உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை: அண்ணாமலை

அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: '' அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் வந்தேன்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

தெரியும்

கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பா.ஜ., தலைவர்கள் நட்டா, அமித்ஷா அமைப்புச் செயலர் சந்தோஷிடம், தமிழக அரசியல் களம் எப்படி உள்ளது.எப்படி மாறி உள்ளது என்பது குறித்து விவரித்து உள்ளேன். தென் மாவட்டங்கள், கொங்கு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும். தமிழகத்தில் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cikv0yt9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முதன்மை

கூட்டணி குறித்த விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்தே இறுதிக்கருத்து. தமிழகம் நன்றாக இருக்கவேண்டும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. பா.ஜ., வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்க வேண்டும். எந்த தலைவர் கட்சி மீது கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது. பா.ஜ,வளர்ச்சி முதன்மை அதை விட தமிழகத்தின் நலன் முதன்மை.

பிசிறு கிடையாது

டில்லியில் பேசும்போது தொண்டனாக பணியாற்றவும் தயார் எனக்கூறியுள்ளேன். அதன் பொருளையும் உணர்ந்து கொள்ளுங்கள். அண்ணாமலை அரசியலுக்கு வந்தது அதிகாரத்திற்கு கிடையாது. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகதான். 2020 ஆக.,25 ல் பா.ஜ.,வில் இணைந்தது முதல் எனது எண்ணத்தில் சிறு பிசிறு கிடையாது. எதற்காக அரசியலுக்கு வந்தேன் என்பதை 5 ஆண்டுகள் பிறகும் அதே உணர்வோடு நின்று கொண்டுஉள்ளேன். கூட்டணி குறித்தும், பா.ஜ., தலைவர் குறித்தும் நீங்கள் பார்ப்பீர்கள்.

தெளிவாக

எதையும் மாற்றி மாற்றி பேசுபவன் அண்ணாமலை அல்ல. எதற்காக அரசியலுக்கு வந்தேனோ அந்த வெறியும், பசியும் , நெருப்பும் எரிந்து கொண்டு உள்ளது. அதேநேரத்தில் கட்சி முதன்மையானது. பா.ஜ.,பொறுத்தவரை நிறைய முடிவுகள் எடுத்து இருக்கிறேன். தொலைநோக்கு பார்வையோடு முடிவு எடுத்து இருக்கிறேன். நான் தெளிவாக இருக்கிறேன். என்னால் யாருக்கும் பிரச்னை வராது. என்னுடைய நிலைப்பாடு ஒன்று தான். தமிழகம் முதன்மையானதாக இருக்கும். பா.ஜ., வளர்ச்சி இருக்க வேண்டும். அதில் என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியோ மற்றவரின் வளர்ச்சியோ கிடையாது.

அவசியமில்லை

யாரைப் பற்றியும் கடுமையாக விமர்சிக்கவில்லை.. கருத்துக்களை கருத்துக்களாக வைத்து இருக்கிறேன். கருத்துக்களை கருத்துக்களாக எதிர்கொள்ள வேண்டும். கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், எங்களுடைய கருத்துகளை வலிமையாக கூறியிருக்கிறேன். மாநில எதிர்க்கட்சி தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் சந்தித்ததுதவறு இல்லை. தமிழகத்தில் யார் விமானம் ஏறினாலும், டில்லி வந்து பா.ஜ., தலைவரை சந்திப்பதாக செய்திகள் எழுதப்படுகின்றன. செங்கோட்டையன் பயணம் குறித்து யூகம் எழுதப்பட்டது. யாரையும் திரைமறைவில் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பா.ஜ.,விற்கு இல்லை. வெளிப்படையாக எப்போதும் இருக்கிறோம். காங்கிரசை போல், டில்லியில் அமர்ந்து தமிழக அரசியலை பா.ஜ., எப்போதும் கட்டுப்படுத்தாது. அதற்கு பா.ஜ., சரித்திரமே சாட்சி. விஜய்க்கு பாதுகாப்பு அளித்ததால், அவரது கட்சியுடன் உறவு கிடையாது. மாநில அரசு பாதுகாப்பு அளிக்க தவறும்போது, மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கிறது. இதற்கு அரசியல் நியாயம் கற்பிப்பதை மறுக்கிறேன்.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பள பாக்கி என்றால் போலி கணக்கு எழுதப்படுகிறது. மத்திய அரசு சிறப்பு அதிகாரிகள் குழு போட்டு ஆய்வு செய்து, பணத்தை திருடியவரை சிறையில் அடைக்க வேண்டும். கிராம சபையை கூட்டி பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் போட சொல்கிறார்கள். இதனால், அமைச்சர்கள் ஓடுகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venkatarengan.
மார் 31, 2025 16:15

2026 ல் நடக்க இருப்பது சட்ட சபை தேர்தல் இதற்கு அதிமுகவிற்கு தான் பசி இருக்க வேண்டும் ,பா ஜ க தலைமை இப்போது எதற்கு கூட்டணிக்காக அண்ணாமலையை பலியிட வேண்டும், மக்களவை தேர்தல் என்றால் கூட ஒத்துக்கொள்ள முடியும். இப்பொழுது கூட்டணிக்காக அண்ணாமலையை பலியிட்டாலும் பா ஜ க வெற்றிக்கு அதிமுக ஒரு சத விகித ஒத்துழைப்பு கூடகொடுக்காது. நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் இரண்டு பேரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்கிற கதை தான். அதிமுக வெற்றிக்கு அண்ணாமலையின் இத்தனை உழைப்பு வீணாக வேண்டுமா. அண்ணாமலை தன் கருத்துகளை பத்திரிக்கைகளில் கட்டுரையாக எழுதலாம். பிரஸ் மீட் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


Durai Kuppusami
மார் 31, 2025 13:01

திரு அண்ணாமலை அவர்கள் அதிகமாக பேசுகிறார்.கமல் மாதிரி புரியாமல் பேசுகிறார்.முதலில் தேவையில்லாமல் பத்து பேர் பக்கத்தில் கூட்டி பிரஸ்மீட் செய்றது அதிக அளவில் பேசுவது தேவையில்லாதது. அரசியலில் வந்தா பேசுவதில் பொறுமை இருக்கணும்.அது சுத்தமான இல்லை உங்களிடம்...அது பல எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. சில விஷயங்கள் பிடிக்கவில்லையென்றால் போயிடணும்.கூட்டணி விஷயத்தில் நீங்கள் பேசுவது சரியான தீர்வை தராது.நான் அதுக்கு வரல இதுக்கு வரல என்று ஓவராக பேசுகிறீர் இது உங்கள் கட்சிக்கு நல்லதல்ல தலைமையே உங்களை நம்பாத மாதிரி பேசுவது மாதிரி தெரியுது...யாரை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிர்களோ அது நடக்கவேண்டும் என்றால் எல்லோரையும் அரவணைத்து பேசவேண்டும் அதுவே முக்கியம் ... சிந்தித்து செயலாற்றுங்கள்....


अप्पावी
மார் 31, 2025 08:24

என்னமோ நடக்குது டில்லியில. ஒண்ணுமே புரியலை. மர்மமா இருக்குது. ஆடு ஜீவிதம் என்ன ஆகுமோ தெரியலை சேட்டா


மதிவதனன்
மார் 30, 2025 23:31

அவரே தோற்று போனவர் அவரை ஒரு கவுன்சிலர் ஆக சொல்லு அப்புறம் இவர் மற்றவர்களை வெற்றி பெற செய்ய வைப்பார்


sridhar
மார் 30, 2025 21:14

தமிழக பிஜேபியின் அடையாளமே அண்ணாமலை தான். அவர் இருந்தால் தான் கூட்டணி வெற்றி பெறும்.


மலை நேசன்
மார் 30, 2025 20:59

தன் நலம் பார்க்காமல் பொது நலனுக்காக வேலை பார்க்கும் சான்றோர் நிறைய உண்டு. அவர்களில் முதன்மையானவர் மோடிஜி. தமிழகம் தந்த மோடி மற்றும் அடுத்த மோடி அண்ணாமலை.


guna
மார் 30, 2025 18:58

அது எப்படி ஓவியரே.....அண்ணாமலை நியூஸ் வந்தவுடன் கீழே விழுந்து புரண்டு ஒரு மொக்கை கமென்ட் போடுறீர்.


Ray
மார் 30, 2025 18:41

ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்.


J.Isaac
மார் 30, 2025 18:27

Work less, talk more


முருகன்
மார் 30, 2025 17:25

ஊழல் கட்சி அதிமுக உடன் கூட்டணி வைக்க இவரை பலியிட போகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை