உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமணர்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட கட்டுக்கதைகள்: எச்.ராஜா ஆவேசம்

பிராமணர்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட கட்டுக்கதைகள்: எச்.ராஜா ஆவேசம்

சென்னை: ''பிராமணர் என்ற கட்டமைப்பை உடைக்காமல் ஹிந்துக்களை மதமாற்றம் செய்ய முடியாது என உணர்ந்த கிறிஸ்தவ மிஷனரிகள், பிராமணர்களுக்கு எதிராக கட்டுக் கதைகளை திரித்துக் கூறினர் என்று பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.உலக பிராமணர் நலச் சங்கத்தின் 11ம் ஆண்டு விழா, சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. இதில், தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aufmr0ds&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முக்கிய பங்கு

'வீடியோ கான்பரன்ஸ்' வழியே விழாவை துவக்கி வைத்து, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், ''இன்று மக்கள், அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளால் திசை திருப்பப்பட்டு உள்ளனர். வரலாறு திரிக்கப்படுகிறது. தேசத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் நம்மிடம் உள்ளது. எனவே, உண்மையான வரலாற்றுப் பிரசாரத்தை, மக்களிடம் இளைஞர்கள் கொண்டு செல்வது அவசியம்,'' என்றார்.பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, வீடியோ கான்பரன்ஸ் வழியே பேசுகையில், ''தமிழகத்தின் கலாசாரத்தை பேணிக் காப்பதில் பிராமணர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இன்றளவும் சனாதனம் இருக்க காரணமானவர்கள் அவர்கள்,'' என்றார்.

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது:

தமிழகத்தில் மட்டும் தான் 150 ஆண்டுகளாக பிராமணர் எதிர்ப்பு இருந்து வருகிறது. இது, வேறு எங்கும் கிடையாது. பிராமணர் என்ற கட்டமைப்பை உடைக்காமல், ஹிந்துக்களை மத மாற்றம் செய்ய முடியாது என்பதை கிறிஸ்துவ மிஷனரிகள் உணர்ந்தன. அதனால், பிராமணர்களுக்கு எதிராக பல கட்டுக்கதைகளை திரித்து கூறினர். கால்டுவெல்லின் இழிவான புத்தியில் இருந்து வந்தது தான், ஆரியம், திராவிடம் என்ற வார்த்தை. இனவாதத்தை அம்பேத்கர் ஏற்கவில்லை. கால்டு வெல், திருநெல்வேலி பகுதியில் நாடார் மக்களை மத மாற்றம் செய்ய முயன்றபோது, அந்த மக்கள் மறுத்துள்ளனர். அதனால், 'நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் இல்லை; வந்தேறிகள்' என, 'திருநெல்வேலி சாணார்கள்' என்ற புத்தகத்தில் கால்டுவெல் எழுதி உள்ளார். அப்போது, 'நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் தான்' என, தில்லைவாழ் அந்தணர்கள், சிதம்பரம் தீட்சிதர் ஆகியோர் நீதிமன்றத்தில் வாதாடினர். இப்படி ஒற்றுமையோடு வாழ்ந்த சமூகத்தில் புதுசு புதுசாக கரடி விடுகின்றனர்.

விமர்சனம்

என்னை சனீஸ்வரன் என விமர்சித்த சேகர்பாபு உள்ளிட்ட தப்பு செய்யும் யாரையும் தண்டிக்காமல் விடமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், திரைப்பட இயக்குநர் மோகன்.ஜி, டாக்டர் ராஜ்குமார், நெல்லை சடகோபன், சேவாலயா முரளிதரன், உடையாளூர் கல்யாணராமன், மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது; மேஜர் மதன்குமாருக்கு இளைஞர் விருது, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கார்த்திக் கோபிநாத்துக்கு சமூக சாதனை விருது; மாது பாலாஜிக்கு சுவை நாடக வல்லுநர் விருது வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

மூர்க்கன்
மார் 28, 2025 11:49

இங்கே நிறைய தம்பிகள் ரொம்ப நல்லவா மாதிரி பேசி இருக்காங்க ?? பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவி மனிதர்கள் என்ன செய்வது??


Kannapiran Arjunan
மார் 25, 2025 02:58

பின்வரும் எழுத்து ஆர்ய சமாஜத்தின் நிறுவனர் "சத்யார்த்த பிரகாஷ்" சுவாமி டைனந்த சரஸ்வதியின் 11வது அத்தியாயத்திலிருந்து பெறப்பட்டது. கஜினி முகமது சோமநாதர் கோயிலை ஆக்கிரமிக்க திட்டமிட்டபோது, ​​தலைமை பூசாரிகள் இந்து மன்னருக்கு அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், கடவுள் கோயிலைப் பாதுகாப்பார் என்றும் அறிவுறுத்தினர். ஐயோ, கஜினி கோயிலைக் கொள்ளையடித்தபோது, ​​பூமியில் எங்கும் இவ்வளவு புதையல் கிடைக்காது என்று அவர் அறிவித்தார் அந்த நேரத்தில் தலைமை பூசாரியும் மற்ற பூசாரியும் கொள்ளையர்களிடம் தங்கள் விசுவாசத்தை மாற்றி, ராஜாவுக்காக பல்லக்கை வழங்கி, அவரை ராஜாதி ராஜா என்று அழைத்தனர் ஆனால் கஜினி ஒரு போர்வீரன், அவர் பூசாரிகளை துரோகிகள் என்று கூறி அவர்களில் 45000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார், கோவிலில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அதுதான் நமது போலி தெய்வீக குருக்களின் வரலாறு


Kannapiran Arjunan
மார் 25, 2025 02:57

விவேகானந்தர்_கூறுகிறார் பிராமணர்களால் நாடு பாழானது " ..... It is the kshatriyas who are the fathers of all that is noble and beautiful in Hinduism. Who wrote the Upanishads? Who was Rama? Who was Krishna ? Who was Buddha? Who were the Thrithankars or the Jains? .......... Whenever the Khastriyas have preached religion , they have given it to everybody and whenever the Brahmins wrote anything, they would deny all right to others " " இந்து மதத்தில் காணப்படும் அனைத்துச் சிறப்புகளுக்கும் பெருமைக்கும் சத்திரியர்களே காரணகர்த்தாக்கள். உபநிஷத்துக்களை எழுதியவர்கள் யார் ? புத்தன் யார் ?சமணர்களின் தீர்த்தங்கரர்கள் யார் ? ..... சத்திரியர்கள் தரும நெறியை எப்போது போதித்தாலும் அவற்றை மக்கள் யாவருக்கும் போதித்தார்கள்.பிராமணர்கள் எந்த ஒன்றைப் பற்றி எப்பொழுது எழுதினாலும் பிறருக்கு எல்லா உரிமைகளையும் மறுத்தார்கள்." Vivekananda ,THE COMPLETE WORKS ,Vol 4, page 359, கல்கத்தா , 1966.


Ray
மார் 29, 2025 07:35

சோம்நாத் கோவில் கொள்ளை பற்றி எடுத்து சொன்னதுபோல ஸ்ரீரங்கன் கோவில் எப்படி யாரால் கட்டப்பட்டது முஸ்லீம் மன்னனிடமிருந்து பாதுகாக்கப் பட்ட வரலாற்றையும் என்றும் சொல்ல வேண்டும் ரெபெரென்ஸ் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்


K.Ramakrishnan
மார் 25, 2025 00:10

இவர் என்ன சாதித்தார்? எதற்காக இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது? சாரணர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாமல் தோற்றவர். பா.ஜ. தலைமையால் ஓரம் கட்டப்பட்டவர். ஓ.... அதனால் தான் வாழ்நாள் சாதனையாளர் விருதா? நாற்காலியில் உட்கார வைத்து வழங்கியபோதே, இவர் ஓய்வு பெற்ற முதுபெரும் அரசியல்வாதி ஆகி விட்டார். சாதித்ததாக விருது பெற்றபிறகு எதற்கு இனி அரசியல்?


Nagarajan S
மார் 24, 2025 19:41

சேகர் பாபு விற்கு சனீஸ்வரனின் சேட்டை தெரியாது போலிருக்கிறது ? அவரை 7 1/2 சனி பிடித்தால் தெரியும்


J.Isaac
மார் 24, 2025 16:37

பிழைக்க வந்த இடத்தில் பண்ணுகிற சேட்டை தாங்க முடியல


Rajathi Rajan
மார் 24, 2025 13:17

தமிழக பா.ஜ., முத்த தலைவர் எச்.ராஜாவுக்கு வாழ்நாள் சோதனையாளர் விருது வழங்கப்பட்டது.


Mettai* Tamil
மார் 24, 2025 14:09

ஆம், ராஜாதி ராஜா அவர்கள் ஊழல் கூட்டத்திற்கு, வாழ்நாள் சோதனையாளர் தான் ...


saravanan
மார் 24, 2025 12:53

தங்கள் மதத்தை வெறி கொண்டு பரப்ப வந்த கிருஸ்தவ மிஷனரிகளுக்கு இந்து சமயத்தின் கட்டுக்கோப்பான அமைப்பும், நெறிமுறைகளையும் கண்டு கண்டிப்பாக மிரட்சியாகவே இருந்திருக்கும் வெள்ளையர்கள் நாட்டை ஆண்ட போதும் அவர்களால் ஆப்பிரிக்க கண்டத்தில் பரப்பியதை போல இந்திய துணை கண்டத்தில் நிகழ்த்த முடியவில்லை. அதற்கு தடையாக இருந்தவற்றுள் மிக முக்கியமானதாக நம் குடும்ப அமைப்பு மற்றும் கலாச்சார ரீதியிலான பிணைப்பு பண்பாட்டு அடிப்படையிலான நம் மதத்தில் விரிசலை உண்டாக்க திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலே இன, நிற மற்றும் குடும்ப அமைப்பின் மீது பிரிவினை மற்றும் அபவாதங்கள். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நான்கு சதவீதமே இருந்த பிராமணர்கள் மற்ற இன மக்களை எவ்வாறு நடத்தினர் போன்ற வரலாற்று உண்மைகளையும் நாம் மூடி மறைக்க முடியாது


Sidharth
மார் 24, 2025 12:15

உண்டியல் திருடுவது சமூக சாதனையா அருமை அருமை


Mettai* Tamil
மார் 24, 2025 12:47

இதை முதலில் நம்ம சேகர் பாபு அமைச்சரிடம் சொல்லுங்கள் ..அவர் இதை சாதனையாக நினைத்து ,புது புது டெக்நாளஜிய யூஸ் பன்றார் ...


Bala
மார் 24, 2025 13:39

திருடு என்றால் திமுக. திமுக என்றால் திருடு


அப்பாவி
மார் 24, 2025 11:20

ஆளாளுக்கு வரலாறைத் திரிச்சா கயிறு புட்டுக்கும். ஏற்கனவே வரலாறு தெரியாம திண்டாடிக்கிட்டிருக்கோம்.


Bala
மார் 24, 2025 13:41

தமிழகத்தில் நிலவி வரும் குழப்பங்களுக்கு காரணம் திராவிட மாடல். வரலாற்றை திரிக்கும் மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை