உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏழு மாவட்டங்களில் மீண்டும் தலை துாக்கும் கள்ளச்சாராயம்

ஏழு மாவட்டங்களில் மீண்டும் தலை துாக்கும் கள்ளச்சாராயம்

சென்னை: சேலம், தர்மபுரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலை துாக்குவதால், ஊறல்கள் அழிப்பு உள்ளிட்ட பணிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடந்த, 2001ல், கடலுார் மாவட்டம் பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்து, 53 பேர் இறந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பறிபோனது. அதே ஆண்டு, சென்னை செங்குன்றம், கோட்டூர் உள்ளிட்ட இடங்களில், கள்ளச்சாராயம் குடித்து, 30 பேர் இறந்தனர். அதன்பிறகு, தமிழகத்தில் கள்ளச் சாராயத்திற்கு எதிராக, போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. எனினும், 2023ல், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் குடித்து, 21 பேர் இறந்தனர்.கடந்த ஆண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் மற்றும் சின்ன சேலம் அடுத்த மாதவச்சேரி பகுதியில், கள்ளச்சாராயம் குடித்து, 69 பேர் உயிரிழந்தனர். எத்தனால் காரணமாக, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர். ஆனால், மாநிலத்தின் பல பகுதிகளில், ஊறல் போட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் தொழில், அமோகமாக நடக்கிறது.சமீபத்தில் போலீசார் நடத்திய ஆய்வில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில், கள்ளச்சாராய விற்பனை, மீண்டும் தலைதுாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சாராய ஊறல் அழிப்பு மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்யும் பணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கள்ளச்சாராய ஒழிப்பு பணியில், சட்டம், ஒழுங்கு மற்றும் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இணைந்து செயல்பட, திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபடும் போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது குறித்து, தகவல் கிடைத்தால், உடனேயே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும். கள்ளச்சாராய ஒழிப்பு பணியில், வருவாய் துறை, வனத்துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 11:17

பத்து பத்து லட்சமா அரசு அள்ளிக்கொடுத்தாலும் என் ஊட்டு பணமோ, கச்சி பணமோவா செலவாகுது ?? எல்லாம் சனங்க வரிப்பணம்தானே ?? கிம்ச்சை மன்னர் அலட்சியம் .....


sivakumar Thappali Krishnamoorthy
பிப் 28, 2025 11:01

தலைவரே உங்க பையிலே காய் வைக்கிறாங்க ..இரும்பு கரம் கொண்டு உடனே உங்க காவல் படையை ஏவல் பணியெயி தொடங்கவும் . அல்லது ரூபாய் 15 லட்சம் ஓவ்வ் ஒரு கள்ளச்சாராய சவுக்கு ரெடி யாக வைத்து இருக்கவும்.


angbu ganesh
பிப் 28, 2025 10:59

போலீசார் இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க அவங்களுக்கு புள்ள குட்டி இருக்கேய


தகடூரான்
பிப் 28, 2025 10:07

கடலூர் மாதிரி கஞ்சா விற்பனையை அதிகரிக்க ஆவன செய்யணும். கள்ளச் சாராயத்தை விட விலை மலிவாம்.


C G MAGESH
பிப் 28, 2025 09:58

காய்ச்சுவதே கழகம் தானே


naranam
பிப் 28, 2025 09:17

வலுவான திராவிட மாடல் தந்த விடியல் ஆட்சி


கமால்
பிப் 28, 2025 09:11

கண்ணா பத்து லட்சம் ரூபாய் வாங்க ஆசையா? ஓட்டு எனக்கு! பாக்கெட்டு உனக்கு! என்ஜாய் வித்தவுட் ரெஸ்பான்ஸிபிலிடி. இது திராவிட அரசு.


அம்பி ஐயர்
பிப் 28, 2025 08:29

குடிமகன்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் அருந்தி மரணமடைவோருக்கு திராவிட மாடல் அரசின் சார்பில் பத்து இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர் குடிமகன்களே....


S.V.Srinivasan
பிப் 28, 2025 08:27

விடியலோ விடியல் ஆட்சி. இந்த மாதிரி பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல், தேவையில்லாத மும்மொழி, பாராளுமன்ற தொகுதி குறைப்பு விஷயங்களில் நேரத்தை செலவிடும் முக்யமந்திரி . தமிழ் நாடு விளங்காது.


ravi subramanian
பிப் 28, 2025 07:35

Let them die. At least their families will get 10 Lakh from the taxpayers' money. Courtesy DMK government.


புதிய வீடியோ