உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிக்கு அடைக்கலம் கொடுப்போர் சொத்துகளை முடக்க ஐ.ஜி., உத்தரவு

ரவுடிக்கு அடைக்கலம் கொடுப்போர் சொத்துகளை முடக்க ஐ.ஜி., உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'ரவுடிகளுக்கு அடைக்கலம் தருவோரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டு உள்ளனர்.இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: குற்றங்களின் தன்மைகளுக்கு ஏற்ப, 'ஏ பிளஸ், ஏ, பி, சி' வகை பட்டியலில், 27,666 ரவுடிகள் இருந்தனர். இவர்களில் இறந்து போனவர்கள், வயது முதிர்வு காரணமாக தீவிர செயல்பாட்டில் இல்லாதவர்கள், ரவுடித்தனத்தில் இருந்து விலகியவர்கள் குறித்து ஆய்வு செய்ததில், தற்போது, 26,400க்கும் குறைவான ரவுடிகளே இருப்பது தெரியவந்து உள்ளது.ரவுடிகளின் பெயரில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன; சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர்; எத்தனை வங்கி கணக்குகள் உள்ளன என்பது குறித்த ஆய்வும் நடக்கிறது. ரவுடிகள் மட்டுமல்ல, அவர்களின் ரத்த உறவுகள், துாரத்து உறவினர்கள், நெருங்கிய கூட்டாளி பெயர்களில் உள்ள சொத்துக்களையும் முடக்கி வருகிறோம். ரவுடிகளின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அவர்களுக்கு அடைக்கலம் தருபவர்களின் சொத்துக்களையும், அவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்க வேண்டும் என, மாவட்ட, எஸ்.பி.,க்களுக்கு, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.ரவுடிகள் பெரும்பாலும், தாய், மனைவி, காதலி பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதும், அவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருவதும் தெரியவருகிறது. அவற்றையும் முடக்க உள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Padmasridharan
மே 30, 2025 15:43

ரவுடிகளிடம் பணம் வாங்கி வளர்த்துவிட்ட காவலர்களும் அடைக்கலம் கொடுத்த மாதிரிதான். தற்பொழுதும் காவலர்கள் பணம் வாங்கி பஞ்சாயத்து பண்ணுகிறேன் என்று குற்றங்களை மறைத்துவிடும்போது புதிய குற்றவாளிகளளை உருவாக்குகிறார்கள். உண்மையாக வேலை செய்பவர்கள் சிலரே


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 30, 2025 15:42

அப்படின்னா தமிழகம் முழுவதும் தீ மு க வினர் சொத்துக்கல முடக்கணும்... பொலிஸ் ஆபீசர்.....


Samy Chinnathambi
மே 30, 2025 13:20

இந்த போலீஸ்காரருக்கு அறிவு இருக்கா? இப்படி உத்தரவு போட்டா முதல்வர் கோவிச்சுக்க மாட்டாரா? ஏன்னா முதல்ல முடக்கப்படுவது அறிவாலயமா தான் இருக்கும்.. மொத்த திமுக அமைச்சர்களின் சொத்துக்களையும் முடக்க வேண்டி இருக்கும்..


Vijay D Ratnam
மே 30, 2025 12:28

திமுகவை முடக்க பாக்குறாய்ங்களோ


Ramesh Sargam
மே 30, 2025 12:25

அப்ப பல முக்கிய கட்சிகளின் தலைவர்கள், குறிப்பாக ஆட்சியில் உள்ள திமுகவின் தலைவர்கள் சொத்துக்கள் முடக்கப்படுமா?


Kanns
மே 30, 2025 11:39

V.Good


Karthik
மே 30, 2025 11:30

இதிலிருந்து., சீருடைய அணிந்த ரவுடிகளும் திருடர்களும் மேலிடத்தை சரியா "கவனிக்கவில்லை" னு புரியுது. அதான் வட்டியும் முதலுமா வசூல் பண்ணிட நினைத்து.. "ரவுடிக்கு அடைக்கலம் கொடுப்போர் சொத்துகளை முடக்க உத்தரவு" என மேலிடம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருக்கும். இனிமே பாருங்க எல்லாரும் "கரெக்டா" வந்துடுவாங்க.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 30, 2025 09:04

ரவுடிகளின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அவர்களுக்கு அடைக்கலம் தருபவர்களின் சொத்துக்களையும், அவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்க, தமிழ் நாட்டு போலீஸ்காரங்களுக்கு அவ்வளவு சொத்தா அன்றாட மாமூல் மூலமா சேர்ந்திருச்சு?


Barakat Ali
மே 30, 2025 08:25

கழகக் கண்மணிகளுக்கு விதிவிலக்கு உண்டுதானே ????


அப்பாவி
மே 30, 2025 08:18

அவிங்களுக்கு தேர்தலில் நிக்க சீட் குடுக்கலாம். தப்பே இல்லை குமாரு.


புதிய வீடியோ