உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆள் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட அந்த இளம்பெண்ணை மீட்பதற்காக, காதலனின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nkytfx4p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவ்வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் புதிய பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு, திருவள்ளூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது, பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகிவிட்டதாகவும், தொடர்ந்து அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் தலைமறைவாக உள்ள ஜெகன்மூர்த்தியை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று (ஜூன் 30) உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்திக்கு நீதிபதிகள் முன் ஜாமின் வழங்கினர். அதுமட்டுமின்றி ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. பிணைத்தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Venkateswaran Rajaram
ஜூலை 01, 2025 10:46

உச்சநீதிமன்றம் பெயருக்கு பதில் ஜாமீன் நீதிமன்றம் என்பது பொருத்தமாக இருக்கும் ....அனைத்து கொள்ளையர்களுக்கும், கொலைகாரர்ககுக்கும், குற்றவாளிகளுக்கும் ,ஊழல் பேர்வழிகளுக்கும் சாப விமோச்சனம் கிடைக்கும் புனிதமான இடம்


tamilvanan
ஜூலை 01, 2025 01:52

சுப்ரீம் கோர்ட்டின் அடிப்படை கடமைகளை மீறிய செயல் இது. எல்லோரும் கண்டிக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் படி சுப்ரீம் கோர்ட் கடைசி அப்பீல் கோர்ட். இந்த விஷயத்தில் முதல் அப்பீல் கோர்ட்டாகவே மாறிவிட்டது. ஜெகன்மூர்த்தியை முதலில் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துக்கு அங்கே இருக்கும் கோர்ட்டுக்களை அணுகி ஜாமீன் பெற்று இருக்க வேண்டும். உச்ச நீதி மன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட புகார்களை ஆராயாமல் ஏனிப்படி இந்த மாதிரி தடை விதிக்கவேண்டும். இப்படி எல்லோரும் சுப்ரீம் கோர்ட்டை அனுகி தடை வாங்கினால் உள்ளூர் கோர்ட்டுக்கள் எப்படி வேலை செய்யும். அவற்றுக்கு என்ன vElai.


Perumal Pillai
ஜூன் 30, 2025 18:54

One thing is very clear: this verdict wasn’t delivered based on the merits of the case, but on the merits of something else—known only to the accused and the judge.


Rajan A
ஜூன் 30, 2025 18:42

எல்லா வழக்குகள் டெல்லி போனால் மற்ற நீதிமன்றங்கள் எதற்கு? ஒருத்தன் தலைமறைவாக ஓடுவதற்கு என்ன காராணம்? இந்த கொலீஜியம் முறையை மாற்றி பார்த்தால் என்ன?


RAJ
ஜூன் 30, 2025 18:36

சிரிப்பு சபை....


rama adhavan
ஜூன் 30, 2025 18:31

பணம் பத்தும் செய்யும். ஜாமீனும் வாங்கும். இவரை போலவே ஜாமீன் /தடை உத்தரவில் உள்ள தமிழக அரசியல் தலைகளையும் குறை சொல்லுங்களேன். ஏன் தயக்கம்?


Ethirajan Re
ஜூன் 30, 2025 17:49

அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி தவறான புரிதலில் தான் ஜாமீன் தரவில்லை என்று எனக்கு தோன்றியது.


Ethirajan Re
ஜூன் 30, 2025 17:47

உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி வருகிறது என்று புரியவில்லை.


Perumal Pillai
ஜூன் 30, 2025 17:34

A court for the criminals, by the criminals, of the criminals, with the criminals and under criminals. Nadu velangum.


ponssasi
ஜூன் 30, 2025 17:13

மாவட்ட நீதிமன்றங்களை உயர்நீதி மன்றங்கள் மதிப்பதில்லை, உயர்நீதிமன்றங்களை உச்சநீதி மன்றங்கள் மதிப்பதில்லை. இவர்கள் இருவரையும் காவல்துறை மதிப்பதில்லை, இந்த மூவரையும் அரசியல்வாதிகள் மதிப்பதில்லை அரசியல்வாதிகளை மக்கள் மதிப்பதில்லை உலகம் ஒரு உருண்டை என்பது உண்மைதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை