வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வருமான அடிப்படியில் மட்டுமே இலவசங்கள் வழங்கினால் ,ரேஷன் பொருட்கள் கடத்தல்களை அடியோடு ஒழிக்கலாம் .மக்கள் வரிப்பணம் பல கோடி மிச்சமாகும்
ரேஷன் கடையில் இதர மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அதில் MRP விலை அளிக்கப்பட்டு கடைக்காரர் இஷ்டத்துக்கு விலை சொல்லுகிறார். நேற்று பழைய பல்லாவரம் ரேஷன் கடையில் கொத்துக்கடலை 500 கிராம் வாங்கினேன். 70 ருபாய் சொன்னார் . பாக்கெட்டில் 40 ருபாய் என்று அச்சு இடப்பட்டதை அளித்து உள்ளனர். கேட்டால் சரியான பதில் இல்லை. வேறு ஒரு பாக்கெட்டை காட்டினார். அதிலும் MRP ஸ்டிக்கர் அழிந்து இருந்தது. எனக்கு பொருள் வேண்டாம் என்று ரெட்டர்ன் செய்து காசை கேட்டு வாங்கிட்டுவந்தேன். விலைவாசி தெரியாத ஆள் என்றால் ஏமாற்றிவிடுவார்கள். கொத்துக்கடை வெளிமார்க்கெட்டிலேயே கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவர் 500 கிராம் 70 ரூபாய்க்கு விற்கிறார். என்ன நியாயம் இது.
ரேஷன் கடையில் மளிகை சாமான்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற காடட்டாயாமில்லை.
Other than Giving MinmWageJOBS Strictly 01PerFamily, ABOLISH 90%NotDue VoteBribingFreebies& 95%UselessOverFattened GovtPosts. RECOVER from All Ruling AllianceParty Rulers& StoogeOfficials
அடுத்தவன் வீட்டு நெய்யே என் அண்ணன் பொண்டாட்டி கையே என்பதுபோல எல்லோருக்கும் ரேஷன், எல்லோருக்கும் தீபாவளி gift. இது எல்லாம் தேவையே இல்லை. ரேஷன் கார்டு உபயோகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக காரில் வந்து? ரேஷன் வாங்கி செல்வதை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். அவர்கள் வாங்காத பொருட்களை வாங்கியதாக கணக்கு காட்டி சுவாக நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பெரிய exercise . இதை படி படியாக மட்டுமே அமல் செய்ய முடியும். அடுத்தது சமீபத்தில் நடை பெற்ற தேர்தலுக்கு sir செய்த data வைத்து கொண்டு ரேஷன் கார்டு members மாற்றி அமைக்க வேண்டும். அப்போது ஓரளவு குறையும். வாசகர் கூறியது போல ஆதார் இணைப்பு, பான் இணைப்பு, வருமான வரி இணைப்பு செய்து உண்மையிலேயே தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் கொடுக்க வேண்டும். புதிய அரசு சீர்திருத்த நடவடிக்கை எடுக்குமா??
அரசு ஊழியர்களுக்கு இலவசமாக அரிசி, சலுகை விலையில் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் பொங்கல் பரிசுகள் ஆகியன இல்லாமல் செய்தால் ஆண்டுக்கு ஆயிரக் கணக்கான கோடிகள் மிச்சமாகும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்துக்கும் அரசு சம்பளம் வழங்குவதோடு பொங்கல் போனசும் வழங்கும் நிலையில் வாக்கு வங்கிக்காக இலவசமாக அரிசி, சலுகை விலையில் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் பொங்கல் பரிசுகள் ஆகியன வழங்கப்படுகின்றன.அதன் பிறகும் அவர்கள் நேர்மையாக கடமைகளை செய்யாமல் லஞ்சத்தின் அடிப்படையில் சேவைகள் தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் செய்து அரசுக்கு அவப்பெயரும் பொருளாதார இழப்பும் ஏற்படுத்துகின்றனர்.
ரேஷன் கார்டு ஆதார் எண்ணை இணைத்து முதலில் போலிகளை நீக்க வேண்டும். மேலும் வருமான வரி எண்ணுடன் இணைத்தால் மேலும் தகவல் கிடைக்கும். டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல் உணவு பொருட்கள் எடை போட்டு பாக்கெட்டில் அடைத்து கொடுக்க வேண்டும். எண்ணெய் என்றால் டின் அல்லது பாட்டில். ரேஷன் கடையில் ஆவின், அம்மா குடிநீர், காதி பொருட்கள்.. போன்றவை விற்பனை செய்ய வேண்டும்..இதில் சற்று வருவாய் கிடைக்கும். ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் கூடாது. அரசு நிலத்தில் வடிவமைத்து தமிழக முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.