உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க., பற்றி நான் இழிவாக பேசவில்லை: வைகோ

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க., பற்றி நான் இழிவாக பேசவில்லை: வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ''அ.தி.மு.க., பற்றியோ, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா பற்றியோ இழிவாக எந்த கருத்தையும் கூறவில்லை,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

பெரும்பான்மை

திருச்சியில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வரும் 2026 தேர்தலில், தி.மு.க., அறுதி பெரும்பான்மை பெறும்; கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். கூட்டணி அரசு வேண்டும் என்று நான் விரும்பவில்லை. தமிழக மக்களும் கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டார்கள்.தமிழகத்தை சனாதன சக்திகள் கபளீகரம் செய்ய திட்டமிடுகின்றன. மோடி, அமித் ஷா மற்றும் பா.ஜ.,வினர் அதற்கு கடுமையாக முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி மண்ணோடு மண்ணாகும். இந்திய அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டிய நபர் அமித் ஷா. தி.மு.க., அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை அமித் ஷா நிச்சயம் பார்ப்பார்.

அங்கீகாரம்

செய்தியாளர்கள் திரும்ப திரும்ப கேட்டதால், 'எட்டு இடங்களில் போட்டியிட்டால், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்' என்றுன் துரை வைகோ கூறினார். இத்தனை சீட் வேண்டும் என்று எந்த முடிவும் எடுக்கவில்லை. தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும் போது தான், எத்தனை சீட் என்பது பற்றி முடிவு செய்யப்படும்; தி.மு.க., கூட்டணியில் தொடரும் முடிவில் மாற்றம் இருக்காது.'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது, அரசியல் பிழை' என்று மட்டுமே கூறினேன். அ.தி.மு.க., குறித்தோ, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா குறித்தோ இழிவான விமர்சனங்களை நான் கூறவில்லை. ஆனால், அ.தி.மு.க.,வினர் சிலர் என்னை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதை பற்றி நான் கவலைப்பட்டுப் பிரயோஜனமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

saravan
ஜூலை 13, 2025 18:07

வைகோ கூட்டணி மாற ஏற்பாடாகிறார்


GoK
ஜூலை 13, 2025 15:20

இவன் ஒரு அறிவிலி. வேட்டியை மடித்து கட்டி, ஒரு அஞ்சடி கடல்ல காலை வச்சிட்டு, கச்சத்தீவு மீட்டுருவேன்னு காதில் பூ சுத்தினவன். இவனுக்கும் இவன் மவனுக்கும் பின்னால அலயர தமிழினத்துக்கு வெக்கம் மானம் எதுவுமில்லை.


pv, முத்தூர்
ஜூலை 13, 2025 13:37

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்.


Kjp
ஜூலை 13, 2025 12:22

துரை வையாபுரியை திமுகவை எதிர்த்து சீமானைப் போல் தைரியமாக அரசியல் பண்ணுங்கள்.அங்கிகாரம் கிடைக்கும்.அடிமை அரசியல் வேண்டாம்.


RAAJ68
ஜூலை 13, 2025 12:13

எத்தனை பேர் வசை பாடினாலும் இந்த மனுஷனுக்கு சொரணை கிடையாது.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 11:42

ஒரு சிலர் இந்த பூமிக்கு பாரம்


Ambedkumar
ஜூலை 13, 2025 11:38

பாஜக தனித்தும் மற்றும் கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்தும் தற்போது 19 மாநிலங்களில் ஆட்சி நடத்துகின்றது. இந்த மாநிலங்களில் இரட்டை என்ஜின் மாடல் சிறப்பாக வேலை செய்கிறது. மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து சிறப்பான ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. மோடி அவர்களுக்கு இதுவரை 26 நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பாஜகவுக்கு பல பெருமைகள் உண்டு. தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெரும் பட்சத்தில் இரட்டை என்ஜின் மாடல் மூலம் மக்களுக்கு பல்வேறுவகைப் பட்ட நன்மைகள் உண்டு திமுக கூட்டணி வந்தால் உங்கள் ஒரு சில குடும்பங்கள்தான் பயன்பெறும்.


தமிழ்வேள்
ஜூலை 13, 2025 11:30

தேச துரோகம் ஹிந்து துரோகம் மொழி துரோகம் ஆகியவற்றை தன்னுடைய மனசாட்சியை அடகு வைத்து ஆனந்தமாக செய்து கொண்டுள்ள வைகோ கும்பல் மண்ணோடு மண்ணாகப் போகப் போவது சர்வ நிச்சயம்....


shyamnats
ஜூலை 13, 2025 11:15

அ.தி.மு.க, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா பற்றி இழிவாக எந்த கருத்தையும் கூறவில்லை, என வைகோ. ஆனால் வைகோ பற்றி எவருக்கும் உயர் கருத்து இல்லை என்பதோடு தாழ்வாக பார்க்கிறார்கள் என்பதே உன்மை


Jack
ஜூலை 13, 2025 11:10

தேவாரம் திருவாசகம் என்று பக்தி ததும்ப ஆன்மீக விளக்கம் செய்து இழந்த மரியாதையை திரும்ப பெற முயர்ச்சிக்கலாம்


சமீபத்திய செய்தி