உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு; உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் நயினார் நாகேந்திரன்

பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு; உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை சமைக்க வைத்திருந்த உபகரணங்களை சேதப்படுத்தி, குடிநீர் தொட்டியிலும் மனிதக் கழிவுகளை கொட்டியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள், குற்றவாளிகளின் மனதில் மனிதத்தன்மையோ, போலீசார் மீது பயமோ இல்லாததையே காட்டுகிறது.பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முதல், பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர் தொட்டி வரை சமூக விரோதிகளால் மனிதக் கழிவு கலக்கப்படும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து எப்போது வாய் திறப்பார் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்? சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? தொடக்கப் பள்ளி சிறுவர் சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இறுதி காலம் நெருங்கி விட்டது!

இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவு: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உட்பட 10 பேர் மீது மின்சாரம் தாக்கியதாகவும், தி.மு.க., கொடிக்கம்பம் சரிந்ததில் எடப்பாளையம் அருகே இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் “சாரி” என்ற வார்த்தையைக் கூறி சமாளித்து விடுவார் நமது முதல்வர் அவர்கள். தி.மு.க.,வின் கொடிக் கம்பங்களாலும், தி.மு.க., தலைவர்களின் கட் அவுட்களாலும் நடக்கும் விபத்துகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது இது ஒன்றும் முதன்முறையல்ல. அறிவாலய அரசின் இந்த அராஜக ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பேசும் தமிழன்
ஜூலை 15, 2025 07:45

எல்லாம் நம்ம திருட்டு டாஸ்மாக் ஆட்களாக தான் இருப்பார்கள்.... இது தான் பெரியார் மண்.


pmsamy
ஜூலை 15, 2025 07:01

தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க நினைக்கும் பாஜகவின் செயல் இப்படித்தான் இருக்கும்


vivek
ஜூலை 15, 2025 08:54

அதுல உனக்கு ஒரு கிளாஸ் தண்ணி குடிக்க கொடுங்க


pmsamy
ஜூலை 15, 2025 06:02

வலுவான சந்தேகம் பாஜக மீது தான்


guna
ஜூலை 15, 2025 08:57

உன் பெயரில் முதல் எழுத்து உன் தகுதியை காட்டுகிறது


Kasimani Baskaran
ஜூலை 15, 2025 04:11

மனிதத்தன்மை இல்லாத செயல்.


சிட்டுக்குருவி
ஜூலை 14, 2025 23:15

எல்லா குற்றங்களுக்கும் மூல காரணமே சாராயம்தான் .சாராயம் அரசே விற்பது உலகில் எங்குமே காணப்படாத உலகத்துக்கே முதன்மையானதாக மாற்றியதே சாராய சாமராஜ்ய அரசின் சாதனை .சாராயம் விற்பதை தவிர இந்த அரசுக்கு எதுவுமே தெரியாது ,


ராஜா
ஜூலை 14, 2025 21:22

சாராய வியாபாரிகள் இப்போது எப்படி எல்லாம் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரூம் போட்டு யோசிப்பாங்க போல


V Venkatachalam
ஜூலை 14, 2025 21:01

இது என்ன? மிகவும் வேதனைக்குரிய செய்தியாக இருக்கே.. சிறிதும் மனிதாபிமானமற்ற செயல். பிஞ்சு உள்ளங்களில் இப்பவே நஞ்சை கலக்கிறார்களே பாவிகள். இந்த கொடுஞ்செயலை செய்தவன்கள் வேற்று கிரகத்தில் இருந்தா வந்திருப்பார்கள்? ? அந்த குழந்தைகள் உங்களுக்கு என்ன பண்ணினாரகள்? இவன்களை பப்ளிக் கில் வைத்து நைய புடைக்க வேண்டும். மனம் கொதிக்கிறதடா பாவிகளா.


Vel1954 Palani
ஜூலை 14, 2025 20:23

திருச்சியில் கூட இதே நிகழ்ச்சி நடந்து பத்திரிக்கைகளில் வெளி வந்தது. ஆனால் திராவிட மடல் திறமையாக அண்ணா யூனிவர்சிட்டி சாரை போல அப்படியே அமுக்கி விட்டார்கள். இன்னமும் குக்கிராமங்களில் தீண்டாமை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.


Santhakumar Srinivasalu
ஜூலை 14, 2025 20:06

இந்த சமூக குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தாலும் தப்பில்லை?


Ramesh Sargam
ஜூலை 14, 2025 19:59

திமுக அல்ல திகமுக திராவிட க.......வு முன்னேற்ற கழகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை