உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனி அரசாங்கம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; ஐகோர்ட் அதிருப்தி

தனி அரசாங்கம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; ஐகோர்ட் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'தமிழகத்தில் மாநில அரசுக்கு இணையாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தனி அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின், அந்த வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.மேல்முறையீடு இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்தார்.வைரமுத்து தரப்பில் வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி, ''முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி, எழுத்தாளர் மறைமலை இலக்குவனாருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மாநில அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது,'' என்றார்.இதை கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:இது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் செயல். எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது என்பது, ஒரு உணர்வுபூர்வமான விஷயம். இது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தெரியாது.தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மாநில அரசுக்கு இணையாக தனி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இது, துரதிருஷ்டவசமானது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அதிகார தொனியிலேயே செயல்படுவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும். இவ்வாறு நீதிபதி கூறினார்.அரசை நடத்துவது முதல்வர்' கவிஞர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அரசாங்கத்தை நடத்தவில்லை; ஸ்டாலின் தான் தமிழக அரசை நடத்தி வருகிறார்,'' என, விளக்கம் அளித்தார். 'இந்த விளக்கம் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க போவதில்லை' என்று கூறிய நீதிபதி, கவிஞர் வைரமுத்து மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், அண்ணா நகர் மற்றும் செனாய் நகரில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி, எழுத்தாளர் மறைமலை இலக்குவனார் ஆகியோருக்கு, 2022ம் ஆண்டில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின், இருவருக்கான வீடு ஒதுக்கீடும், கடந்த ஜனவரியில் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, இருவரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இருவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மனுவுக்கு திலகவதி, மறைமலை இலக்குவனார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்., 8ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Gajageswari
ஆக 10, 2025 08:20

நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை, அதனால் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். ஏன் இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்


Gajageswari
ஆக 10, 2025 08:18

நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை, அதனால் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். ஏன் இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்


சண்முகம்
ஆக 09, 2025 19:14

வைரமுத்து அரசு வீடு பெற போட்ட வழக்கு வீடில்லா ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல். இது ஒரு ஈனச்செயல்


GMM
ஆக 09, 2025 14:20

முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்த போது சசிகலா நடராஜன் என்பவரை PRO என்ற புது பதவி கொடுத்து உருவாக்கினார்? ஒரு பதவிக்கு பணி விதிகள் கட்டாயம். தலைமை இல்லாத செயலர் ஒப்பு கொண்டு இருக்க வேண்டும்.? அதன் பின் ஏராள துணை பதவிகள். இவை அனைத்தும் ஊழலை உச்ச கட்டம் ஆக்கி விட்டன. பணியவில்லை என்றால் மக்கள் தொடர்பு, வரவேற்பு செயலர். IFS அதிகாரியை முயல் பிடிக்கும் வேலை கூட செய்ய சொல்வர். நீதிபதி ஒரு அரசு ஊழியரை விசாரிக்கும் முன், கவர்னர் ஒப்புதல் பெற வேண்டும். அரசியல் சாசன அமைப்பில் கடைசி அதிகாரம் கொண்டது நீதிமன்றம்? முதன்மை அதிகாரம் CAG .


ஆரூர் ரங்
ஆக 09, 2025 13:51

மகள்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே நல்லக்கண்ணு அரசு வீடு கேட்டுப் பெற்றதை ஆட்சேபித்தேன். பாடலுக்கு பல லட்சம் வாங்கும் சினிமாக் கவிஞன் வீடு கேட்டு வழக்குப் போட்டது இன்னும் மட்டம். ஏழைகளின் வரிப்பணம் வீணாகிறது.


Kulandai kannan
ஆக 09, 2025 13:30

ஒதுக்கீடு ரத்து சரியான நடவடிக்கை தானே.


Kasimani Baskaran
ஆக 09, 2025 13:20

அரசாங்கம் நடத்த வேண்டியவர்கள் ஐ ஏ எஸ் அதிகாரிகளின் தலைமையில் அரசு அதிகாரிகள். அவர்களை சிறப்பாக செயல்பட வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் வேலை செய்ய வேண்டும். அதாவது ஆலோசனை வழங்கவேண்டும். ஆனால் ஆலோசனை வழங்காதவர்கள் தங்களின் கட்சியில் கொள்கைகளை அரசின் கொள்கைகளாக வைத்து ஆட்சி செய்ய முனைகிறார்கள்.


ஆரூர் ரங்
ஆக 09, 2025 09:25

வைரமுத்து, திலகவதி ஐபிஎஸ் வீடில்லாத ஏழைகள் என்றால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்க வேண்டும்.


பேசும் தமிழன்
ஆக 09, 2025 09:07

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது.... நீதிமன்றங்கள் தனி அரசாங்கம் நடத்தலாமா ???


Thravisham
ஆக 09, 2025 11:23

இதுதான் திருட்டு த்ரவிஷன்கள் மாடல்


தியாகு
ஆக 09, 2025 09:04

தனி அரசாங்கம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐகோர்ட் அதிருப்தி. - முதல்ல அதை உச்ச நீதிமன்றத்துக்கு சொல்லுங்க. ஊழல் செஞ்சவன், கொலை செஞ்சவன், அரசியல் ரௌடிகள் இவர்களுக்கெல்லாம் தண்டனை ஏதும் கிடைப்பதில்லை, ஜாமீனும் ஈஸியா கிடைக்குது.


சமீபத்திய செய்தி