உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொலைத்து விடுவேன், சட்டையை கழற்றி விடுவேன்; எஸ்.ஐ.,யை மிரட்டிய அடாவடி தி.மு.க., நிர்வாகி

தொலைத்து விடுவேன், சட்டையை கழற்றி விடுவேன்; எஸ்.ஐ.,யை மிரட்டிய அடாவடி தி.மு.க., நிர்வாகி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் சீருடை அணிந்த போலீஸ் எஸ்.ஐ.,யை கடுமையான வார்த்தைகளில், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் தேர்தல் பிரசாரத்தை துவங்கிய அ.தி.மு.க பொது செயலாளர் இ.பி.எஸ்., நேற்று மாலை கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக அ.தி.மு.க வினர் சார்பில் பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b27waxfl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் கோவை டவுன்ஹால் பகுதியில் ஏற்கனவே தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டு இருந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற இலச்சினையை மறைக்கும் வகையில் அ.தி.மு.க வினரின் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. தங்கள் இலச்சினை மறைக்கப்பட்டதை அறிந்து ஆத்திரம் அடைந்த தி.மு.க.,வினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களில் பலர், நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும், டவுன் ஹால் ஒரு வழிப்பாதையில் வந்தனர். ஒரு வழிப்பாதையில் அவர்கள் வருவதை போலீசார் கண்டித்து தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கு வந்த தி.மு.க மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் சீருடையில் இருந்த போலீஸ் எஸ்.ஐ.,யை கடுமையான வார்த்தைகளால் மிரட்டினார்.https://www.youtube.com/embed/I1If5hIkXoIஅவர், ''எஸ்.ஐ.,யை கடும் கோபத்துடன் என்ன பைத்தியக்காரனா? நீ என்ன ரவுடியா? உன் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன்'' என்று ஒருமையில் பேசியதுடன், அவருக்கு கடுமையான வார்த்தைகளால் நேரடி மிரட்டல் விடுத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து தி.மு.க வினர் அப்பகுதியில் சிறிது நேரம் மறியலிலும் ஈடுபட்டனர். தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

தமிழ்வேள்
ஜூலை 10, 2025 21:22

ஒரு சில லாரி டிரைவர்கள் ரோட்டில் நாயைக் கண்டால்,அதன்மீது லாரியை ஏற்றி சாகடித்து விடுவார்கள்.....அதே வேலையை உ.பிக்கள் மீது காட்டி போதையில் சாலையின் குறுக்கே வந்து வண்டியில் வேண்டும் என்று விழுந்தான் என கேஸை குளோஸ் செய்யலாம்...ஒரு பத்து உ.பிக்களை தரையோடு தரையாக தேய்த்து ஒழித்து விட்டால் திருட்டு திராவிட கும்பல் இருக்கும் இடம் தெரியாமல் ஆஃப் ஆகி விடும்...


தமிழ்வேள்
ஜூலை 10, 2025 21:17

ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளன் கலெக்டருக்கு சமம் என்று சொல்லி கெடுத்து வைத்து உள்ளது திருட்டு திராவிட கழகங்கள்..ஆளும் கட்சி மாவட்ட செயலாளனை நாயை வெளுப்பது போல நடுரோட்டில் வைத்து வெளுத்தால் மட்டுமே திராவிட கும்பல் வழிக்கு வரும்.. அடித்த போலீஸை அதிக பட்சமாக சஸ்பென்ட் மட்டுமே செய்ய முடியும்...கொலை வெறித்தாக்குதல் முயற்சிக்கு எதிரான நடவடிக்கை என குறிப்பு எழுதினால் அதையும் செய்ய இயலாது...60 வயது வரை வேலை செய்யும் போலீஸ் ,ஆறு மாத காலம் கூட பதவி நிலையற்ற மா.செக்களுக்கு எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும்? திருட்டு திராவிட கும்பலை ரத்தவிளாராக்க வேண்டும்.


Ramesh Sargam
ஜூலை 10, 2025 20:59

காவலர்கள் தங்களுக்கு மந்திரிகளிடமிருந்து, அரசு அதிகாரிகளிடமிருந்து, கட்சியினரிடமிருந்து கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்காத விரக்தியில் ஒருவேளை திருப்புவனம் போன்ற நிகழ்வுகள் நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு பொது இடத்தில் அடிக்க கை ஓங்கிய புகைப்படம் செய்தி தாள்களில் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி பொது இடத்தில் காவல் அதிகாரிகளுக்கு மரியாதை போனால், அவர்கள் அந்த ஆத்திரத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள் மீது காட்டி அவர்களை கொலை செய்யும் அளவுக்கு தள்ளப்படுகிறார்கள்.


rama adhavan
ஜூலை 10, 2025 20:23

முள்ளை முள்ளாள் தான் எடுக்க வேண்டும். இந்த ஆள் அதைத்தான் செய்து இருக்கிறான்.


சிட்டுக்குருவி
ஜூலை 10, 2025 20:14

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் மக்களின் நம்புக்கையை இழக்க நேரிடும் .பணியாளர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்ய இயலாது .ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டிஸ்ட்ரிக்ட் அட்டர்னி தலையிட்டு நடவடிக்கையை எடுக்கவேண்டும் .இது அவர்கள் கடமையே


Padmasridharan
ஜூலை 10, 2025 19:45

காவலர்களும் மக்களை ஒருமையில் அசிங்கமாக பேசுவது அவர்களுக்கே தெரியும் சாமி...அதன் எதிரொலிதான் இது


sankaranarayanan
ஜூலை 10, 2025 19:19

தி.மு.க மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் சீருடையில் இருந்த போலீஸ் எஸ்.ஐ.,யை கடுமையான வார்த்தைகளால் மிரட்டினார்.இது சகஜமப்பா. கோட்டை பகுதியில் எப்போதுமே இவர்களது ஆதிக்கம்தான்.நாட்டையே குலுங்க செய்தது.இதை அடியோடு அழிக்க வேண்டும். இந்த ரவுடிகளை பிடித்து தகுந்த முறையில் அவர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லையேல் முன்பு கோட்டை பகுதியில் நடந்தவாறு இப்போதும் பல பல அசம்பாவிதங்கள் நடக்க இதுபோன்ற கட்சி ஆட்கள் துவங்குவார்கள்.


c.mohanraj raj
ஜூலை 10, 2025 18:35

இசை இடம் துப்பாக்கி இருக்குமே துப்பாக்கி எடுத்து இருந்தாலே ஓடி இருப்பானே துண்டை காணோம் துணிய காணோம் என்று


D.Ambujavalli
ஜூலை 10, 2025 16:43

காவல் துறையை, கட்சியின் குட்டி தேவதைகள், சில்லறைகள் கூட அதட்டி உருட்டு அளவு இலக்காரம் ஆக்கியதற்கு , கட்சித் தலைமை முதல், குடும்பத்து அரை டிக்கெட் வரை சல்யூட் அடித்து, பின் வாசலால் தங்கள் காரியங்களை சாதித்துக்கொண்ட போலீஸ் பெருந்தலைகளே காரணம்,


subramanian
ஜூலை 10, 2025 16:42

அடுத்த வருடம் ஜூன் மாதம் இவனை தெருவில் இழுத்து செல்லுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை