உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு எவ்வளவு கட்டணம்? தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்ணயம்

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு எவ்வளவு கட்டணம்? தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்ணயம்

சென்னை; தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழகத்தில் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், 3,450 எம்.பி.பி.எஸ்., இடங்களும், தனியார் மருத்துவ பல்கலையில், 550 எம்.பி.பி.எஸ்., இடங்களும் உள்ளன. அதில், 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன.அந்த இடங்களுக்கான, இந்தாண்டு கல்வி கட்டணத்தை, நீதிபதி ஆர்.பொங்கியப்பன், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ப.செந்தில்குமார், டாக்டர் கீதாலட்சுமி, ஆர்.பாலசந்திரன், கே.ஆனந்தகண்ணன் ஆகியோர் அடங்கிய குழு, பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின் இறுதி செய்துள்ளது.

அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

மொத்தம், 21 சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 4.35 லட்சம் ரூபாய் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் என, அனைத்து கல்லுாரிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 27 லட்சம் ரூபாய் கட்டணம். இதை தவிர, நான்கு தனியார் பல்கலைகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தலா 5.40 லட்சம்; நிர்வாக இடங்களுக்கு 16.20 லட்சம்; என்.ஆர்.ஐ., இடங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதை தவிர, கூடுதலாக, 60,000 ரூபாய் வரை மேம்பாட்டு நிதியாக வசூலிக்கலாம். மற்றபடி, கல்வி கட்டணம், சிறப்புக் கட்டணம், சேர்க்கை கட்டணம் என, அனைத்து விதமான கட்டணங்களும் இதற்குள் அடங்கும்.

நன்கொடை கூடாது

அதேநேரம் விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவுக் கட்டணம் இதில் அடங்காது. இதைத் தவிர, எந்த வகையிலும் கூடுதல் கட்டணமோ, நன்கொடையோ பெறக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்கள், கல்லுாரிகளைத் தேர்வு செய்வதற்கு முன், அதற்கான கட்டண விபரங்களை முழுமையாக அறிந்து முடிவு எடுக்குமாறு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Seekayyes
ஜூலை 15, 2025 17:14

No donation is it? As if these private colleges will listen or follow this directives.


venugopal s
ஜூலை 15, 2025 11:56

நீட் தேர்வு வந்த பிறகு ஏழை மாணவர்கள் இலவசமாக மருத்துவம் படிக்க முடிகிறது என்று கம்பு சுற்றும் சங்கிகள் எங்கே போனார்கள்? தனியார் மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு வருவதற்கு முன்பு ப்ளஸ் டூ மார்க் அடிப்படையில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் கொள்ளை அடித்தனர் இப்போது நீட் தேர்வு மார்க் அடிப்படையில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் கொள்ளை அடிக்கின்றனர், ஒரு வித்தியாசமும் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் மட்டுமே ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சாத்தியப்படும்.இதைத் தவிர மேனேஜ்மென்ட் கோட்டாவில் கேப்பிடேஷன் ஃபீஸ் கொள்ளையும் கோடிகளில் கருப்புப் பணமாக வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்!


ஆரூர் ரங்
ஜூலை 15, 2025 12:51

திமுக அரசு எல்லா தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் அரசுடைமையாக்கி இலவச கல்வி அளிக்கட்டும் பார்ப்போம். 200 க்கு இது டூ மச் சார்.. முன்பு நன்கொடை என்ற பெயரில் கறுப்பில் கோடிகளை வசூலித்து மூர்க்க ஹவாலா மூலம் அன்னிய வங்கிகளுக்கு அனுப்பினார்கள். இப்போது பிஜெபி அரசு 15 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து 60 சதவீத நிதியையும் அளித்துள்ளது. தனியார் கல்லூரிகளின் கட்டணமும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்துக்கு இடமில்லை.


theruvasagan
ஜூலை 15, 2025 16:20

உண்மையிலேயே ஏழை மாணவர்கள் மிது அக்கறை இருக்குமானால் அரசு தனியார் கல்லூரி கட்டணத்தை ஏழை மாணவர்களுக்காக தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் இதுவரை கோடிகளில் அள்ளிய தனியார் மருத்துவக் கல்லூரி கல்வித் தொந்திகள் கட்டணம் வசூலிக்காமல் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கற்பிக்க வேண்டும்.


Prabhakar
ஜூலை 15, 2025 11:05

Management quota fees not mentioned above. SMART Dinamalar. (நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் என, அனைத்து கல்லுாரிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 27 லட்சம் ரூபாய் கட்டணம். Please read accurately) Management quota fee increased from 13.5 lakh to 15L per annum. Neighbouring states has less fee. Karnataka 12L, Kerala 8 L, Andhra pradesh 13.3L, only Tamilnadu fee revised for no reason Double standards of DMK - proing NEET oneside and increasing the fee structure otherside No media has GUTS to talk about this


Ptpoulraj
ஜூலை 15, 2025 10:54

அப்படின்னா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் மருத்துவர்கள் ஆவது சாத்தியம் இல்லை இது தான் ஏழைகளின் இந்தியா?


ஆரூர் ரங்
ஜூலை 15, 2025 11:15

தெரியாமல்தான் பதிந்துள்ளீர்கள்? அரசு மருத்துவக்கல்லூரிகளில் கூட முழுமையான இலவசக் கல்வி கிடையாது. தனியார் எங்கிருந்து தருவார்கள்?.


ASIATIC RAMESH
ஜூலை 15, 2025 09:32

மெய்யாலுமே அவ்வளுவுதானா வாங்குறாவுக... அவ்வளவு சீப்பா போயிடுச்சா.. சில பொறியியல் கல்லூரிகளிலேயே இதைவிட அதிகம் வாங்குறதா கேள்விப்பட்டேன்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை