உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமல் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனுவில் சொன்னது இதுதான்!

கமல் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனுவில் சொன்னது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனுவில் கமல் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தகவல் வெளியாகி உள்ளது. அதில், தனக்கு நான்கு கார்கள் உள்ளன. ரூ.49.67 கோடி கடன் உள்ளது என கமல் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும் ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கமல் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் பின்வருமாறு:https://www.youtube.com/embed/ofKSgOwrhGIநடிகர் கமல் சொத்து மதிப்பு விபரம் பின்வருமாறு:* 2023-24ம் நிதியாண்டில் வருவாய்- ரூ.78.90 கோடி. * அசையும் சொத்துகளின் மதிப்பு- ரூ.59.69 கோடி.* ஒட்டுமொத்த அசையா சொத்துக்கள்- 245 கோடியே 86 லட்சம் ரூபாய்

4 கார்கள்

* மகேந்திரா பொலிரோ,* மெர்சிடஸ் பென்ஸ்,* பி.எம்.டபிள்யூ., * லக்சஸ் ஆகிய நான்கு கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி.

ரொக்கம்

கையில் இருக்கம் பணம்: ரூ.2.60 லட்சம்.

கடன்

வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன் தொகை: ரூ.49.67 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Yes God
ஜூன் 14, 2025 11:44

சொத்து விவரங்கள் ஏதும் மக்களுக்கு தொண்டு செய்ய விரும்பும் வேட்பாளருக்கு தேவையா. அவரது சுய இயல்புகள் வாழ்க்கை தரம் பழகும் தன்மை கடவுள் நம்பிக்கை பிறருக்கு உதவிடும் வாரமற்ற இலவச தொண்டு போன்றவை போதாதா.வெள்ளைக்காரன் காலத்திய வேட்பு மனு பார்மேட் விவரங்களை குப்பையில் போடவேண்டும்.


Yes God
ஜூன் 14, 2025 11:39

எஸ் காட் என குறிப்பிட்டு கருத்து கேட்பதால் என் தனி விவரம் ஏதும் தேவை இல்லை.இப்போது தமிழக மக்களுக்கு அபாயமான காலம்


Saai Sundharamurthy AVK
ஜூன் 07, 2025 23:13

உருட்டு, பொய் என்பதெல்லாம் பற்றி இவருக்கு திமுக சொல்லிக் தர வேண்டியதில்லை. அது இவருடைய ரத்தத்திலேயே ஊறிக் கிடக்கிறது.


hariharan
ஜூன் 07, 2025 19:20

எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே......இவருக்கு வீடு எங்கே இருக்கிறது, நிம்மதி எங்கே இருக்கிறது?


sri
ஜூன் 07, 2025 17:52

அசையா சொத்து 245 கோடி. இதன் விபரங்களை தினமலர் வெளியிட வேண்டும்


vee srikanth
ஜூன் 07, 2025 17:48

அசையும் சொத்து ரூ 59 கோடி - கடன் ரூ 49 கோடி - தலை சுத்துது ஆண்டவா


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 07, 2025 17:48

தில்லி பப்புக்கு ட்ரீட்மெண்ட்டு தேவை .....


என்றும் இந்தியன்
ஜூன் 07, 2025 17:41

ரூ 245 கோடி அசையா சொத்தாம் கடன் ரூ 49 கோடியாம் கையிலிருக்கும் பணம் ரூ 2.6 லட்சமாம்??திருட்டு முரடர்கள் கயவர்கள் கழகத்தின் சரியான வாரிசு தான் இது


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2025 17:40

இவரால் வாழ்க்கை இழந்தவர்கள் பற்றியும் இங்கே சொல்வீர்களா ?


Kasimani Baskaran
ஜூன் 07, 2025 15:54

சொத்து இருக்கிறது - ஆனால் தீம்க்கா பக்கியானபின்னர் அவருக்கு மதிப்புதான் கிடையாது..