உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூவத்துார் ரகசியத்தை வெளியிடுவேன்

கூவத்துார் ரகசியத்தை வெளியிடுவேன்

அ.தி.மு.க.,வை யாரும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வைத்திருந்தனர். அதை மக்க வைத்து விட்டார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. மகாபலிபுரத்தை அடுத்த கூவத்துாரில் நடந்த கூட்டத்தின் வாயிலாக, அவர் எப்படி முதல்வராக ஆக்கப்பட்டார் என்பதை நேரில் இருந்து பார்த்தவன், நான். அதை இப்போது வெளியிடுவது அரசியல் நாகரிகம் அல்ல. தொடர்ந்தும், பழனிசாமி பச்சையாக பொய் பேசுவாரானால், கூவத்துார் ரகசியங்களை வெளியிடுவேன். செங்கோட்டையன், கட்சியை ஒருங்கிணைக்க வலியுறுத்தியதற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்கிறார் பழனிசாமி. ஒருங்கிணைக்கச் சொல்வது ஒரு குற்றமா? முத்துராமலிங்க தேவருக்கு, 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என, 2016ல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் வலியுறுத்தினோம். அதை ஏற்காத பழனிசாமி, தற்போது, தேர்தலுக்காக அதே கருத்தை இப்போது சொல்கிறார். பழனிசாமி ஆடுவது கபட நாடகம். செங்கோட்டையனை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியதால், கொங்கு பகுதி மக்கள் பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர். - கருணாஸ், தலைவர், முக்குலத்தோர் புலிப்படை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை