும் ஒப்புக்கொள்ள போவதில்லை. இப்போது சொல்லுங்கள், சமூகநீதி நடக்கிற காரியமா ?


M Ramachandran
ஜூன் 10, 2025 00:52

வெளியில் வீர வசனம் டெல்லிக்கு சென்று கால் பிடித்தல். இது தான் திராவிட கொள்கை


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 10, 2025 07:04

சரியாக சொன்னீர்கள் ..டெல்லிக்கு காவடி தூக்கி ..கால்பிடித்து ... ஆட்சியை... பதவியை காப்பாற்றி கொள்வது அவர்களுக்கு கைவந்த கலை .. நேருவின் மக்களே வருக ...அன்னபூரணி தாயே .. என்றெல்லாம் பேசி சாதித்து விடுவார்கள் ..


M Ramachandran
ஜூன் 10, 2025 00:48

திராவிடம் என்பது சுத்த ஹம்பக். ஏமாற்று வேலை.குடும்பத்துடன் தமிழ் நாட்டு கஜானாவை பதவியை வைத்து கொள்ளை அடித்தல் .


AAPOBCWINGTAMILNADU
ஜூன் 09, 2025 23:17

தமிழ்நாட்டில் சமுக நீதி சிறப்பாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் தான் சமுக நீதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 10, 2025 07:05

நகைசுவை உணர்வின் உச்சக்கட்டம் ...


தாமரை மலர்கிறது
ஜூன் 09, 2025 22:52

பாலியியல் குற்றங்களை மறைக்க தான் மும்மொழி எதிர்ப்பு, மாநில உரிமை, வரிஏய்ப்பு , பகுத்தறிவு, காவேரி தண்ணீர், கச்சத்தீவு, தமிழ்ப்பற்று என்று பலவற்றை தினமும் உருட்டிக்கொண்டிருக்கிறார்கள். அத்தனையும் பொய்யா கோவாலு? என்று கேட்கத்தோன்றுகிறது.


சமீபத்திய செய்தி