உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத பணப் பரிமாற்றம்;இயக்குனர் அமீர் மீது குற்றப்பத்திரிகை

சட்டவிரோத பணப் பரிமாற்றம்;இயக்குனர் அமீர் மீது குற்றப்பத்திரிகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 37; தி.மு.க., முன்னாள் நிர்வாகி, திரைப்பட தயாரிப்பாளர். போதை பொருள் கடத்தல் மன்னனான இவர் மீது, போதைப்பொருள் கடத்தல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில், ஜாபர் சாதிக், அவரது சகோதரர், மனைவி அமீனா பானு, திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மீதும் மற்றும் எட்டு நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை சென்னை சி.பி.ஐ., கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தில் அமீரும் பலனடைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gx56kahq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, ஜாபர் சாதிக் மீது, 2010ம் ஆண்டு தொடரப்பட்ட திருட்டு வி.சி.டி., விற்ற வழக்கு, பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம், மாஜிஸ்திரேட் ராஜேஸ் ராஜு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், குற்றம் சாட்டப்பட்டவர் மீது போதிய ஆதாரங்கள் நிருபிக்கப்படாததால், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

karupanasamy
நவ 15, 2024 14:15

இந்த திருட்டு பையன் மீது நடவடிக்கை எடுக்கணும்


Murthy
நவ 15, 2024 14:02

அமீர் பலனடைந்துள்ளார் என்றால் உதயநிதியும் பலன் அடைந்து உள்ளதாகத்தானே அர்த்தம் . ...அப்படி இருக்கும்போது ஒருவர் மீது மட்டும் எதற்கு வழக்கு இன்னொருவர் அதிகாரத்தில் இருப்பதால் கண்டுகொள்ளப்படுவது இல்லையோ??


Barakat Ali
நவ 15, 2024 16:31

அதிகாரம் ஒரு பொருட்டே அல்ல ..... பாஜக குற்றமிழைத்த தனது அரசியல் எதிரிகளை மிரட்டி பல வழிகளில் நிதியைப் பெறுகிறது ....... மேற்குவங்கத்தில் இதுவரை பாஜக அதிகாரத்தில் இருந்ததில்லை .... ஆனால் ஒரு கிராமத்தில் இருக்கும் கட்சி அலுவலகம் கூட திரிணாமூல் காங்கிரசின் அலுவலகத்தைவிட வசதியானதாகவும், பெரிதாகவும் இருக்கிறது ..... சட்டத்தின் தலையீட்டால் எதிரிகள் தப்பிவிட்டால் இடதுசாரி ஆதரவு நீதிபதிகள் தப்பிக்க வைத்தனர் என்று கூப்பாடு போடுவார்கள் ....


Anbuselvan
நவ 15, 2024 12:33

கெட கெடன்னு கேஸ் போட்டு தீர்ப்பு உச்ச எதிமன்ற மறு ஆய்வு வரை ஒரு ஆறு மாதத்திற்குள் முடித்து குற்றம் செய்தவர்கள் யாரேனும் இருந்தால் உச்ச பட்சம் தண்டனை அளித்தால் இப்படி பட்ட குற்றங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது. பாரபக்ஷம் பார்க்காமல் விரைவில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டால் மக்களுக்கும் நீதி துறையின் மீது ஒரு நம்பிக்கை வரும்.


Barakat Ali
நவ 15, 2024 11:19

குடும்பக் கட்சியைக் கூட்டணிக்கு மசிய வைக்க பாஜகவுக்கு கிடைத்த தங்கச் சுரங்கம்தான் ....


Barakat Ali
நவ 15, 2024 11:18

அப்படி இப்படி துக்ளக்காரை நெருங்குவதற்குள் 2029 மக்களவைத் தேர்தலே வந்துவிடும் .... ஆனால் பாஜகவுக்கு ஒரே ஒரு ஆதாயம் பல தேர்தல்களில் நம்பிக்கையுடன், தைரியமாகச் செலவழிக்கப் பணம் கிடைக்கும் .....


Yaro Oruvan
நவ 15, 2024 11:08

திருட்டு திராவிஷ பரம்பரை அடிமை உப்பிஸ் இதுக்கும் வந்து முட்டு கொடுப்பானுவ.. வாங்குற எரநூறு ஓவாய்க்கு மண்டி போட்டு......


Sivasankaran Kannan
நவ 15, 2024 10:10

திருட்டு திராவிட மாடலின் வழி தோன்றல்கள்.. அமீர் வாய் கிழிய பேசும் போதே - திராவிட மாலின் போர்வையில் இருக்கும் ஒரு கரப்பான் என்று தெரிந்தது.. இந்த நாதாரிகள் பல தலைமுறையை அழிக்கும் போதை மருந்து தொழிலில் கொள்ளை அடித்து நல்ல வசதியாக வாழ்ந்து, மத சார்பின்மை பற்றி ஊருக்கு உபதேசம் செய்யும் இழி பிறவிகள்..


கண்ணன்,மேலூர்
நவ 15, 2024 10:31

இந்த செய்தியை தமிழகத்திலுள்ள எந்த தொலைக்காட்சி ஊடமும் (RSB) வெளியிடவில்லை. ஏதோ ஒரு பத்திரிகையில் ஐந்தாம் பக்கத்தின் கடைசி கீழே மூலையில் ஏதோ பெட்டி செய்தி போல சின்னதாக போட்டிருந்தார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை