உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோதமாக மண் கடத்தல்: கையகப்படுத்தவுள்ள நிலங்களில் தான் இந்த களேபரம்

சட்டவிரோதமாக மண் கடத்தல்: கையகப்படுத்தவுள்ள நிலங்களில் தான் இந்த களேபரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சூலுார்: சூலுார் விமானப்படைத் தளத்தை சுற்றியுள்ள இடங்களில், சட்டவிரோதமாக செம்மண், கிராவல் மண் எடுக்கப்பட்டு, லாரிகளில் கடத்தப்படுகிறது. பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், படைத் தளத்தின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.சூலுார் அடுத்த காங்கயம் பாளையத்தில் விமானப்படைத் தளம் உள்ளது. சுற்றிலும் மதில் சுவர் அமைக்கப்பட்டு, கேமராக்கள் வாயிலாக, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த விமானப் படைத்தளத்தை விரிவாக்கம் செய்ய மேலும், கலங்கல், அப்பநாயக்கன்பட்டி, பருவாய் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கலங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் மற்றும் கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

20 அடி பள்ளம்

இரவு நேரங்களில் மண் கடத்தும் கும்பல், பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை அள்ளி லாரிகளில் கடத்துகின்றனர். கலங்கல் முதல் பருவாய் வரை பல இடங்களில், மண் எடுத்ததால், 20 அடி ஆழத்துக்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களால், விமானப்படைத்தள பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: படைத்தள விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த உள்ளதாக, பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். ஆனால், எடுப்பதாக தெரியவில்லை. இதனால், இடத்தின் உரிமையாளர்களே மண் எடுக்க துணையாக உள்ளதாக தெரிகிறது. ஒரு சிலர் மண் எடுக்க அனுமதிக்கவில்லை என, கூறப்படுகிறது. மொத்தத்தில் படைத் தளத்தை சுற்றி பல ஆயிரம் லோடு செம்மண் எடுத்து கடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.கனிவள கொள்ளையை தடுக்க வட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கலெக்டர் உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இதனால், சூலுார் வட்டாரத்தில் கனிம வள கொள்ளை அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜூன் 27, 2025 15:06

தவறான புரிதல். தி.மு.க வினர் அங்கு தனிப்பட்ட முறையில் அகழ்வாராய்ச்சி செய்கிறார்கள் எனநினைக்கிறேன். யார்கண்டது?.. அடுத்த கீழடியாக இருக்கலாம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 27, 2025 09:27

தேசபக்தி மிக்க, தேசத்தின் பாதுகாப்பு பற்றி மிகவும் பொறுப்புடன் நடக்கும் தமிழர்கள். ரொம்ப சந்தோஷம். இதுபோன்ற எண்ணம் உள்ள மக்கள் வாழும் இடம் விரைவில் அழியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா என்ன?


lana
ஜூன் 27, 2025 08:06

எங்களுக்கு கட்டிங் குடுக்காம இருந்தால் மட்டுமே இந்த விடியல் நடவடிக்கை எடுக்கும். கட்டிங் குடுத்து விட்டால் விமான நிலையத்தில் உள்ளே கூட மண் அள்ள அனுமதி உண்டு. காரணம் இது ஈர வெங்காயம் மண். இதன் மூலம் அவரது புகழ் பரவும்


Thravisham
ஜூன் 27, 2025 08:03

த்ரவிஷ் ஆட்சியில் எல்லாமே நாசம்.


S Sivakumar
ஜூன் 27, 2025 07:32

இந்த செய்தியை வெளியிட்டுள்ளது வரவேற்க வேண்டும். இதை பார்த்து அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்ற தொடர் செய்தியும் போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி


Svs Yaadum oore
ஜூன் 27, 2025 07:29

கோவையில் வரலாறு காணாத செம்மண் கொள்ளை.. இது பற்றி சென்னை உயர் நீதி மன்றம் பல உத்தரவு கொடுத்தாலும் மதிப்பது கிடையாது.. செங்கல்சூளைகளில் இருந்து வெளிவரும் புகையால் புற்றுநோய், காசநோய் என்று மக்களுக்கு ஏராளமான நோய்த் தொற்று.. அளவுக்கதிகமாக மண் எடுப்பதால், நீர்நிலைகளுக்குத் தண்ணீரும் செல்வதில்லை. சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் மலைகள் காணாமல் போய் உள்ளன. இதை கேட்க நாதியில்லை. இது தான் விடியல் திராவிட சமூக நீதி ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை