உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்: தமிழக அரசு மீது விஜய் கடும் விமர்சனம்

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்: தமிழக அரசு மீது விஜய் கடும் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை,'' என்று த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fdqxg4p4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Saai Sundharamurthy AVK
ஜன 12, 2025 09:33

விஜய் முதலில் அண்ணாவையும், பெரியாரையும் கைவிட வேண்டும். திராவிட தலைவர்களை எல்லாம் தலை முழுகி விட வேண்டும். அவர்களின் கொள்கைகளை காய் விட்டு விட்டு, அவர்களை கண்டாலே நாயை கண்டது போல் நினைத்து தூர விலகி விட வேண்டும். குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கொள்கைகளை கைவிட வேண்டும். தேசப்பற்று மற்றும் இந்திய இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும்.


Mediagoons
ஜன 11, 2025 21:58

பாஜவின் கொத்தடிமை வரிசை நீள்கிறது


veera
ஜன 12, 2025 05:54

பரெர இதை திராவிட கொத்தடிமை சொல்லுது


Anonymous
ஜன 12, 2025 08:48

என்ன கொத்தடிமை? என்ன வரிசை? கொஞ்சம் விளக்கவும், மத்திய அரசு நிதி ஒதுக்கியும், அதை உங்க விடியா அரசு செய்ய என்று கூறியுள்ளது, ஏன்னா இந்த திட்டத்தில் விடிய அரசுக்கு கொள்ளை அடிக்க வழி இல்லை, உங்க விடிய அரசு செய்த தில்லுமுல்லு வெளிய தெரிஞ்சும், பாஜக கொத்தடிமை, அப்படி இப்படின்னு உளர வேண்டியது, கேவலமாக இல்லையா ?


sankar
ஜன 11, 2025 21:23

துரோகம் தவிர வேறு எதுவும் திமுக செய்தது கிடையாது. கச்சத்தீவை தாரைவார்த்தார்கள். காவிரி, முல்லைப்பெரியார் விவகாரத்தில் விலகி நின்றார்கள். ஸ்டர்லைட் திறந்துவைத்து விரிவாக்கத்தற்கு இடம் தந்து அனுமதியும் தந்தவர்கள் இவர்கள். மீத்தேன், நீட் தேர்வுக்கு கையொப்பம் இட்டார்கள். டங்ஸ்டன் இங்கே இருக்கிறது, சுரங்க அனுமதி தாருங்கள் என்று கேட்டவர்களே இவர்கள்தான். இன்னும் சொல்வேன்.. சமூகநீதிக்காக துரும்பைகூட கிள்ளிப்போடாதவர்கள் இவர்கள்.


Chinnamanibalan
ஜன 11, 2025 19:20

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு உண்மையிலேயே திமுக வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால், ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக ஒதுங்கி விட்ட நிலையில், இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க, களத்தில் இறங்கி ஆளும் திமுக வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும்.


தமிழன்
ஜன 11, 2025 18:32

பார் புகழும் மதுரையோ பணி நிறைந்த சென்னையோ கலைஞர் பெயரை சொல்லாமல் கட்டாயம் இல்லை மக்கள் சொத்து. இந்த நூற்றாண்டில் மட்டும் அல்ல பல நூறு ஆண்டுகள் கடந்தும் ஊழல் இருக்கும் வரை கருணாநிதி பெயர் இருக்கும்.


T.sthivinayagam
ஜன 11, 2025 18:18

திமுகா 1.0 அதிமுக 2.0 பாஜகா 3.0 காலத்தின் அடிப்படையில் ஏமாற்றும் கட்சியை தான் விஜய் சொல்கிறார்


nv
ஜன 11, 2025 18:09

வெறும் அறிக்கை புலி.. வெச்சு செய்யப் போகிறது தமிழக மக்கள் இந்த திருட்டு திராவிட கும்பலையும், வெற்று வேட்டு Joseph விஜய் போன்ற ஆட்களையும் ..


அப்பாவி
ஜன 11, 2025 18:04

காங்கிரஸ் 100 வருஷம். தி.மு.க ஒரு 60 வருஷம். அதிமுக ஒரு முப்பது வருஷம். பா.ஜ ஒரு 15 வருஷம். விசய் தம்பி ஆட்சியப்.புடிச்சா ஒரு 19 வருஷம்.


Venkatasubramanian krishnamurthy
ஜன 11, 2025 17:17

நீட் தேர்வு கூடாதென சொல்லும் தமிழக மாநிலக் கட்சிகள் எல்லாமே ஏமாற்றுப் பேர்வழிகள்தான். தவெக கூட அந்த நிலைப்பாடு கொண்டதுதான். இந்த அறிக்கையின் தன் ஏமாற்றுக் கொள்கையை இனி மாற்றிக் கொள்ளப் போகிறதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.


M Ramachandran
ஜன 11, 2025 16:59

மக்கள் தலை யிருக்கும் வரை ஏமாளிகள் தலை இருக்கும் வரை என்னைய்ய தடவி ஆட்டிக்கொண்டு தான் யிருப்போம். அது தமிழ்நாட்டு மக்களின் தலை விதி. வந்தாரை வாழவைக்கும் நாடு. கேரளா காரனும், கஃப்கார்னாடகா காரனும் ஓங்கோலு பரம்பரைக்கு குத்தகை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை