சென்னை: ஜெயலலிதாவுக்கு தம்பியாக அரசியல் களத்தில் பணியாற்றியவன் என்பது அ.தி.மு.க., தலைவர்களுக்கு தெரியும். இ.பி.எஸ்.,க்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க என்று அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து நான் வெளியேறிய போது, என்னை வாழ்த்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு தம்பியாக அரசியல் களத்தில் பணியாற்றியவன் என்பது அ.தி.மு.க., தலைவர்களுக்கு தெரியும். இ.பி. எஸ்.,க்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.இணக்கமான உறவுஅ.தி.மு.க.,விற்கும், பா.ஜ.,விற்கும் இடையே இணக்கமான உறவு ஏற்பட வேண்டும் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. அவர்கள் எடுத்த முடிவை அ.தி.மு.க., தலைவர்கள் ஏற்கவில்லை, இணக்கமாக அந்த உறவு இல்லை என்று அன்வர் ராஜா சொன்ன கருத்துக்காக பதில் அளித்தேன். அன்வர் ராஜா அ.தி.மு.க.,வில் முன்னணி தலைவர். அவருடைய கருத்து பற்றி ஊடகவியலாளர் என்னிடம் கேட்டதற்கு, அவருடைய கருத்து அ.திமு.க., மற்றும் பா. ஜ., கூட்டணியை ஏற்கவில்லை என்பதை உணர்த்துகிறது என்ற பொருளில் சொன்னேன். ஆசை அல்ல அவர்கள் இருவரும் இணக்கமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை அல்ல.ஏனென்றால் திராவிட இயக்கமாக நாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற அ.தி.மு.க., பா.ஜ.,வால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணம் தான். வேறு ஒன்றும் இல்லை. அ.தி.மு.க., இங்கே வலுவாக இருந்தால், பா.ஜ.,வால் இங்கு கால் ஊன்ற முடியாது என்று ஒரு நப்பாசை தான்.இந்த நாடு அறியும்பா.ஜ., கால் ஊன்றுவது விடுதலை சிறுத்தை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை அல்ல. திருமாவளவனுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கவலை அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழ் சமூகம், பாதிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது. அவர்கள் காலூன்றிய இடம் எல்லாம் மக்களை எப்படி ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தி வருகிறார்கள் என்பதை இந்த நாடு அறியும். தோழமையோடு...!அடிப்படை வசதிக்காக போராடாதவர்கள், எளிய மக்களுக்காக குரல் கொடுக்காதவர்கள், மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். இது தமிழக மக்களுக்கு நல்லதல்ல என்ற அடிப்படையில் தான், அ.தி.மு.க., தமக்கு இருக்கும் செல்வாக்கை இழந்து விடக்கூடாது என்று தோழமையோடு சுட்டிக் காட்டுகிறேன்.நன்கு அறிவார்கள்!நான் யார் என்பதை ஜெயலலிதாவின் கூற்றிலிருந்து, அவருடைய கருத்திலிருந்து, அ.தி.மு.க., தொண்டர்கள் நன்கு அறிவார்கள். இ.பி.எஸ்., அதனை அறியாமல் இருக்கிறார் என்று நான் கருதவில்லை. பா.ஜ.,வால் அ.தி.மு.க.,விற்கு ஏற்படும் பாதிப்பை பற்றி அறியாமல் இருக்கிறார் என்று கவலைப் படுகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.