உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.சி.எப்., ரொம்ப நல்லா இருக்கு; தமிழில் பேசி அசத்தினார் அஸ்வினி வைஷ்ணவ்!

ஐ.சி.எப்., ரொம்ப நல்லா இருக்கு; தமிழில் பேசி அசத்தினார் அஸ்வினி வைஷ்ணவ்!

சென்னை: சென்னை வந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஐ.சி.எப்., நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு,'' என பேசி அசத்தினார்.சென்னை ஐ.எசி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 'அம்ரித் பாரத்' ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சென்னைக்கு வருவதை விரும்புகிறேன். பாம்பன் புதிய ரயில் பாலம் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிய பாம்பன் தூக்கு பாலத்தின், வடிவமைப்பு தனித்துவமானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jhc9wyu2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனைத்து தரப்பு மக்களுக்குமான சிறப்பான ரயில் சேவையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு, இந்திய தயாரிப்பு பொருட்களை உலக நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பு வசதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 10,000 ரயில் எஞ்சின்களில் 'கவாச்' தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. 'அம்ரித் பாரத்' ரயில் பெட்டிகளில், பயணிகளின் வசதிக்காக அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,''ஐ.சி.எப்., நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு,'' என்று கூறி, சென்னை ஐ.சி.எப்., ஆலையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களை பாராட்டினார். அவர், தமிழில் நன்றி, ரொம்ப நன்றி என கூறி உரையை முடித்தார்.

இவர் தான் அஷ்வினி வைஷ்ணவ்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு தகவல் தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றவர். கான்பூர் ஐ.ஐ.டி.,யில் முதுகலை பொறியியல் பட்டமும், பென்சில்வேனியா வார்டன் பல்கலை கல்லுாரியில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றவர். ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற அவர், ஒடிசா மாநிலத்தில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப்பணிக்கு வந்த அவர், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது தனிச்செயலாளராக பணியாற்றினார். பின்னர் அரசு பணியில் இருந்து தானாக முன் வந்து ஓய்வு பெற்றவர், ஒடிசாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2021 முதல் மோடி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RAMESH
ஜன 10, 2025 18:27

ஓவியா, இதையும் உரக்க சொல்லுங்க, திராவிடனுக்கு நல்லா ஸ்டிக்கர் ஒட்ட தெரியும் .


Vaduvooraan
ஜன 10, 2025 18:06

பிரச்சினை என்னன்னா ரயில் பெட்டிகளை நிறுத்தும் ஷெட்கள் ஸ்டேஷனை தாண்டி ஆளரவமில்லாத இடங்களில் இருப்பதோடு அந்தப் பகுதியில் போதுமான வெளிச்சம், காவல் காபந்து ஊழியர்கள் இருப்பதில்லை தவிர அத்தனை பெட்டிகளை பூட்டியே வைத்தாலும் பூட்டை உடைத்து, லைட், சுவிட்ச், ஃபேன், வாஷ்பேசின் என்று எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்து கொண்டு போகிற திருட்டுக் கூட்டங்கள் மலிந்து கிடப்பது மிகப் பெரிய சவால். நம்ம நாடு எது மாதிரியுமில்லாமல் ஒரு புது மாதிரிங்க


அப்பாவி
ஜன 10, 2025 17:04

அடுத்த தடவை திருக்குறள், புறநானூறு பொளந்து கட்டுவார் பாருங்க.


duruvasar
ஜன 10, 2025 14:51

அமைச்சர் வைஷ்ணவிற்கு தமிழ் நன்றாக தெரியும். பேச அவ்வளவாக வராதே தவிர பேசுவதை புரிந்து கொள்பவர்.


Nadarajan Gurumurthy
ஜன 10, 2025 14:14

Very correct appreciation encouraging statement by Honbl.Minister.Good going.


குமார் மதுரை
ஜன 10, 2025 13:48

திராவிடன் கிழிச்சான். அடுத்தவன் பிள்ளைக்கு பேர் வக்காதீங்கடா. இது மத்திய அரசு நிறுவனம்.


திகழ்ஓவியன்
ஜன 10, 2025 13:32

இவர் தான் அஷ்வினி வைஷ்ணவ் :: தெரியுமே இவர் கோயில் கருவறையில் இருக்க ஜனாதிபதி முர்மு கருவறை வெளியே நினறாரே , தெரியும் இவர் யார் என்று.


Sidharth
ஜன 10, 2025 13:28

நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் நடக்காது ராசா


Tamil Inban
ஜன 10, 2025 12:57

தமிழ்நாட்டில் இருப்பதால்


திகழ்ஓவியன்
ஜன 10, 2025 12:54

ஆமாம் திராவிடர்கள் உருவாக்கியது நன்னா தான் இருக்கும் , நீ கால வச்சிட்டியா சீக்கிரம் அதானி கு கொடுத்துடுவீங்க


vijay
ஜன 10, 2025 13:21

யார் திராவிடன்? நான் தமிழன். மண்டைக்குள்ள ஏதாச்சும் இருக்கா?


veera
ஜன 10, 2025 13:44

அப்போ தமிழன் கிடையாதா......யாருப்பா அந்த திராவிடம்...... ஏது அவளோ அறிவு.


Indian
ஜன 10, 2025 14:06

Because of the central government administration. Not because of Dravidian stock


N Sasikumar Yadhav
ஜன 10, 2025 14:21

திராவிடன்கள் என்கிற பெயரில் இருக்கும் ஓங்கோல் கொள்ளை கும்பல் உருவாக்கியதில்லை ஐசிஎப் தமிழர்கள் உருவாக்கியது . திராவிட கழிவுகளுக்கு விஞ்ஞானரீதியாக கொள்ளையடிக்க மட்டுமே தெரியும்.


N Sasikumar Yadhav
ஜன 10, 2025 14:21

திராவிடன்கள் என்கிற பெயரில் இருக்கும் ஓங்கோல் கொள்ளை கும்பல் உருவாக்கியதில்லை ஐசிஎப் தமிழர்கள் உருவாக்கியது. திராவிட கழிவுகளுக்கு விஞ்ஞானரீதியாக கொள்ளையடிக்க மட்டுமே தெரியும் .


முக்கிய வீடியோ