உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறேன்

மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறேன்

உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கு, மத்திய அரசு முழுமையான வரி விலக்கு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. முதல்வர் அறிவித்தது போல, குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்ய, தமிழக அரசு சார்பில் விரைவில், 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும்.அரசு மருத்துவமனைகளில், காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களில், 2,553 டாக்டர்கள் நியமிக்க தேர்வுகள் முடிந்து, இரு வாரத்திற்குள் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, இம்மாத இறுதிக்குள் அவர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இந்தியாவிலேயே முதல்முறையாக, பணி நியமனத்தின் போது கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.- மா.சுப்பிரமணியன்,மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ