உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலை என கூறும் பிரதமரின் பகல் கனவை நினைத்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை: ஸ்டாலின்

தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலை என கூறும் பிரதமரின் பகல் கனவை நினைத்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை: ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: இந்தியா முழுதும், இண்டியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என காஞ்சிரபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். லோக்சபா தேர்தலையொட்டி காஞ்சிபுரம் தி.மு.க, வேட்பாளர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க, வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து காஞ்சிபுரம் கரசங்காலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

எல்லோருக்கும் எல்லாம்

காங்கிரஸ், தி.மு.க, ஆட்சி காலத்தில் அரசு செய்த சாதனைகள் பட்டியல் நீளமானது. 2021 தேர்தலின் போது பெட்டி வைத்து 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து அதன்படி முதல்வரின் முகவரி என்ற திட்டத்தின் கீழ் எனக்கு வரும் மனுக்களுக்கு தீ்ரவு காண ஆய்வு கூட்டம் நடத்துகிறேன்.எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை இந்தியாவின் பிற மாநிலங்கள் தி.மு.க, திட்டங்களை பின்பற்றி வருகின்றன. தனி மனிதனின் பிரச்னைகள் , தேவைகளை தீர்க்க பார்த்து பார்த்து நவடிக்கை எடுத்து வருகிறோம்.

சுயமரியாதைக்கான அங்கீகாரம்

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற திறன் பயிற்சி தேவை என தொழில் முனைவோர்கள் கூறினர். இதையடுத்து ‛நான் முதல்வர்' திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டது. அரசு கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் திறன் பயிற்சி வழங்குவது தான் நான் முதல்வர் திட்டம்.

மக்கள் அவார்டு

தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத காலை உணவு திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறோம். ஸ்டாலின் போட்ட கையெழுத்தால் 16 லட்சம் குழந்தைகள் பசியாற காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை பெண்களின் சுயமரியாதைக்கான அங்கீகாரம். இப்படி தி.மு.க, அரசின் திட்டங்களை பட்டியலிட்டால் பிரசார கூட்டம் சாதனை விளக்க பொதுக்கூட்டமாக மாறிவிடும்.மத்திய அரசிடம் நான் அவார்டு வாங்கினேன் , நீங்கள் வாங்கினீர்களா என பழனிச்சாமி கேட்கிறார். நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் என்ற திரைப்பட வசனத்திற்கேற்ப பழனிசாமி அவார்டு வாங்கினார். தி.மு.க, அரசு மக்களிடமிருந்து அவார்டு பெற்றுள்ளது. தி.மு.க, வுக்கு அடுத்த அவார்டு ஜூன04-ம் தேதி காத்திருக்கிறது. பழனிசாமி அவர்களே ‛‛யு வெயிட் அண்டு ஸீ '' .பழனிசாமி எதில் முதலிடம் பிடித்தார் என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்ததில் தான் முதலிடம் வகித்தார். தமிழ்நாட்டு மக்கள் தான் இனி இந்தியாவின் எதிர்காலம்.

பழனிசாமி நாடகம்

பெண்கள் ஓதுவார்களாக, அர்ச்சகர்களாகவும், அறங்காவலர் குழு தலைவராகவும் ஆகும் அளவிற்கு தமிழகத்தில் முற்போக்கு நிலை காணப்படுகிறது. தனிமனிர்கள் தொடங்கி மாநிலங்களின் அனைத்து உரிமைகளுக்காக போராட வைத்துள்ளார் பிரதமர் மோடி. நிதிக்காகவும், நீதிக்காகவும், தமிழ்நாடு மட்டுமின்றி , கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன. நான் நேரடியாக சென்று வெள்ள நிவாரண நிதி கேட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தில் தி,மு.க.,வுக்கு எதிராக எதிர்பபு அலை வீசவதாக பிரதமர் கூறுகிறார்.பிரதமர் கூறுவதை கேட்டு சிரிப்பதா, அவரது பகல் கனவை நினைத்து பரிதாபப்படுவதா ? என்று தெரியவில்லை. பா.ஜ.,வுக்கு மீண்டும் ஒரு முறை வாக்களித்தால் நாடு 200 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும்.பா.ஜ.விடம் இருந்து அ.தி.மு.க, பிரிந்துவிட்டதாக பழனிசாமி நாடமாடுகிறார். பா.ஜ., வெற்றி பெற்றால் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு ,பா.ஜ.வை ஆதரிக்கமாட்டோம் என எங்காவது கூறியிருக்கிறாரா ? பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார். அ.தி.மு.க,வுக்கு போடும் வாக்கு என்பது பா.ஜ.,வுக்கு போடும் வாக்கு தான். இந்தியா முழுதும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக அலை வீசுகிறது. ஜூன் 4-ம் தேதி தமிழகத்தில் 40-க்கு 40 என மக்கள் வழங்க இருக்கிறார்கள் .எனவே தி.மு.க,வுக்கு வாக்களித்து வேட்பார்களை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

enkeyem
ஏப் 19, 2024 13:29

மாண்புமிகு முதல்வரே தி மு க வுக்கு அமோக ஆதரவு உள்ளதாக நீங்கள் காண்பது தான் பகல் கனவு


enkeyem
ஏப் 19, 2024 13:26

திராவிட நாடு என்று ஒன்று எங்கே உள்ளது? திராவிடம் திராவிட நாடு என்பதெல்லாம் ராமசாமியின் வாரிசுகளின் கட்டுக்கதை


kumarkv
ஏப் 19, 2024 12:44

பரிதாப படவேண்டாம், புரிந்துகோண்டால் போதும்


சுராகோ
ஏப் 19, 2024 06:43

எதிர்ப்பு அலையயை மறைக்க போராடிக் கொண்டிருக்கிறார்


kumarkv
ஏப் 18, 2024 10:38

உனக்கு என்ன தான் தெரியும்


Kasimani Baskaran
ஏப் 17, 2024 15:41

அமித்ஷா நாலு முறை தமிழகம் வந்து போனால் தீம்கா நான்காகக்கூட உடையும் என்பது திராவிட மட நிர்வாகிகளுக்கு புரியாதது துரதிஷ்டவசமானது


அசோகன்
ஏப் 17, 2024 11:40

சாராயம் மற்றும் போதைப்பொருள் வித்து பல ஆயிரம் கோடிகளை பார்க்கும் நீங்க பேசலாமா


Barakat Ali
ஏப் 17, 2024 11:36

முன்பெல்லாம் விடியல், திராவிடம் என்று கூவினால் வாக்களித்தோம் அவர்களின் லட்சணத்தைப் பிறகு பார்த்தோம் ஆகவே இப்பொழுதெல்லாம் மோடியை யார் குறை சொல்கிறார்கள் என்றும் கவனிக்கிறோம் அவர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர்க்கிறோம்


ஆரூர் ரங்
ஏப் 17, 2024 11:22

மயிலாடுதுறை சிறுத்தையைப் பிடிக்க வக்கில்லை. கடலூர் ஏழை ஜோசியக் கிளியை பிடிப்பதில் மட்டும் அதீத இன்பம்.


ஆரூர் ரங்
ஏப் 17, 2024 11:19

தயாநிதிக்கு பல மாநகராட்சி வட்டங்கள் இருக்குமிடம் தெரியாது. அவற்றின் பிரச்னைகளை பற்றித் தெரியாது. தொகுதி மேம்பாட்டு நிதி என்னவானது என்பதே தெரியுமா என்பது தெரியாது. வேட்பாளர்களை மக்கள் ஒதுக்குவது நல்லது.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ