உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை

சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.சென்னை ஐ.ஐ.டி.,யில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 25ம் தேதி இரவு திறந்தவெளி அரங்கம் பின்புறம் நடந்து சென்றார். அப்போது 'மும்பை சாட்' என்ற கடையில் வேலை பார்த்து வரும் ரவுஷன் குமார், 22, என்பவர், கையில் மரக்கட்டையை வைத்துக் கொண்டு, மாணவியின் கையை பிடித்து இழுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.சாமர்த்தியாக, அவரிடம் இருந்து தப்பிய மாணவி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள் இருவரை அழைத்து வந்துள்ளார். அப்போது வாலிபர் மறைந்துக் கொண்டார். நேற்று மதியம் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் மாணவி புகார் அளித்தார். கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.பின் மாணவியிடமும், சில்மிஷத்தில் ஈடுபட்ட பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரவுஷன் குமாரிடமும், காவலாளி நிர்வாக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ரவுஷன் குமாரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடி மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிட்டுக்குருவி
ஜூன் 28, 2025 17:18

பெண்கள் பாதுகாப்புக்காக எலக்ட்ரானிக் அலாரம் கருவி சாவி சைனில் கோர்த்து வைத்துக்கொள்ளும்படி எலக்ட்ரானிக் கடைகளில் கிடைக்கும் .IIT யே கூட உருவாக்கலாம் சாவி சனில் இருந்து வெளியே உருவினாள் அலாரம் சங்கு ஊதுவதுபோல் ஒலிக்கும் ..அவசர காலங்களில் உதவும் .


சிட்டுக்குருவி
ஜூன் 28, 2025 17:03

பெண்களுக்கு சுய பாதுகாப்புக்கு கடந்தகாலங்களில் கராத்தே /takewando போன்ற வைகளை ஆரம்பித்தார்கள் .அது இப்போது தொடர்வதாக தெரியவில்லை .அதை எல்லா பள்ளி பெண்குழந்தைகளுக்குm நடுநிலை பள்ளிகளில் கட்டாயமாக்கப்படவேண்டும் .6-8 ஆம் வகுப்புகளில் 3 வருடங்கள் செய்தால் போதுமே .தன்னம்ம்பிக்கை வளரும் .குடும்பங்களில் பிற்காலங்களில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறன்வளரும் .விளையாட்டு திறமையும் வளரும் .இதை விளையாட்டு துறையில் கீழ் அமல் படுத்தலாம்


Rajarajan
ஜூன் 28, 2025 16:20

தமிழ்நாட்டில் இதுபோன்ற தவறு செய்தால், எப்படியும் வெளியே வந்துவிடலாம், என்ற நம்பிக்கையை கொடுத்தது யார் ?? இது தவறு, இதற்க்கு தக்க தண்டனை உடனே உண்டு, என பெண்களிடத்தில் அரசு நம்பிக்கை ஏற்படுத்தாதது ஏன் ?? செயல்பாட்டில் என்ன தயக்கம் ?? யார் இதற்கு பின்னால் உறுதுணை ?


Balaji Radhakrishnan
ஜூன் 28, 2025 14:05

சபாஷ் பெண்ணே, இவரை போல் மற்ற எல்லா பெண்களும் இருக்க வேண்டு்ம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 28, 2025 13:46

அண்ணா பல்கலைக்கு அடுத்ததாக சென்னை ஐ.ஐ.டி.கூட அப்படித்தான்னா ?? ..... நிகழ்வு அதிர்ச்சியை அளிக்கிறது ....


MP.K
ஜூன் 28, 2025 13:01

பெண்கள் தனியாக செல்வதில் இன்னும் சிக்கல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.


Yes your honor
ஜூன் 28, 2025 13:43

பாஜக ஆட்சி வரும் வரை இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யும். ஏனெனில், குற்றவாளிகள் பாதிப்பேர் ஆளும்கட்சியினரே. பாஜக ஆட்சிக்கு யோகி ஜியே சாட்சி.