உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்னை இல்லம் வீட்டில் உரிமை கோர மாட்டேன்: பிரபு அண்ணன் மனு தாக்கல்

அன்னை இல்லம் வீட்டில் உரிமை கோர மாட்டேன்: பிரபு அண்ணன் மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டின் மீது, எந்த உரிமையும் கோர மாட்டேன்' என, அவரது மூத்த மகன் ராம்குமார் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது.நடிகர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர், 'ஈசன் சினிமா' தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிறுவனம், 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தது. பட தயாரிப்புக்காக, 'தனபாக்கியம் எண்டர்பிரைசஸ்' நிறுவனத்திடம் இருந்து, துஷ்யந்த் 3.75 கோடி ரூபாய் கடன் பெற்றார்.அதை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9.02 கோடி ரூபாய் செலுத்த ஏதுவாக, படத்தின் உரிமைகளை, கடன் வழங்கிய நிறுவனத்திடம் ஒப்படைக்க, கடந்த ஆண்டு மத்தியஸ்தர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என, உயர் நீதிமன்றத்தில் தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீக்கக்கோரி, நடிகர் பிரபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்குமார் சார்பில், 'அன்னை இல்லத்தின் மீது, எனக்கு எந்த உரிமையும் இல்லை. வீட்டை தம்பி பிரபுவுக்கு, தந்தை உயில் எழுதி வைத்துள்ளார்' என, பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் பிரபு மற்றும் வழக்கு தொடர்ந்த நிறுவனம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வாதங்கள் நிறைவு பெறாததால், வரும், 15ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வானமுது
ஏப் 09, 2025 14:17

வாடிக்கை திருடர்கள் ராயப்பேட்டை கடனில் 100வருட கம்பெனி காலிபண்ணிய புண்ணியவாளர்கள்


Venkat.
ஏப் 09, 2025 07:37

சொத்து யாருடையது என்று தெரியாமல் எப்படி ஜப்தி செய்ய உத்திரவு போட்டது உயர் நீதிமன்றம்.மாதம் 3 சதவீத வட்டியை உயர் நீதிமன்றம் அங்கீகரிக்கிறதா?


vijai hindu
ஏப் 09, 2025 09:15

உங்களுக்குத் தேவைன்னா பணம் வாங்குவீங்க பின்னர் இரண்டு பைசா மூணு பைசா வட்டி என்று சொல்லுவீங்க சும்மாவா குடுப்பாங்க


B.B.Muthukumaar
ஏப் 09, 2025 09:17

இப்படி சொத்து விவரம் யாருடையது ஏனத்தெரியாமலே தீர்ப்பு வழங்கும் நீதிபதியை தலைமை நீதிபதிகள் என்ன கேள்வி கேட்பார்கள் நீதியே கேலிக்குள்ளாகும் போது சாமானிய மக்கள் பாடு திண்டாட்டம்தான் பணம் படைத்தவர்களுக்காகத்தான் நீதிமன்றம் செயல்படுகிறதோ என்று தோன்றுகிறது


Venkateswaran Rajaram
ஏப் 09, 2025 06:22

இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை