உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லாம் ஸ்லீப்பர் செல்கள்; நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம் என்கிறார் சீமான்

எல்லாம் ஸ்லீப்பர் செல்கள்; நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம் என்கிறார் சீமான்

சென்னை: ''கட்சியில் இருந்து விலகுவோர் எல்லோரும் ஸ்லீப்பர் செல்கள்; வேறு கட்சியில் சேர்ந்து எங்களுக்கு உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்,'' என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். இது தொடர்பாக, சீமான் அளித்த பேட்டி: ரஜினியை நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று இருந்தேன். அன்பான மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிவராது. அரசியலில் அவதூறுகள் எல்லாவற்றையும் தாங்க வேண்டும். களத்தில் நேர்மையாக இருப்பது நிறைய கஷ்டம். நேர்மையாக வாழ்வது உள்ளங்கையில் நெருப்பு துண்டை வைத்திருப்பதுக்கு சமமானது. நடிகர் ரஜினியுடன் நிறைய பேசினேன்; அனைத்தையும் பகிர முடியாது. ரஜினியுடன் திரையுலகம், அரசியல் என பல விஷயங்களை பேசினேன். நல்ல தலைமை என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. தற்போதுள்ள தலைவர்கள் உருவானவர்கள் அல்ல; உருவாக்கப் பட்டவர்கள். உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு அடித்தட்டு மக்களின் கவலை, பசி, கண்ணீர் எதுவும் தெரியாது. மக்களின் கஷ்டங்களை உணர்ந்த தலைவர்கள் காமராஜர், அண்ணாதுரை போன்றவர்கள் தற்போதைய அரசியல் களத்தில் இல்லை. இன்று வாக்குகள் வாங்கப்படுகிறது. சிறப்பாக ஆட்சி நடத்துவதாக ஆட்சியாளர்களே சொல்லி கொண்டு இருக்கிறார்கள். நல்ல ஆட்சி நடத்தினால் ஓட்டுக்கு காசு கொடுக்கும் தேவை இருக்காது. இங்கு சேவை அரசியல் இல்லை. செய்தி அரசியல் தான் இருக்கிறது. தேர்தல் அரசியல் தான் செய்யப்படுகிறது. மக்கள் அரசியல் செய்யப்படுவதில்லை. இதற்கு மாற்றத்தை கொண்டு வருவதற்கு தான், சிஸ்டம் ராங் என்று ரஜினி ஆங்கிலத்தில் சொன்னார்; அதை தான் நான் தமிழில் அமைப்பு தவறாக இருக்கிறது மாற்ற வேண்டும் என்று சொன்னேன். இது குறித்து தான், ரஜினியுடன் நிறைய பேசினேன். அரசியல் என்பது வாழ்வியல்; அரசியல் மீது ரஜினிக்கு ஆர்வம் உண்டு ஆனால், அவருக்கு அரசியல் சரிவராது.விமர்சனத்தை கடக்க இயலாதவர்கள், விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை கடக்க இயலாதவர்கள் அற்ப வெற்றியை கூட அடைய முடியாது. சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று பொருள். சங் பரிவாரிலிருந்து சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையான சங்கி யார் தெரியுமா? எங்களை சங்கி என்று சொல்பவர்கள் தான் உண்மையான சங்கி. பிரதமரை காலையில் மகனும், மாலையில் அப்பாவும் சந்திக்கிறார்கள். எதற்கு சந்திக்கிறோம் என்று சொல்ல மறுக்கிறீர்கள். நான் ரஜினியை சந்தித்து பேசியது என்ன என்று சொல்கிறேன். கள்ள உறவு இல்லை. நல்ல உறவே இருக்கிறது. பிரதமரை அப்பாவும், மகனும் சந்தித்து பேசி வருகின்றனர். நீங்க எங்களை சங்கி சொல்கிறீர்கள். இது என்ன கொடுமை. தி.மு.க.,வை எதிர்த்தாலே சங்கி என்றால் இதை எப்படி சொல்வது, பெருமையாக சங்கி என்பதை நாங்கள் ஏற்க தான் வேண்டும். சங்கி என்றால் நண்பன் என்றும் பொருள் உள்ளது. இவ்வாறு சீமான் கூறினார்.

ஸ்லீப்பர் செல்

செங்கல்பட்டு, மதுராந்தகத்தில், கட்சியிலிருந்து பல தொண்டர்கள் ஏன் விலகுகிறார்கள் என்ற கேள்விக்கு, சீமான் அளித்த பதில்: நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம். நாங்கள் தான் மரியாதையாக போய், எல்லாரையும் அனுப்பி வைக்கிறோம். வெவ்வேறு இயக்கங்களில் போய் சேர்ந்து, எங்களுக்காக உளவு பார்க்க அனுப்பி வைக்கிறோம். எங்களுடைய ஸ்லீப்பர் செல்களாக அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Sivasankaran R
நவ 23, 2024 19:00

உங்கள் கட்சியே "ஸ்லீப்பர் செல் கட்சியா "......இது தேவையா ?இதற்கு எதற்கு மானங்கெட்ட அரசியல் ?


Sivasankaran R
நவ 23, 2024 18:58

அரசியல் என்றாலே தமிழக அரசியல்வாதிகள் எல்லோருமே "ஸ்லீப்பர் செல்கள் தான் . புது கதை விடறதா பேசாதே.


K.n. Dhasarathan
நவ 23, 2024 15:07

பாவம் சீமான் ஏதாவது சொல்லி சமாளிக்கணுமே, வாயி ஓவராக விடக்கூடாது, விட்டால் இப்படித்தான், இனி என்ன செய்யபோகிறாரோ ? ரஜனியுடன் இமயமலை போனாலும் போகலாம்.


haris jayaraj
நவ 22, 2024 21:18

என்ன ஒரு நல்ல எண்ணம். நம்மோடு இருக்கும் வரை நல்லா இருக்க கூடாது. அடுத்த கட்சிக்கு போனாலும் நல்லா இருக்க கூடாது.


தாமரை மலர்கிறது
நவ 22, 2024 20:26

ஒட்டுமொத்த கட்சியையும் அப்படியே ஸ்லீப்பர் செல்களாக ஜோசெப் விஜய் கட்சிக்கு அனுப்பி விட்டீர்கள் என்று நாங்க நம்பிட்டோம்.


Yes God
நவ 22, 2024 19:55

இவ்வளவு தில்லா பேசற சீமான் பக்கம் தில்லு முல்லு கட்சியினர் சவுண்டு வுடுவதில்லை.


Rajasekar Jayaraman
நவ 22, 2024 17:47

உன்மையை எவனும் பொதுவெளியில் சொல்லமாட்டான்


Rajarajan
நவ 22, 2024 17:26

ரெண்டு பேரும் என்ன பேசி இருப்பாங்க ?? ஊருல நல்ல மழையானு இவரு கேட்டுருப்பாரு. ஆமா, நான் இப்போதான் சாப்பிட்டேன்னு அவரு சொல்லி இருப்பாரு.


SIVA
நவ 22, 2024 16:57

பார்த்து ஸ்லீப்பர் செல்ஸ் எல்லாம் தூங்கிறபோறாங்க ......


Sivasankaran R
நவ 23, 2024 19:02

சீமானின் கட்சி "ஸ்லீப்பர் செல் கட்சி "


Sivagiri
நவ 22, 2024 14:28

ஐயோ பாவம் சூப்பர் ஸ்டார் , இந்த அளவுக்கு சொத்தை ஆயிட்டாரே . . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை