உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அந்த சூழல் வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்: ஸ்டாலின்

அந்த சூழல் வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்: ஸ்டாலின்

சென்னை: 'ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் கொண்டு வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்' என சட்டசபையில் விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் தாக்கல் செய்தார். விவாதத்தின் போது அ.தி.முக., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: சுரங்கம் விவகாரத்தில் ஆரம்ப கட்டத்தில் அரசு தடுத்து நிறுத்தி இருக்கலாம். பிரதமருக்கு முதல்வர், அமைச்சர் எழுதிய கடிதத்தின் முழு விபரம் வெளியிடப் படவில்லை. தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை தி.மு.க., உறுப்பினர்கள் தடுப்பதில்லை. பார்லிமென்டில் தி.மு.க., எம்பிக்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lfae7e2i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

என்ன செய்தீர்கள்?

மாநில உரிமைகள் பறிபோகும் போது, தி.மு.க., எம்.பி.,க்கள் ஏன் அழுத்தம் தரவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் 10 மாத காலமாக தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீங்கள் தனித்தீர்மானம் கொண்டுவருவீர்கள், அதற்கு நாங்கள் விளக்கம் கேட்க கூடாதா? அதுபற்றி நாங்கள் பேசக்கூடாதா? தலையாட்டி, தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமா? 10 மாதமாக என்ன செய்தீர்கள்? அப்போது ஏன் எதிர்க்கவில்லை? முழு விவரங்களை தராமல் தீர்மானம் போட்டல் நாங்கள் ஆமாம் போட வேண்டுமா? முதல்வர் எழுதிய கடிதத்தில் என்ன அம்சம் இருந்தது என தெரியப்படுத்தவில்லை. சட்டம் நிறைவேறிய பின் தீர்மானம் கொண்டு வந்தது எதற்காக? மனித உரிமையை காக்க பார்லிமென்டில் உரிய அழுத்தம் தராமல் என்ன செய்தீர்கள்? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

தவறான கருத்து

இதற்கு துரைமுருகன் அளித்த பதில்: எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப தவறான கருத்தை பதிவு செய்கிறார். மீண்டும் மீண்டும் தவறான கருத்தை பதிவிடக் கூடாது. ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என சட்டம் போடப்பட்டு உள்ளது. தமிழக அரசு என்ன கைகட்டி வேலை செய்யும் வேலைக்காரனா? டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு பதிவு செய்தோம். இவ்வாறு துரை முருகன் பதில் அளித்தார்.

முதல்வர் பதில்

இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: தி.மு.க., எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கடுமையாக எதிர்த்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பார்லிமென்டில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர விருப்பதாக மக்களிடம் தெரியப்படுத்தினோம். மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சுரங்கத்திற்கான ஏலம் விட்டாலும் மாநில அரசு அனுமதி கொடுக்காது. திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம். ஒரு போதும் அனுதிக்கமாட்டோம். தமிழக அரசு அலட்சியமாக இருந்ததாக எதிர்க்கட்சி நினைக்கிறது. ஆனால் அப்படியில்லை. நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டேன். ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் அமையும் சூழல் வந்தால், நான் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். பின்னர் சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Velusamy Dhanaraju
டிச 13, 2024 12:45

அண்ணன் எப்படா ............... திண்ணை எப்படா காலியாகும் என்று ஒரு சொல்வது உண்டு இங்கே யாரு?


சாண்டில்யன்
டிச 11, 2024 10:19

அடடே இது மிகவும் சுலபமான வழியாயிருக்கே இது தெரியாம நாங்க ஆட்சியை கவிழ்க்க பகீரத பிரயத்தனம் செய்துக்கிட்டிருக்கோம் அண்ணாமலை யூஸ்லெஸ்னு பலரையும் கையமர்த்தி குடைச்சல் கொடுக்க சொல்லியிருக்கோம் அதெல்லாம் தேவையேயில்லன்னுட்டார் முதல்வர் டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவந்தால் ஸ்டாலின் தானாகவே பதவி விளக்கிடுவாராமே அச்சா சிம்பிளா அந்த திட்டத்தை கொண்டு வந்துடுவோம்


xyzabc
டிச 10, 2024 12:45

தமிழகத்திற்கு விமோச்சனம் தருவது உங்கள் கைகளில்.


PARTHASARATHI J S
டிச 10, 2024 09:11

தமிழகத்திலே மிகமோசமான முதல்வர் ஸ்டாலின்.எதுவுமே தயாரிக்காத லூலூ மால் கொண்டு வந்தால் தொழில் வளருமா ? வீட்டிற்கு அனுப்புங்கள்.


Anantharaman Srinivasan
டிச 09, 2024 21:01

திமுக வின் எதிர்ப்பை மீறி ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் வந்து விட்டால் ஸ்டாலின் ராஜினாமா செய்து ஒரு செங்கலை எடுத்துக்காட்டிய புத்திசாலி மகனை முதல்வராக்குவார். சட்டசபையில் கருணாநிதிக்கு அடுத்த சீனியர் துரைமுருகன் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்வார்.


sankaranarayanan
டிச 09, 2024 18:28

ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் கொண்டு வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்றால் என்ன அர்த்தமாய்யா சூசமாக சொல்லிவிட்டார் நான் இல்லையென்றால் எனது தமயன் தவப்புதல்வன் அந்த பதவிக்கு தகுந்தவன் என்று சொல்லாமலே சொல்கிறாரோ இவ்வளவு சீக்கிராம் தமயனுக்கு அரசியலில் என்ன முன்னற்றம் வாழ்க வளர்க


ramesh
டிச 09, 2024 21:11

முதலில் வந்து விட்டால் முதல்வர் பதவிபோனாலும் எதிர்ப்பேன் என்பது தான் . இன்று உதயநிதியை முதல்வர் ஆக்கவேண்டும் என்றாலும் அவரால் முடியும் . அதற்கு டங்ஸ்டன் தொழிற்சாலை வைத்து தான் ஆக்க வேண்டு என்பது அல்ல . மேலும் உதயநிதியை முதல்வர் ஆக்க நினைத்தால் இன்று கூட ஆக்க முடியும் .உங்களலால் அல்லது தாங்கள் சார்ந்த கட்சியால் அதை தடுத்து விட முடியுமா .இப்படி வயித்தெரிச்சலில் புலம்பினாள் எதுவும் நடக்காது ஜெலுசில் வாங்கி குடித்து தான் வயித்தெரிச்சலை தணிக்க வேண்டும்


Sathyan
டிச 10, 2024 02:40

ramesh இவரை போன்ற கொத்தடிமைகள் இருப்பதால் தான் ஸ்டாலின் போன்ற அருகதை அற்றவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்கள் , திமுக அடிமைகள் ஒட்டுமொத்தமாக அழிந்தால் தான் தமிழ்நாட்டிற்க்கு நல்லது.


Narasimhan
டிச 09, 2024 18:27

என் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று யாரோ சொன்னார்களே


Subramanian N
டிச 09, 2024 18:19

அதுவரை நாங்களும் பொறுக்க மாட்டோம் , இன்றே முதல்வர் பதைவிலிருந்து விளகவும்


Bhaskaran
டிச 09, 2024 17:28

ஆக உன் பிள்ளை முதல்வர்


Anand
டிச 09, 2024 17:00

இப்போ மட்டும் நீ இருந்து என்ன பயன்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை