உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உறுதியாக சந்திப்பேன் முயற்சிக்கு வாழ்த்துகள்: ஓபிஎஸ்

உறுதியாக சந்திப்பேன் முயற்சிக்கு வாழ்த்துகள்: ஓபிஎஸ்

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்துடன், முயற்சி மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு என் முழு ஆதரவு எப்போதும் இருக்கும். அவர் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள். அவர், 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். அதன்பின், பிரிந்து சென்ற அனைவரையும் அழைத்து பேசுவார் என நினைக்கிறேன். நானும் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன். பா.ஜ., கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரிடமும் சமாதானம் பேசத் தயார் என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருக்கிறார். அவரது நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள். - -- பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lakshminarasimhan
செப் 08, 2025 10:04

இவரை நம்பி சென்ற மைத்ரேயன் மற்றும் அன்வர் ராஜா போன்றோரை தி மு க வுக்கு இட்டு சென்றது தான் இவர் சாதனை வேறு ஒன்றும் இவரால் பிடுங்க முடியாது அம்மா தாயே நிலைமை தான் இவர்களுக்கு


ஜெய்ஹிந்த்புரம்
செப் 08, 2025 09:49

செங்கோட்டையனோட பீஸை இபிஎஸ் ஏற்கனவே பிடுங்கியாச்சின்னு பன்னீருக்கு தெரியாதா?


VENKATASUBRAMANIAN
செப் 08, 2025 08:43

வேறு வேலையே இல்லை. இப்போது செங்கோட்டையன் சேர்ந்துள்ளார். திமுகவிற்கு ஜாக்பாட். இவர்களே வழி அமைத்து கொடுக்கிறார்கள். ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் சப்போர்ட.


Mani . V
செப் 08, 2025 06:26

வேற வழி? சந்தித்து ஏதாவது செய்தால்தான் எதிர்காலம் என்ற ஒன்று தென்படும். இருந்தாலும் கடைசி வாய்ப்பாக அந்தக் கட்சியில் சேர்ந்து, அந்தக் குடும்பத்துக்கு அடைப்பு எடுக்கும் வேலையையும், "குட்டி இளவரசர் வாழ்க" என்று கோஷம் போடும் வேலையையும் செய்ய வாய்ப்பிருக்கு. ஆனால் சீனியர்களின் பொறாமைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை