உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் பா.ஜ., ஆட்சி என்றுதான் சொன்னேன் அண்ணாமலை ஒப்புதல்

2026ல் பா.ஜ., ஆட்சி என்றுதான் சொன்னேன் அண்ணாமலை ஒப்புதல்

கோவை: தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்று 11 ஆண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், பொது சிவில் சட்டத்தை தவிர அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

புகார் இல்லை

அந்த சட்டமும் விரைவில் நிறைவேறும். 11 ஆண்டுகளில் எவ்வித ஊழல் புகாரும் எழவில்லை.அமலாக்கத்துறை செயல்பாட்டால் 1.45 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற வர்களையும் பிடித்து விசாரித்து வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 1.25 லட்சம் கோடி காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 12 கோடி வீடுகளுக்கு நேரடி குடிநீர் வசதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில், 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளை நிறுவியுள்ளது. 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் இளைஞர்கள் 'அக்னிவீர்' திட்டத்தில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தமிழகத்துக்கு நான்கு ஆண்டுகளில் 4 லட்சத்து 36 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழகத்துக்கு வழங்கிய நிதியையும் சேர்த்து, மொத்தம் 5 லட்சத்து 46 ஆயிரம் கோடி ருபாய் வழங்கி உள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த 512 வாக்குறுதிகளில், 50 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.

பிளவு இல்லை

'விஸ்வகர்மா' திட்ட பெயரை மாற்றி, தி.மு.க., அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது; முதல்வர் மருந்தகம் திட்டத்தையும் கொண்டு வந்தது. இரண்டு திட்டங்களுமே தோல்வியை தழுவி உள்ளன. கீழடி ஆய்வை பொறுத்தவரை, போதுமான தகவல்களையும் சந்தேகங்களையும் தீர்க்க, தி.மு.க., அரசு தவறி விட்டது. ஆய்வாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தால், இந்த ஆய்வறிக்கை ஏற்கப்பட்டிருக்கும்.வரும் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என தலைவர்கள் சொன்னாலும், நான் பா.ஜ., ஆட்சிதான் என சொன்னேன். தலைவர்கள் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள்; தொண்டனாக நான் தொடர்ந்து பணியாற்றுவேன். எங்களுக்குள் எவ்வித பிளவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

'துாய்மை பணியாளர்களுடன் இணைந்து போராடுவேன்'

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், சாக்கடை அடைப்பு நீக்குவோர், பணி நிரந்தரம் கோரி, கலெக்டர் அலுவலகம் முன், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை, அண்ணாமலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, அவர்களிடம், 'கொரோனா பரவிய காலத்தில் நீங்கள் பணியாற்றியது அனைவருக்கும் தெரியும். உங்களை பணி நிரந்தரம் செய்து தருவதாக, தேர்தல் வாக்குறுதி கொடுத்தே, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அரசாணைப்படி, குறைந்தபட்ச தினக்கூலியாக, 770 ரூபாய் வழங்க வேண்டும்; அவ்வாறு தருவதில்லை. இரண்டு நாட்கள் காத்திருப்போம். அதற்குள் போராட்டம் முடிவுக்கு வராவிட்டால், பா.ஜ.,வும் பங்கேற்கும். உங்களுடன் அமர்ந்து நானும் போராட்டத்தில் ஈடுபடுவேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

R.P.Anand
ஜூன் 14, 2025 16:14

அதிமுக அறிவாளி கூட்டம் அதை வழிநடத்த அங்கு ஓருத்தணும் இல்லை. கூட்டணி கட்சிகள் எல்லாமே ஆட்சியில் பங்கு கேட்ககிறது . இன்றுவரை அறிவாளி கூட்டம் மறுக்கிறது . அப்புறம் எப்படி ஆட்சியை புடிப்பானுங்க . இதுல அண்ணாமலை மேல எந்த தவறும் இல்லை.


Manaimaran
ஜூன் 13, 2025 20:47

ஆயுஸ்மான் பாரத் கோவைல எந்த ஆஸ்பத்திரிலும் ஏற்கபடுவது இல்ல (தமிழக.முதல்வன் காப்பிட்டு அட்டை) உட்பட... சும்மா ரீல் உடாத


venugopal s
ஜூன் 13, 2025 20:45

நந்தவனத்தில் ஓர் ஆண்டி , அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான்டி என்ற பாடலுக்கு பொருத்தமானவர் அண்ணாமலை தான்!


Kadaparai Mani
ஜூன் 13, 2025 12:47

Annamalai is the passive supporter of dmk and stalin family. Bjp high command should probe the commercial relationships of Annamalai with dmk senior ministers. He has spoiled the great victory of BJP alliance in 2024. AIADMK is the largest political party in the state of tamil nadu and even a student of psephology knows.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூன் 13, 2025 12:27

உண்மையில் இவர் தவழப்பாடிக்கு சரியான ஆள் தான்


Kadaparai Mani
ஜூன் 13, 2025 12:26

சத்தியமான கருத்து சொல்லி உள்ளீர்கள்


madhesh varan
ஜூன் 13, 2025 12:09

இவர் வந்தாலே பிஜேபி கு ஒத்த ஒட்டு தான், இவருக்கே இந்த தடவ டெபாசிட் கிடைக்காது,


madhesh varan
ஜூன் 13, 2025 11:35

இவர் இருக்கிறவரைக்கும் தமிழகத்தில் திமுக தான் ஆட்சி அமைக்கும்,


vijay
ஜூன் 13, 2025 11:06

வாய்க்கு வந்தபடி ஒளரக்கூடாது. அண்ணாமலை அவர்கள் கருத்து சோல்வதற்கு சிவி ஷண்முகம் போன்றறோர் பிஜேபி க்கு எதிராக வன்மத்தை தொடர்ந்து விதைத்தார்கள். அதை கேட்டு கொண்டுபோக அண்ணாமலை ஒன்றும் இளிச்சவாயன் இல்லை. அவர் உண்மையைத்தான் சொன்னார்.


madhesh varan
ஜூன் 13, 2025 10:49

பிஜேபி காரங்க, ஒரு ஆளுக்கு 150 மாற்றும் உணவு பொட்டலம் குடுத்து ஆளுங்களை கூட்டிக்கொண்டு வந்து கூட்டம் சேத்து அண்ணாமலை கு விளம்பரம் பண்ணுனது எல்லாம் வீணாப்போச்சு, இந்த கூட்டத்தை பாத்து இது தானா செந்தக்கூட்டம் னு நினச்சு ஆண்ணாமலை ஆடுன ஆட்டம் இருக்கே, கொஞ்சம் ஆட்டமா ஆடுனா


புதிய வீடியோ